இந்திய ராணுவத்திற்கான டாடா சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!!

ராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய டாடா சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவியின் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த புதிய எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம், வலிமையான அடிப்பாகம், வலிமையான சஸ்பெ

By Saravana Rajan

இந்திய ராணுவத்திற்காக விசேஷ முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் படங்கள் மற்றும் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

 இந்திய ராணுவத்திற்கான டாடா சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!!

டாடா சஃபாரி ஸ்டார்ம் ஜிஎஸ்800 என்ற பெயரில் இந்த புதிய எஸ்யூவி ராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில், ஜிஎஸ் என்பது ராணுவத்தின் ஜெனரல் சர்வீஸ் என்பதையும், 800 என்பது இந்த எஸ்யூவி 800 கிலோ வரை பொருட்களை ஏற்றுவதற்கான இடவசதியை பெற்றிருப்பதையும் குறிக்கிறது.

ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளிலும் இந்த எஸ்யூவியை பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் முன்புற கேபின் குளிர்சாதன வசதி கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின்புறத்தில், பொருட்களை ஏற்றுவதற்கும், ஆயுதங்களை பொருத்தி பயன்படுத்துவதற்கும் உரிய வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

 இந்திய ராணுவத்திற்கான டாடா சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!!

ரேடியோ சிக்னல்களை பெறுவதற்கான ஆன்டென்னா, துப்பாக்கியை பொருத்துவதற்கான தாங்கிகள் மற்றும் பைனாகுலர் வைப்பதற்கான இடவசதிகளுடன் பின்புறம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ராணுவ வாகன விதிகளின்படி, டாடா சஃபாரி ஸ்டார்ம் ஜிஎஸ் 800 எஸ்யூவி குறைவான வீல் பேஸ் பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. கடுமையான நிலபரப்புகளில் செல்வதற்கு ஏற்ப வலிமையான சஸ்பென்ஷன் அமைப்பும், அடிப்பாகத்தில் கூடுதல் பாதுகாப்பு கட்டமைப்பையும் பெற்றிருக்கிறது.

 இந்திய ராணுவத்திற்கான டாடா சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!!

இந்த எஸ்யூவியின் 4 வீல் டிரைவ் சிஸ்டம் போர்க் வார்னர் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகிறது. ஆன் தி ப்ளை ஷிஃப்ட் எனப்படும் வாகனம் சென்றுகொண்டிருக்கும்போதே 4 வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு மாற்றும் வசதியும் உள்ளது. இதற்காக, டேஷ்போர்டில் சிறிய டயல் இடம்பெற்றுள்ளது.

இவை மட்டுமின்றி, ராணுவ வாகனங்களுக்கான பிரத்யேக வண்ணக் கலவையில் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய ராணுவத்திற்கு 3,192 டாடா சஃபாரி ஸ்டார்ம் ஜிஎஸ்800 எஸ்யூவிகள் சப்ளை செய்யப்பட இருக்கின்றன.

இதுவரை பயன்பாட்டில் இருந்த மாருதி ஜிப்ஸி எஸ்யூவிகளுக்கு மாற்றாக இந்த புதிய எஸ்யூவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மஹிந்திரா, மாருதி நிறுவனங்களுக்கு இடையிலான கடுமையான போட்டியில் டாடா சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவி ராணுவத்தால் தேர்வு செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.

Picture Courtesy: Financial Express

English summary
Tata Motors will supply 3,192 units of their Safari Storme to the Indian Army. The Safari Storme SUVs will have reworked suspension, protective underbody and a 4X4 drive system. The vehicle will also feature a complete techno-camo wrap.
Story first published: Wednesday, April 18, 2018, 12:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X