கோவையில் தரிசனம் கொடுத்த டாடா நெக்ஸான் ரோஸ்கோல்டு எடிசன்!!

டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் தற்போது ரோஸ் கோல்ட்(ROSE GOLD EDITION) நிறத்தில் வெளிவந்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு அங்கீகரிப்பட்ட விற்பனை & சேவை மையத்தில் இந்த புதிய வண்ணத்திலான நெக்ஸான் எஸ்யூவி பார்வைக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது.

கோவையில் தரிசனம் கொடுத்த டாடா நெக்ஸான் ரோஸ்கோல்டு எடிசன்!!

அனைவரும் டாடாவின் SUV மாடல் ஆன நியான்(NEON) என்ற வாகனத்திற்காக காத்திருந்த நிலையில், இந்த புதிய வண்ணம் வெளியானது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. ரோஸ் கோல்ட் எடிஷன் என பெயரிடப்பட்ட இந்த சிறப்பு வாகனம் பெயருக்கு ஏற்றல் போலவே ரோஸ் கோல்டு என்ற விசேஷ நிறத்தில் ஆர்ப்பரிக்கிறது.

கோவையில் தரிசனம் கொடுத்த டாடா நெக்ஸான் ரோஸ்கோல்டு எடிசன்!!

வெளிப்பக்கம் தங்க இளஞ்சிவப்பு நிறம் தவிர்த்து உட்பக்கமும் இது புதிய வகை வண்ணங்களினால் வாகனத்தை முற்றிலுமாய் வியக்க வைக்கிறது. முன்பக்கத்தை பொறுத்த வரையில் கருப்பு நிற பாதுகாப்பு கிரில் , விளக்கு விளிம்புகள் மற்றும் காற்றோட்டங்கள் அமையப்பெற்றிப்பது அருமையிலும் அருமை.

கோவையில் தரிசனம் கொடுத்த டாடா நெக்ஸான் ரோஸ்கோல்டு எடிசன்!!

நிறுத்தினால் மட்டுமே இதனை மற்ற SUV வாகனத்திடமிருந்து பிரித்தெடுக்க முடியுமே தவிர உடல் தோற்றம் மற்றும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மற்றவை போலவே உள்ளன. மாறுதல்களுக்கு உட்படுத்தப்படவில்லை. வலது இடது பக்கங்களின் தோற்றத்தை நோக்குவோமாயின், பூசப்பட்டுள்ள தங்க இளஞ்சிவப்பு நிறத்திலேயே சற்று தூக்கலான நிறம் கொண்டு விளிம்புகள் சன்னல் அருகே அமைத்து ஓவியம்போன்றதொரு உணர்வை கொணர்கிறது.

கோவையில் தரிசனம் கொடுத்த டாடா நெக்ஸான் ரோஸ்கோல்டு எடிசன்!!

கூரையில் ரூஃப் ரெயில் சட்டங்கள் (ROOF RAILS), வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள்(ORVMS) , மற்றும் அலாய் வீல்கள் முற்றிலும் கறுப்பு வண்ணம் தீட்டப்பட்டு இந்த இளஞ்சிவப்பு தங்கநிறத்திற்கு எடுப்பாக அமைந்து வாகனத்தை அழகுற செய்கிறது. வாகன உடலில் உள்ள மேடு பள்ளங்கள் அனைத்தும் ஒரே நிறத்தால் அமைந்து சலசலப்பை குறைக்கும் வண்ணம் உள்ளது. மேற்கூறியவாறு இதன் வேறு எந்த வித மாற்றமும் இல்லை என்பது மிகவும் முக்கியம் .

MOST READ:வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

கோவையில் தரிசனம் கொடுத்த டாடா நெக்ஸான் ரோஸ்கோல்டு எடிசன்!!

உட்புற வேலைப்பாடுகளை காணுகையில் பரவசமூட்டும் இளஞ்சிவப்பு தங்க நிறத்தால் அமைந்துள்ளது. கேபின் முழுவது இளஞ்சிவப்புப் மற்றும் தங்க நிறத்தோடு சாம்பல் நிறத்தை சற்றே வருடிவிட்டு அழகை அதிகப்படுத்தி காட்டும் வகையில் உள்ளது. இந்த suv வாகனமானது மேம்படுத்தப்பட்ட வித்யாசமான இருக்கைகளை கொண்டு ரோஸ் கோல்ட் எடிஷன்க்கு ஏற்ற எதிர்நிலை வர்ணத்தில் அமைந்துள்ளது. மற்றபடி சிறு சிறு தொழில்நுட்பங்களில் அமையப்பெற்ற அனைத்தும் பழைய வாகனங்களை பிரதிபலிக்கின்றன என்றால் மிகையாகாது.

கோவையில் தரிசனம் கொடுத்த டாடா நெக்ஸான் ரோஸ்கோல்டு எடிசன்!!

செயல்திறன் மற்றவை போலவே இருப்பதால் அதிக அலசல் தேவையில்லை இருப்பினும் ஒருமுறை. இந்த டாடா நெக்சான் கோல்ட் எடிசன் எனப்படும் சிறப்பு வாகனம்1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும்1.5 லிட்டர் டீசல் என்ஜின் வகையறாக்களில் கிடைக்கிறது. மேலும் இவை 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.

கோவையில் தரிசனம் கொடுத்த டாடா நெக்ஸான் ரோஸ்கோல்டு எடிசன்!!

டாடா நெக்சான் ரோஸ் கோல்ட் எடிஷன் எனப்படும் இவ்வாகனம் டீலரால் கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார் என்பதால் இதற்கு துல்லியமான விலை இன்னும் வரையறுக்கப்படவில்லை. இந்த வாகனமானது ETNA ORANGE, VERMONT RED, MOROCCAN BLUE, SEATTLE SILVER, GLASGOW GREY, CALGARY WHITE போன்ற ஆறு வர்ண கலவைகளில் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப கிடைக்க உள்ளது.

கோவையில் தரிசனம் கொடுத்த டாடா நெக்ஸான் ரோஸ்கோல்டு எடிசன்!!

இந்த SUV வாகனம் பார்ப்பவருக்கு பழைய நெக்சான் போல் அல்லாமல் முற்றிலும் ஒரு புதிய வாகன உணர்வை தருகிறது. இதனை ஆரம்பமாக கொண்டு டாடா நிறுவனம் தனது அடுத்த நியான் க்ரீன் நிறத்தை இதே வாகனத்தில் புகுத்த உள்ளது மற்றுமோர் ஆச்சர்யம். அவ்வாகனம் SUV பிரிவில் புதியதொரு அவதாரமாய் பிறப்பெடுக்கும். விற்பனையை அதிக படுத்தும் நோக்கத்தில் வடியாளர்களுக்கு பல வர்ண கலவைகளில் வாகனத்தை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது டாடா நிறுவனம் என்பதே உண்மை. இவர்களின் திட்டம் சரியா என்பதை வரும் காலங்களில் உள்ள விற்பனை புள்ளிகளை வைத்து தான் திட்டமிடவேண்டும்.

MOST READ:புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

Most Read Articles

மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோ ஆல்பம் நமது தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட போட்டோ ஆல்பம், ஆனால் இந்த பைக் வெளியாகி ஒரிரு நாளிலேயே வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் இந்த பைக்கை குப்பையில் வீசியுள்ளார். எதற்காக குப்பையில் வீசினார் என தெரிந்துகொள்ள இங்கே கிளக் செய்யுங்கள்,கமெண்டில் இது குறித்த உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

Tamil
English summary
We have already reported about Tata Motors launching a new special edition of the SUV named as Neon Edition. Now, a Tata Motors dealership in Coimbatore has showcased the Rose Gold edition of the Nexon. As the name suggests the Nexon in finished in a Rose Gold paint scheme.
Story first published: Wednesday, September 5, 2018, 17:30 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more