பேட்டரியில் இயங்கும் நெக்ஸான் எஸ்யூவியை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் டாடா டியாகோ காரின் மின்சார மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனிடையே, பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார மாடலும் உருவாக்கப்பட்டு வருவதாக

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடல் வருகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பேட்டரியில் இயங்கும் நெக்ஸான் எஸ்யூவியை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்?

டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய இரு இந்திய கார் நிறுவனங்களும் பேட்டரியில் இயங்கும் மின்சார கார் மாடல்களை தயாரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. மஹிந்திரா நிறுவனத்தின் வெரிட்டோ மின்சார காரும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் மின்சார மாடலும் பல்க் ஆர்டர்கள் அடிப்படையில், வாடகை கார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.

பேட்டரியில் இயங்கும் நெக்ஸான் எஸ்யூவியை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்?

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் டாடா டியாகோ காரின் மின்சார மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனிடையே, பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார மாடலும் உருவாக்கப்பட்டு வருவதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

பேட்டரியில் இயங்கும் நெக்ஸான் எஸ்யூவியை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்?

டாடா நெக்ஸான் மின்சார மாடலானது 2020ம் ஆண்டு சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசைனில் மாற்றங்கள் இருக்காது. அதேநேரத்தில், சக்திவாய்ந்த மின்மோட்டார் மற்றும் திறன் மிக்க பேட்டரியுடன் டாடா நெக்ஸான் மின்சார மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரியில் இயங்கும் நெக்ஸான் எஸ்யூவியை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்?

டாடா டிகோர் காரில் 2160Ah Threee Phase இன்டக்ஷன் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 130 கிமீ தூரம் பயணிக்க முடியும்.. 100 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கிறது. இந்தநிலையில், டாடா நெக்ஸான் காரின் பேட்டரி, மின் மோட்டார் அதிக திறன் வாய்ந்ததாக இருக்கும்.

Recommended Video

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்
பேட்டரியில் இயங்கும் நெக்ஸான் எஸ்யூவியை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்?

இது நிச்சயம் தனிநபர் மார்க்கெட்டை குறிவைத்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.11 லட்சம் முதல் ரூ.14 லட்சம் இடையிலான விலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரியில் இயங்கும் நெக்ஸான் எஸ்யூவியை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்?

இதனிடையே, மஹிந்திரா நிறுவனமும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மின்சார மாடலை உருவாக்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பேட்டரியில் இயங்கும் நெக்ஸான் எஸ்யூவியை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்?

வெளிநாட்டு நிறுவனங்கள் மின்சார கார் மார்க்கெட்டில் களமிறங்குவதற்கு முன்னதாக, இந்திய நிறுவனங்கள் இந்த மார்க்கெட்டில் வலுவான அடித்தளத்தை போட்டுவிட எத்தனித்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் புதிய வரவுகளால் மின்சார எஸ்யூவி கார்கள் மார்க்கெட் வெகு சீக்கிரத்தில் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
Tata Motors is said to be working on an all-electric version of their Nexon model for the Indian market. The Tata Nexon electric, according to Gaadiwaadi is expected to be launched in India, sometime in 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X