டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் நிலைமைய பார்த்தீங்களா?

Written By:

டாடா டியாகோ காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். இதுதொடர்பாக, காரின் உரிமையாளர் வெளியிட்ட தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் நிலைமைய பார்த்தீங்களா?

டாடா டியாகோ கார்கள் விபத்தில் சிக்கும் செய்திகள் அடிக்கடி நிகழ்வது துரதிருஷ்டவசமானதாகவே உள்ளது. எனினும், இந்த விபத்துக்களில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புவதும் ஆறுதலான விஷயமாக இருக்கிறது.

டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் நிலைமைய பார்த்தீங்களா?

இந்த நிலையில், தமிழகத்தில் டாடா டியாகோ கார் ஒன்று டிராக்டருடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக, காரின் உரிமையாளர் டிவிட்டரில் படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் நிலைமைய பார்த்தீங்களா?

மேலும், டிராக்டருடன் மோதிய வேகத்தில் கார் உருண்டு கவிழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். எனினும், கார் கட்டுறுதியாக இருந்ததால், விபத்தில் பயணிகளுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.

டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் நிலைமைய பார்த்தீங்களா?

டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் படுமோசமாக சேதமடைந்துள்ளது. மோதிய வேகத்தில் டிராக்டர் இரண்டாக உடைந்துவிட்டது. இந்த விபத்தில் டாடா டியாகோ காரும் சேதமடைந்திருக்கிறது. ஆனால், வலுவான பில்லர்கள் கார் தலைகீழாக கவிழ்ந்தபோதிலும் அப்பளம் போல நசுங்காமல் உள்ளே இருப்பவர்களை பாதுகாக்க உதவி இருக்கிறது.

டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் நிலைமைய பார்த்தீங்களா?

இந்த விபத்தில் காரில் இருந்த உயிர்காக்கும் ஏர்பேக்குகள் விரிவடையவில்லை. காரின் பக்கவாட்டுப் பகுதியில் டிராக்டர் மோதியதால் ஏர்பேக் விரிவடையவில்லை. முன்பகுதியில் குறிப்பிட்ட பகுதியில் மோதினால் மட்டுமே காரில் முன்புற ஏர்பேக்குகள் விரிவடையும்.

டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் நிலைமைய பார்த்தீங்களா?

ஆனால், அது சரி செய்யக்கூடிய அளவில் இருக்கிறது. ஆனால், விபத்தில் சிக்கிய டிராக்டர் சரி செய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்து முன்பகுதியும், பின்பகுதியாகவும் தனித்தனியாக உடைந்து பிரிந்துவிட்டது.

டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் நிலைமைய பார்த்தீங்களா?

"இதுபோன்ற சிறந்த காரை தயாரித்தற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு நன்றி என்று டாடா டியாகோ காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் டாடா நெக்ஸான் காரும் விபத்தில் சிக்கியது. அதிலிருந்தவர்கள் உயிர் தப்பினர். அந்த காரின் உரிமையாளரும் இதேபோன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் நிலைமைய பார்த்தீங்களா?

கார் தஞ்சாவூர் பதிவு எண் கொண்டதாக இருக்கிறது. ஆனால், விபத்து சேலம் அருகே நடந்துள்ளதாக அவரது பதிவு தெரிவிக்கிறது. இந்த விபத்து குறித்து அதிக தகவல்களை காரின் உரிமையாளர் வெளியிடவில்லை. எனினும், டாடா டியாகோ கார் விபத்தில் சிக்கி பயணிகளை காவந்து செய்த விஷயம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Source

English summary
Tata Tiago Crash In Tamilnadu.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark