விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

டாடா டியாகோ கார் விற்பனையில் தொடர்ந்து கலக்கி வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சிறிய கார் மார்க்கெட்டில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தி இருக்கிறது. நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்கள

By Saravana Rajan

டாடா டியாகோ கார் விற்பனையில் தொடர்ந்து கலக்கி வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சிறிய கார் மார்க்கெட்டில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தி இருக்கிறது.

 விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 23,100 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே காலக்கட்டத்தில் 62,100 மாருதி ஆல்ட்டோ கார்களும், 17,517 ஹூண்டாய் இயான் கார்களும், 15,162 ரெனோ க்விட் கார்களும் விற்பனையாகி இருக்கின்றன.

 விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

இதன்மூலமாக, சிறிய கார் மார்க்கெட்டில் டாடா டியாகோ கார் மாருதி ஆல்ட்டோ காருக்கு அடுத்த இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதில் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஹூண்டாய் இயான் கார் விற்பனை 7 சதவீதம் வரையிலும், ரெனோ க்விட் கார் விற்பனை 32 சதவீதம் வரையிலும் சரிந்துள்ளது.

 விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

ஆனால், டாடா டியாகோ காரின் விற்பனை வளர்ச்சி 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த போக்கு நீடிக்கும்பட்சத்தில், ஹூண்டாய் இயான் மற்றும் ரெனோ க்விட் கார்களை தொடர்ந்து பின்னுக்குத் தள்ளி, சிறிய கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாகவும், இரண்டாவது இடத்தையும் டாடா டியாகோ தக்க வைக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

 விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

டாடா டியாகோ கார் விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருந்து வருவதற்கு பல்வேறு காரணங்களை கூற முடியும். முதலில் அருமையான டிசைன். பட்ஜெட் கார் வாங்குவோரை திருப்திப்படுத்தும் விதத்தில் மிகச் சிறந்த டிசைனையும், வடிவத்தையும் பெற்றிருக்கிறது.

 விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

முக்கிய போட்டியாளர்கள் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், இந்த காரில் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைப்பது முக்கிய விஷயமாக கூறலாம்.

 விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

பெட்ரோல் எஞ்சின் 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும், டீசல் மாடலில் இருக்கும் 1.05 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். போட்டியாளர்களைவிட சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்களை பெற்றிருக்கிறது.

 விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, பெட்ரோல் மாடலில் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் கிடைக்கிறது. இந்த ரக கார்களில் முதல்முறையாக பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் மல்டி டிரைவ் மோடு எனப்படும் எஞ்சின் இயக்கத்தை சாலை நிலைகளை பொறுத்து பயன்படுத்தும் வசதியை அளிக்கிறது.

 விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

மைலேஜிலும் போட்டியாளர்களுக்கு சவால் விடுகிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.28 கிமீ மைலேஜையும் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுவும் சிறப்பான சாய்ஸாக வாடிக்கையாளர் மத்தியில் தோன்ற வைத்துவிட்டது.

 விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

டாடா டியாகோ காரின் இன்டீரியரும் மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், கனெக்ட் நெக்ஸ்ட் சாஃப்ட்வேருடன் கூடிய ஹார்மன் நிறுவனத்தின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டமும் இந்த காரின் மதிப்பு சேர்க்கும் விஷயம்.

 விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

இந்த காரில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியும், ஜூக் மொபைல்போன் செயலி மூலமாக 10 ஸ்மார்ட்போன்களை இணைத்துக் கொள்ளும் வசதியையும் இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.

 விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

டாடா டியாகோ காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கிறது. இதனுடன் கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் தொழில்நுட்பம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

 விற்பனையில் கலக்கும் டாடா டியாகோ... 2வது இடத்துக்கு முன்னேறியது!!

அனைத்து சிறப்பம்சங்களுடன் ரூ.3.21 லட்சம் என்ற மிக சவாலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைப்பதும் இந்த கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்வதற்கு முக்கிய காரணமாக கூறலாம்.

English summary
Tata Tiago rides to 2nd position in small cars.
Story first published: Thursday, April 26, 2018, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X