உங்களது டாடா நெக்ஸான் காருக்கும் சன்ரூஃப் பொருத்த முடியும்!
டாடா நெக்ஸான் காருக்கு வழங்கப்படும் ஏரோ ஆக்டிவ் ஸ்டைல் கிட்டில் சன்ரூஃப் பொருத்திக் கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த ஏரோ ஆக்டிவ் ஸ்டைல் கிட்டில் ரியர் வியூ மிரர்கள், க்ரில் அமைப
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா நெக்ஸான் கார் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், டாடா நெக்ஸான் காரின் அலங்கரித்துக் கொள்வதற்கும், கூடுதல் வசதிகளை பெறுவதற்கும் பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது.

அதன்படி, டாடா நெக்ஸான் காருக்கு வழங்கப்படும் ஏரோ ஆக்டிவ் ஸ்டைல் கிட்டில் சன்ரூஃப் பொருத்திக் கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த ஏரோ ஆக்டிவ் ஸ்டைல் கிட்டில் ரியர் வியூ மிரர்கள், க்ரில் அமைப்பு மற்றும் கதவுகளுக்கு க்ரோம் அலங்கார பாகங்கள் பொருத்தித் தரப்படுகிறது.

அதுதவிர்த்து, சன்ரூஃப் பொருத்தும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. சன்ரூஃப் பொருத்தித் தருவதற்கு ரூ.16,053 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூரையில் தகடு கத்தரித்து எடுக்கப்பட்டு சன்ரூஃப் பொருத்தித் தரப்படுகிறது. இது மேனுவலாக திறந்து மூடும் வசதி கொண்டது.

சில மணிநேரத்தில் சன்ரூஃப் பொருத்தி தந்துவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்கள் மூலமாக சன்ரூஃப் பொருத்தித் தரப்படுவதால் வாரண்டியில் பாதிப்பு இல்லை.

டாடா நெக்ஸான் காரின் சன்ரூஃப் மூலமாக கேபினுக்கு கூடுதலாக காற்று பெறும் வசதியை பெறுவதுடன், காரின் தோற்றத்தையும் கூடுதல் பிரிமியமாக மாற்றிக் காட்டுகிறது.

எனினும், கூரை தகடு கத்தரித்து சன்ரூஃப் பொருத்தப்படுவதால், காரின் கட்டமைப்பு வலு சற்று குறையும். இது விபத்துக்களின்போது காரின் கட்டுமான உறுதியில் சற்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

டாடா நெக்ஸான் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு செய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையில் ரூ.7.22 லட்சம் முதல் ரூ.12.81 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

மாருதி பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய போட்டியாளர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்கிக் கொள்வதற்கு இதுபோன்ற கூடுதல் ஆக்சஸெரீகள் அடங்கிய கிட்டை டாடா நெக்ஸான் காருக்கு வழங்கப்படுகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications