டாடா மோட்டார்ஸை தலைநிமிர செய்த நெக்ஸான் எஸ்யூவியின் புதிய சாதனை!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தலை நிமிரச் செய்திருக்கும் மாடல்களில் ஒன்றாக புதிய நெக்ஸான் எஸ்யூவி மாறி இருக்கிறது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு நெருங்கும் நிலையில், டாடா நெக்ஸான் உற்பத்தி 50,0

By Saravana Rajan

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் உற்பத்தி புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றான டாடா நெக்ஸான் தற்போது கடந்திருக்கும் விற்பனை எண்ணிக்கை, அதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா மோட்டார்ஸை தலைநிமிர செய்த நெக்ஸான் எஸ்யூவியின் புதிய சாதனை!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தலை நிமிரச் செய்திருக்கும் மாடல்களில் ஒன்றாக புதிய நெக்ஸான் எஸ்யூவி மாறி இருக்கிறது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு நெருங்கும் நிலையில், டாடா நெக்ஸான் உற்பத்தி 50,000 என்ற புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது.

டாடா மோட்டார்ஸை தலைநிமிர செய்த நெக்ஸான் எஸ்யூவியின் புதிய சாதனை!!

அதாவது, சராசரியாக மாதத்திற்கு 4,000 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சூப்பர் ஹிட் மாடல்களில் ஒன்றாக மாறி இருக்கும் டாடா நெக்ஸான் டிசைன், எஞ்சின் ஆப்ஷன், தொழில்நுட்ப வசதிகள், பட்ஜெட் என அனைத்திலும் சிறப்பான தேர்வாக அமைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸை தலைநிமிர செய்த நெக்ஸான் எஸ்யூவியின் புதிய சாதனை!!

மேலும், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மாடல் என்ற பெருமையும் இந்த காருக்கு வலுசேர்க்கிறது. குளோபல் என்சிஏபி அமைப்பு அண்மையில் நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் இந்த கார் 5க்கு 4 என்ற மிக உயரிய நட்சத்திர மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது.

டாடா மோட்டார்ஸை தலைநிமிர செய்த நெக்ஸான் எஸ்யூவியின் புதிய சாதனை!!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், ஃப்ளோட்டிங் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

டாடா மோட்டார்ஸை தலைநிமிர செய்த நெக்ஸான் எஸ்யூவியின் புதிய சாதனை!!

புதிய டாடா நெக்ஸான் காரின் மற்றொரு சிறப்பான விஷயம், சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களை பெற்ற எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும், டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டாடா மோட்டார்ஸை தலைநிமிர செய்த நெக்ஸான் எஸ்யூவியின் புதிய சாதனை!!

இந்த எஞ்சின்கள் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும், மல்டி டிரைவ் மோடு ஆப்ஷனும் இந்த காரின் மிகப்பெரிய தொழில்நுட்ப அம்சமாக கூறலாம்.

டாடா மோட்டார்ஸை தலைநிமிர செய்த நெக்ஸான் எஸ்யூவியின் புதிய சாதனை!!

பெட்ரோல் மமாடல் ரூ.6.15 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதிகபட்ச வசதிகள் கொண்ட மாடல் ரூ.10.59 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. விலை நிரணயமும் சிறப்பாக இருப்பதும் இந்த காரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறலாம்.

Article Published On: Saturday, August 18, 2018, 10:29 [IST]
English summary
Tata Motors has achieved a new production milestone with their subcompact SUV offering, the Nexon. The company recently celebrated the production of their 50,000th Tata Nexon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+