டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகள் அறிமுகமாகிறது!!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விலை குறைவான வேரியண்ட்டுகளிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. XMA மற்றும் XZA ஆகிய இரண்டு வேரியண்ட்டுகள் விரைவில் விற்பனைக்கு வருகின்றது. தற்போது விற்ப

By Saravana Rajan

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விலை குறைவான வேரியண்ட்டுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகள் அறிமுகமாகிறது!!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதிகபட்ச வசதிகள் கொண்ட XZA+ என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகள் அறிமுகமாகிறது!!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பெட்ரோல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் ரூ.9.41 லட்சத்திலும், டீசல் ஏஎம்டி மாடல் ரூ.10.30 லட்சத்திலும் விற்பனைக்கு வந்தன. குறைவான விலை வேரியண்ட்டுகள் இல்லாததால், வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் பிரச்னை எழும் வாய்ப்பு இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகள் அறிமுகமாகிறது!!

மேலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் டீசல் ஏஎம்டி மாடலும் இன்று மிக சவாலான விலையில் வந்துள்ளதால், டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகளும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகள் அறிமுகமாகிறது!!

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் XMA மற்றும் XZA ஆகிய இரண்டு வேரியண்ட்டுகள் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது விற்பனையில் உள்ள நெக்ஸான் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளில் இருக்கும் அதே வசதிகள் இந்த ஏஎம்டி வேரியண்ட்டுகளிலும் இடம்பெற்றிருக்கும்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகள் அறிமுகமாகிறது!!

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலின் XMA வேரியண்ட்டில் ரிமோட் லாக்கிங், பவர் விண்டோஸ், 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற இருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோ்ல பட்டன்களும் இருக்கும்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகள் அறிமுகமாகிறது!!

ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்டுகள், பவர் டெயில்கேட், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ரியர் வியூ மிரர்கள், வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் பாரக்கிங் சென்சார்கள் மற்றும் நிகழ்நேர எரிபொருள் அளவு மானி ஆகிய வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகள் அறிமுகமாகிறது!!

டாடா நெக்ஸான் XZA ஏஎம்டி வேரியண்ட்டில் ஹில் ஸ்டார்ட் அசிசஸ்ட், க்ரீப் வசதிகள் கூடுதலாக இடம்பெற்றிருக்கும். எனினும், கையில் கட்டிக் கொள்ளும் வசதியுடன் கூடிய சாவி மற்றும் பாசிவ் கீ லெஸ் என்ட்ரி வசதிகள் இருக்காது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகள் அறிமுகமாகிறது!!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த இரண்டு புதிய வேரியண்ட்டுகளும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 108.5 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகள் அறிமுகமாகிறது!!

டீசல் மாடலில் 108.5 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 1.5 லிட்டர் எஞ்சினும் உள்ளன. 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இரண்டு மாடல்களிலும் இணைக்கப்பட்டு இருக்கும்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகள் அறிமுகமாகிறது!!

டாடா நெக்ஸான் காரின் XZA+ மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டைவிட ஏஎம்டி XZA+ வேரியண்ட் ரூ.70,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்தது. இதேபோன்று, XMA மற்றும் XZA வேரியண்ட்டுகளும் இதே அளவு விலை வித்தியாசத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட்டுகள் அறிமுகமாகிறது!!

டாடா நெக்ஸான் ஏஎம்டி வேரியண்ட்டுகள் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற நேரடி போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

Source: IAB

Article Published On: Wednesday, May 9, 2018, 14:43 [IST]
English summary
Tata Motors is set to introduce the AMT gearbox on the mid-spec variants of its Nexon offering. According to IAB, Tata will introduce the AMT on the mid-spec XZ and the XM variants soon. This will further help reduce the prices of the Tata Nexon AMT.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+