டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!!

நாடு முழுவதும் உள்ள டாடா டீலர்ளில் புதிய டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

நாடு முழுவதும் உள்ள டாடா டீலர்ளில் புதிய டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!!

அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய காருக்கு, ரூ.11,000 முன்பணத்துடன் டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. டாடா நெக்ஸான் ஹைப்பர்டிரைவ் செல்ஃப் -ஷிஃப்ட் கியர்ஸ் என்ற பெயரில் இந்த மாடல் குறிப்பிடப்படுகிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!!

டாடா நெக்ஸான் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் என இரண்டு மாடல்களிலுமே இந்த ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக அமையும்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!!

டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் முக்கிய அம்சமாக மல்டி டிரைவ் ஆப்ஷனுடன் வருகிறது. ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான ஆப்ஷன்களில் விருப்பம்போல் தேர்வு செய்து ஓட்டலாம்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!!

டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி மாடல் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கிறது. பின்னர், விலை குறைவான வேரியண்ட்டுகளிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!!

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலின் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் வேரியண்ட்டில் சரிவான மலைச்சாலைகளில் கார் பின்னோக்கி நகர்வதை தடுக்கும் ஸ்மார்ட் ஹில் அசிஸ்ட், ஆக்சிலரேட்டர் கொடுக்காமலேயே கார் மெதுவாக முன்னோக்கி செல்வதற்கான க்ராவ்ல் ஃபங்ஷன் இடம்பெற்றுள்ளது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!!

மிக குறைவான வேகத்தில் செல்லும்போது எஞ்சின் ஆஃப் ஆவதை தவிர்க்கும் தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது. இந்த வசதிகள் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு தேவையான அத்தியாவதியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களாக இருக்கும்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!!

தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இருக்காது. அதேநேரத்தில், ஏஎம்டி கியர்பாக்ஸ் அடையாளத்திற்கான பட்டை பொருத்தப்பட்டு இருக்கும். மேலும், டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி மாடல் எத்னா ஆரஞ்ச் என்ற புதிய ஆரஞ்ச் வண்ணத்தில் வர இருக்கிறது. இது இரட்டை வண்ணக் கலவை கொண்ட பெயிண்ட்டிங்கில் வருகிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!!

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி மாடல் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 24, 2018, 10:36 [IST]
English summary
Tata Motors has officially started accepting bookings for the upcoming Nexon AMT. With the launch of the Tata Nexon AMT to be held sometime in May 2018, booking for the SUV can now be made across all Tata Dealerships for an amount of Rs 11,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+