டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் பெர்ஃபார்மென்ஸ் ரக மாடல்களை கோவையை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கிறது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி பெர்ஃபார்மென்ஸ் ரக கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய கார்களின் சிறப்பம்சங்கள், விலை விபரம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் பெர்ஃபார்மென்ஸ் ரக மாடல்களை கோவையை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கிறது. இந்த கூட்டணியில் வெளிவரும் முதல் இரண்டு கார் மாடல்கள் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இரண்டு மாடல்களும் அட்டகாசமான அம்சங்கள் மற்றும் பவர்ஃபுல் எஞ்சினுடன் வந்துள்ளன.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களில் பானட்டில் ஏர் ஸ்கூப் அமைப்பு, முகப்பு க்ரில் அமைப்பு மற்றும் டூயல் சேம்பர் ஹெட்லைட் ஆகியவை கருப்பு பின்னணியுடன் வந்துள்ளன. க்ரில் அமைப்பில் ஜேடிபி என்ற பிராண்டுக்கான பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அறுகோண வடிவிலான ஏர்டேம் பகுதி மற்றும் கருப்பு பின்னணியுடன் பனி விளக்குகள் அறை கவர்கிறது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

பக்கவாட்டில் கருப்பு- சிவப்பு வண்ணக் கலவையிலான சைடு மிரர்கள், 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்டுகள் போன்றவை காரின் வசீகரத்தை கூட்டுவதுடன் சாதாரண மாடலிலிருந்து ஜேடிபி மாடல்களை வேறுபடுத்துகின்றன.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

பின்புறத்தில் டாடா டியாகோ ஜேடிபி மற்ரும் டிகோர் ஜேடிபி மாடல்களில் கிளியர் லென்ஸ் கொண்ட எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு வண்ண ஸ்பாய்லர், இரட்டைக் குழல் சைலென்சர், தனித்துவமான பம்பர் அமைப்பு ஆகியவை அசத்தலாக இருக்கின்றன. கருப்பு வண்ண கூரையுடன் இரட்டை வண்ணத்தில் கிடைக்கிறது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தில் கருப்பு - சிவப்பு வண்ண தீம் இடம்பெற்றிருக்கிறது. இருக்கைகள் கருப்பு - சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், சிவப்பு நூலில் தையல் வேலைப்பாடு வசீகரமாக இருக்கிறது. ஏசி வென்ட்டுகளை சுற்றி சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருப்பதும் வித்தியாசப்படுத்துகிறது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரண்டு கார் மாடல்களிலும் 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் ஆடியோ சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளன. இந்த கார் மாடல்களில் அலுமினியம் பெடல்கள் இடம்பெற்றுள்ளன.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரண்டு கார்களிலுமே 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கறது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரண்டு கார்களும் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 10 வினாடிகளில் எட்டிவிடும். ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிக சக்திவாய்ந்த மாடலாக டியாகோ வந்துள்ளது. மாருதி பலேனோ ஆர்எஸ் காரைவிட சக்திவாய்ந்த மாடலாக டியாகோ வந்துள்ளது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 4 மிமீ குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார்களின் சஸ்பென்ஷன் கடினமான முறையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி பிரேக் நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா டியாகோ ஜேடிபி கார் ரூ.6.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டிகோர் ஜேடிபி கார் ரூ.7.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

நாடு முழுவதும் 15 நகரங்களில் உள்ள 30 டாடா மோட்டார்ஸ் டீலர்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். ரூ.1 லட்சம் கூடுதல் விலையில் வந்திருப்பதால், பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்களை இந்த இரண்டு மாடல்களும் வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 27, 2018, 11:07 [IST]
English summary
Tata Tiago JTP and Tigor JTP launched in India: Tata Motors has launched the Tiago JTP and the Tigor JTP in the country. The Tata Tiago JTP is priced at Rs 6.39 lakh and the Tigor JTP carries a price tag of 7.49 lakh. Both prices are ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+