டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு எப்போது? - புதிய தகவல்!!

Written By:

கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த கார் விற்பனைக்கு வருவது குறித்து வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்!!

இந்த நிலையில், இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக எக்கானமிக் டைம்ஸ் பிராண்டு ஈக்குவிட்டி தளம் தெரிவித்துள்ளது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் வாயிலாக டாடா நெக்ஸான் காருக்கு விசேஷ பரிசு திட்டங்களை டாடா மோட்டார்ஸ் அறிவித்தது. கடந்த 7ந் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் 27ந் தேதி வரை நடக்க இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்!!

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டும்போது, டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு எப்போது? - புதிய தகவல்!!

மேலும், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆரஞ்ச் வண்ணத்தையும், இந்த நிகழ்வின்போது டாடா நெக்ஸான் காரில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு எப்போது? - புதிய தகவல்!!

டாடா நெக்ஸான் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சின் என இரு மாடல்களிலுமே ஏஎம்டி கியர்பாக்ஸ் விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 108.5 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு எப்போது? - புதிய தகவல்!!

டீசல் எஞ்சின் 108.5 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல், டீசல் மாடல்களில் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் விற்பனைக்கு வர இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு எப்போது? - புதிய தகவல்!!

டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் நடுத்தர வகை எக்ஸ்டி வேரியண்ட்டிலும், அதிக வசதிகள் கொண்ட எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வரும். மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளில் இருக்கும் அதே சிறப்பம்சங்கள் ஏஎம்டி வேரியண்ட்டுகளிலும் இடம்பெற்றிருக்கும்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு எப்போது? - புதிய தகவல்!!

டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டாடா நெக்ஸான் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்கள் ரூ.6.15 லட்சம் முதல் ரூ.9.89 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு எப்போது? - புதிய தகவல்!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் எஸ்யூவி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. இதுவரை 25,000 டாடா நெக்ஸான் கார்கள் ரஞ்சன்கவுனில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன.

மேலும்... #டாடா #tata
English summary
Tata Motors unveiled the Nexon AMT variant at the 2018 Auto Expo. Now, ET Brand Equity reports that the Tata Nexon AMT will be launched in the country by the end of April or May 2018. The Nexon has been one of the best-selling product for Tata Motors in India.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark