டாடா நெக்ஸான் காரின் மும்பை இந்தியன்ஸ் எடிசன்... அசத்தலாக மாற்றிய டீலர்!

ஐபிஎல் கிரிக்கெட் ஜுரம் இந்தியர்களை ஆட்டிவித்து வருகிறது. இந்த சூழலில், டாடா நெக்ஸான் காரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சின்னம் மற்றும் ஸ்டிக்கர்களை ஒட்டி அசத்தலாக மாற்றி இருக்கிறது மும்பையை சேர்ந்த டா

By Saravana Rajan

ஐபிஎல் கிரிக்கெட் ஜுரம் இந்தியர்களை ஆட்டிவித்து வருகிறது. இந்த சூழலில், டாடா நெக்ஸான் காரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சின்னம் மற்றும் ஸ்டிக்கர்களை ஒட்டி அசத்தலாக மாற்றி இருக்கிறது மும்பையை சேர்ந்த டாடா டீலர்.

ஐபிஎல் ஜுரம்... மும்பை இந்தியன்ஸ் அவதாரத்தில் டாடா நெக்ஸான்!!

டாடா நெக்ஸான் இசட்எக்ஸ் ப்ளஸ் என்ற விலை உயர்ந்த டாப் வேரியண்ட் காரில் இந்த வேலைப்பாடுகளை செய்து கவர்ச்சிகரமாக மாற்றி உள்ளனர். டாடா நெக்ஸான் லிக்யூடு சில்வர் என்ற வண்ணக் காரில் இந்த அழகு கூட்டும் பணிகளை மிக நேர்த்தியாக செய்து பார்ப்போரை மெர்சலாக்கி இருக்கின்றனர்.

ஐபிஎல் ஜுரம்... மும்பை இந்தியன்ஸ் அவதாரத்தில் டாடா நெக்ஸான்!!

மும்பை அணியினர் பயன்படுத்தும் சின்னம் மற்றும் சீருடை வண்ணங்களின் அடிப்படையில் மஞ்சள் மற்றும் நீல வண்ண ஸ்டிக்கர்களை பயன்படுத்தி மெருகேற்றி இருக்கின்றனர்.

ஐபிஎல் ஜுரம்... மும்பை இந்தியன்ஸ் அவதாரத்தில் டாடா நெக்ஸான்!!

முன்புறத்தில் பனி விளக்குகள் அறைக்கு கீழேயும், ஏர்டேம் கீழே பம்பரிலும் மஞ்சள் வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் கொடுத்துள்ளனர்.

ஐபிஎல் ஜுரம்... மும்பை இந்தியன்ஸ் அவதாரத்தில் டாடா நெக்ஸான்!!

பானட்டில் கருப்பு வண்ண கோடுகள் ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று, க்ரில் அமைப்பில் இரண்டு வரிசையில் மட்டும் வெள்ளை வண்ணம் தீட்டி இருக்கின்றனர். வெளிப்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு ரியர் வியூ மிரர்கள் கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணம் தீட்டப்பட்டு தனித்துவம் பெற்றிருக்கின்றன.

ஐபிஎல் ஜுரம்... மும்பை இந்தியன்ஸ் அவதாரத்தில் டாடா நெக்ஸான்!!

கூரை, ஸ்பாய்லர் மற்றும் ஜன்னல்களுக்கு கீழே நீல வண்ணத்திலான மேட் ஃபினிஷ் எனப்படும் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புற வீல் ஆர்ச்சில்ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் சின்னம் ஒட்டப்பட்டு இருக்கிறது.

ஐபிஎல் ஜுரம்... மும்பை இந்தியன்ஸ் அவதாரத்தில் டாடா நெக்ஸான்!!

அலாய் சக்கரங்களில் மஞ்சள் வண்ணம் கொடுக்கப்பட்டு இருப்பதும் கவர்ச்சியை அதிகரிப்பதாக இருக்கிறது. உட்புறத்தில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்கள் பற்றிய தகவல் இல்லை.

ஐபிஎல் ஜுரம்... மும்பை இந்தியன்ஸ் அவதாரத்தில் டாடா நெக்ஸான்!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஐபிஎல் நிறுவனத்தின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒரு பிராண்டாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து ஐபிஎல் அணித் தலவைர்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஜுரம்... மும்பை இந்தியன்ஸ் அவதாரத்தில் டாடா நெக்ஸான்!!

காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் டாடா நெக்ஸான் சிறந்த தேர்வாக இருக்கிறது. விற்பனையிலும் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த சூழலில், இதுபோன்ற கூடுதல் கவர்ச்சிகரமான அலங்கார விஷயங்கள், ஐபிஎல் ரசிகர்களாக உள்ள வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

ஐபிஎல் ஜுரம்... மும்பை இந்தியன்ஸ் அவதாரத்தில் டாடா நெக்ஸான்!!

இந்த அலங்கார பணிகள் டீலர் அளவிலேயே செய்து தரப்படுகிறது. நிறுவனத்தின் சார்பில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. சற்றே கூடுதல் கட்டணத்தில் இந்த அலங்காரத்தை டீலர் செய்து தருவதாகவும் தெரிய வந்துள்ளது.

Via - WheelBHP

Article Published On: Monday, April 23, 2018, 13:15 [IST]
English summary
The Tata Nexon IPL Edition has been spotted in certain company dealerships in Mumbai. This Nexon Limited Edition is based on its top-end XZ+ variant and is a complete dealership initiative in Mumbai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+