டாடா நெக்ஸான் காரில் அதிக வசதிகள் கொண்ட புதிய வேரியண்ட் அறிமுகம்!
டாடா நெக்ஸான் எஸ்யூவியில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டாடா நெக்ஸான் காரில் அதிக சிறப்பம்சங்களுடன் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை மற்றும் வசதிகள் விபரங்களை காணலாம்.

கடந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட புதிய XZ என்ற வேரியண்ட் இப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இப்போது டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும் XZ+ மற்றும் XT ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளுக்கும் இடையிலான ரகத்தில் இந்த புதிய XZ வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

டாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த புதிய XZ வேரியண்ட் கிடைக்கும். இந்த புதிய வேரியண்ட்டில் ஃப்ளோட்டிங் தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேரை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும். வாய்மொழி எச்சரிக்கை வசதி, வாய்மொழி உத்தரவு மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இயக்கும் வசதிகள் உள்ளன. இந்த வேரியணட்டில் 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 ட்வீட்டர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இடம்பெற்று இருக்கிறது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா அசிஸ்ட் வசதி உள்ளது. ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, எதிரொலிப்பு தன்மை இல்லாத உட்புற ரியர் வியூ மிரர் உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் உள்ளன.

இந்த எஸ்யூவியில், 110 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 110பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோடார்க் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய XZ பெட்ரோல் வேரியண்ட் ரூ.7.99 லட்சம் விலையிலும், XZ டீசல் வேரியண்ட் ரூ.8.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட்டை விட ரூ.58,000 குறைவாக வந்திருப்பதால், வாடிக்கையாளர்களை இந்த வேரியண்ட் வெகுவாக கவரும். டாடா நெக்ஸான் எஸ்யூவி ரூ.5.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








