டாடா நெக்ஸான் எஸ்ஆர்டி ஃப்ராஸன் எடிசன் - ஸ்பை படங்கள்!!
புதிய வண்ணக் கலவையில் டாடா நெக்ஸான் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலின் ஸ்பை படங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.கூரையில் கருப்பு வண்ணமும், பாடியில் மஞ்சள் வண்ண பெயிண்ட்டிங்கும் செய்யப்
புதிய வண்ணக் கலவையில் டாடா நெக்ஸான் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலின் ஸ்பை படங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஐபிஎல் அணிகளின் ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் அண்மையில் டீலர்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு அதுபோன்று கஸ்டமைஸ் செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்து ஒரு ஸ்பெஷலான டாடா நெக்ஸான் கார் டீலரில் தென்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்ஆர்டி ஃப்ராஸன் எடிசன் என்ற பெயரில் இந்த கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. இது டீலர் அளவில் சொந்தமாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார் மாடலாக தெரிய வருகிறது.

கருப்பு- மஞ்சள் வண்ணக் கலவையில் இந்த கார் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது. கூரையில் கருப்பு வண்ணமும், பாடியில் மஞ்சள் வண்ண பெயிண்ட்டிங்கும் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர, பல்வேறு பொலிவு கூட்டும் அம்சங்களுடன் மெருகேற்றப்பட்டு இருக்கிறது.

முன்புற க்ரில் அமைப்பில் சில்வர் வண்ண பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. ரேடியேட்டர் க்ரில் மற்றும் பனி விளக்குகள் அறையிலும் சில்வர் வண்ண பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புற, பின்புற பம்பர்கள், கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்களும் மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

உட்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டேஷ்போர்டில் மஞ்சள் வண்ண அலங்கார தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. முன்புற, பின்புற இருக்கைகளில் மஞ்சள் வண்ண தையல் வேலைப்பாடுகளுடன் வெளிப்புற வண்ணத்தை பிரதிபலிப்பதாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

வேறு எந்த டிசைன் மாற்றங்களும் இல்லை. இந்த எஸ்யூவி வகை காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டாடா நெக்ஸான் எஸ்ஆர்டி ஃப்ராஸன் எடிசன் எஸ்யூவியானது டீலர் அளவில் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, விலை விபரம் குறித்த தகவல் இல்லை.

இரட்டை வண்ணக் கலவையில் மிகவும் தனித்துவமாக இருக்கிறது இந்த டாடா நெக்ஸான் எஸ்ஆர்டி ஃப்ராஸன் எடிசன் மாடல். இது நிச்சயம் இளைய சமுதாய வாடிக்கையாளர்களை கவரும் என்பதில் ஐயமில்லை.
Source: Forum Autocarindia


Click it and Unblock the Notifications