ரூ.7.14 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..

ரூ.7.14 லட்சம் என்ற ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி கார், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லான்ச் செய்யப்பட்டது. இந்த கார் லான்ச் செய்யப்பட்டு தற்போது ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, புதிய நெக்ஸான் க்ரேஸ் (Kraz) மாடலை, டாடா மோட்டார்ஸ் இன்று (செப்.5) லான்ச் செய்தது.

ரூ.7.14 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..

லிமிடெட் எடிசன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாடா நெக்ஸான் க்ரேஸ் கார், க்ரேஸ் மற்றும் க்ரேஸ் ப்ளஸ் (Kraz+) என 2 வேரியண்ட்களில் கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுமே வழங்கப்பட்டுள்ளன.

ரூ.7.14 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..

டாடா நெக்ஸான் க்ரேஸ் காரின் பேஸ் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 7.14 லட்ச ரூபாய். அதே நேரத்தில் டாப் எண்ட் டீசல் வேரியண்ட்டின் விலை 8.64 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரிவான விலை பட்டியலை நீங்கள் கீழே காணலாம். (இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்).

Variant Petrol Diesel
Nexon KRAZ Rs 7,14,951 Rs 8,07,566
Nexon KRAZ+ Rs 7,76,595 Rs 8,64,058
ரூ.7.14 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..

இந்த புதிய லிமிடெட் எடிசன் மாடலின் விற்பனை இன்று முதலே தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு விஸ்வல் அப்டேட்களையும் (Visual Updates), காஸ்மெடிக் மாற்றங்களையும் (Cosmetic Changes) புதிய நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் பெற்றுள்ளது.

ரூ.7.14 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..

ஆனால் மெக்கானிக்கல் அம்சங்கள் என வந்து விட்டால், தற்போதைய நெக்ஸான் காரை போன்றே, புதிய க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடலும் உள்ளது. அதாவது அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினில் இருந்துதான் இந்த புதிய லிமிடெட் எடிசன் மாடலும் சக்தியை பெறுகிறது.

ரூ.7.14 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..

இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக, 108 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. அதே நேரத்தில் டீசல் இன்ஜினானது அதிகபட்சமாக, 108 பிஎச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்தது.

ரூ.7.14 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..

இந்த 2 இன்ஜின்களும், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன. வழக்கமான நெக்ஸான் காரின் எக்ஸ்டி வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டுதான், இந்த புதிய க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ.7.14 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..

ஆனால் புதிய க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடலானது, டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் அலாய்வீல் ஆகிய அம்சங்களை பெற தவறி விட்டது. எனினும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ், ஹர்மன் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ரூ.7.14 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..

இந்திய மார்க்கெட்டில் அதிக அளவில் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் டாடா நெக்ஸானும் ஒன்று. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டே, புதிய நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடலை, டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.7.14 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்..

வழக்கமான நெக்ஸான் காரை காட்டிலும், புதிய நெக்ஸான் க்ரேஸ் லிமிடெட் எடிசன் மாடலானது, மிகவும் கம்பீரமாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறது. பண்டிகை காலத்திற்கு முன்பாக லான்ச் செய்யப்பட்டுள்ளதால், இதன் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 5, 2018, 19:59 [IST]
English summary
Tata Nexon Kraz Limited Edition Launched. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+