கோவை ஜெயம்- டாடா கூட்டணியில் உருவாகும் பவர்ஃபுல் நெக்ஸான் எஸ்யூவி!!
டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஜேடிபி மாடலை உருவாக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. டாடா நெக்ஸான் எஸ்யூவியில் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் அதிக சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் பெட்ரோல் எஞ்சின் ட்ய
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சூப்பர் ஹிட் மாடல்களில் டியாகோவுக்கு அடுத்த இடத்தை நெக்ஸான் பிடித்துள்ளது. இந்த சூழலில், டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கான சந்தையை வலுப்படுத்தும் விதத்தில், சில மாதங்களுக்கு முன் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதனைத்தொடர்ந்து, தற்போது நெக்ஸான் எஸ்யூவியின் பவர்ஃபுல் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை கோவையை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம்தாான் செய்து கொடுத்து வருகிறது. இந்த நிலையில், புதிதாக அறிமுகமாகும் டாடா கார்களின் பவர்ஃபுல் மாடல்களை உருவாக்குவதற்காக டாடா மோட்டார்ஸ்- ஜெயம் ஆட்டோமோட்டிவ் இடையே JTP என்ற புதிய பிராண்டு உருவாக்கப்பட்டது. இந்த புதிய பிராண்டில் டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் பவர்ஃபுல் மாடல்கள் உருவாக்கப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து, தற்போது நெக்ஸான் எஸ்யூவியின் ஜேடிபி மாடலை உருவாக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. நெக்ஸான் எஸ்யூவியின் சக்திவாய்ந்த இந்த புதிய மாடலில் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் என்னென்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் அதிக சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும். நெக்ஸான் ஜேடிபி மாடலானது புதிய பம்பர், க்ரில் அமைப்பு, பெரிய அளவுடைய சக்கரங்கள் மற்றும் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவற்றுடன் வரும்.

அத்துடன், நெக்ஸான் ஜேடிபி மாடலானது பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வர இருக்கிறது. தற்போது நெக்ஸான் எஸ்யூவியில் இருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

ஆனால், நெக்ஸான் ஜேடிபி மாடலில் இதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிக சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வரும். எனினும், இது பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு அம்சத்துடன் வர இருப்பதால், 2020ம் ஆண்டு வாக்கில்தான் விற்பனைக்கு வரும் என்பது சற்றே ஏமாற்றம் தரும் விஷயம்.

சக்திவாய்ந்த எஞ்சினை சமாளிக்கும் விதத்தில், இதன் சஸ்பென்ஷன் அதிக கடினத்தன்மை கொண்டதாக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். அதேபோன்று, ஸ்டீயரிங் சிஸ்டத்திலும் சில மாறுதல்களுடன் நெக்ஸான் ஜேடிபி வர இருக்கிறது.

சாதாரண மாடலிலிருந்து எளிதில் வேறுபடுத்தும் விதத்தில், டாடா நெக்ஸான் ஜேடிபி மாடலின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சிவப்பு வண்ணத்திலான அலங்கார பட்டைகள் மற்றும் வர்ண பூச்சுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதேநேரத்தில், டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலின் அடிப்படையில், இந்த ஜேடிபி மாடல் உருவாக்கப்படும் என்ற தகவலால், தாமதம் ஏற்படும் என்பது சற்றே ஏமாற்றம் தரும் விஷயம்தான். எனினும், மிக கவர்ச்சிகரமாகவும், சக்திவாய்ந்த மாடலாகவும் வருவதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டாடா நிறுவனம் சமீபத்தில் டாடா டியாகோ என்ஆர்ஜி என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியது. அந்த காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்


Click it and Unblock the Notifications