டியாகோ & டிகோர் கார்களை புதிய நிற தேர்வில் சஸ்பென்ஸாக வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்..!!

டியாகோ & டிகோர் கார்களை புதிய நிற தேர்வில் சஸ்பென்ஸாக வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்..!!

By Azhagar

இந்தியாவில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களில் டாடாவின் டியாகோ மாடல் தற்போது வரை கொடிக்கட்டி பறக்கிறது. கார் விற்பனையில் துவண்டுபோயிருந்த டாடா மோட்டார்ஸிற்கு டியாகோ காரின் வரவு புது ரத்தம் பாய்ச்சியது போல அமைந்தது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

இந்தியளவில் இதன் விற்பனையை மேலும் அதிகரிக்க, டியாகோ காரில் புதிய நிற தேர்வை டாடா அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிற தேர்வு டாடாவிற்கு விற்பனையை குவித்து வரும் மற்றொரு காரான சப் காம்பேட் செடான் டிகோர் மாடலுக்கும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

அதன்படி டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்கள் டைட்டானியம் க்ரே நிறத்தில் இனி விற்பனைக்கு கிடைக்கும். இந்த கார்களை டீலர்களிடம் கொண்டு சேர்க்கும் பனி தற்போது தொடங்கியுள்ளது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

தொடர்ந்து, இந்த இரண்டு கார்களும் ஸ்ட்ரைக்கர் ப்ளூ என்ற நிறத்தில் தயாரிக்கப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டுள்ளதாக டாடா தெரிவித்துள்ளது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

தற்போது டியாகோ மற்றும் டிகோர் கார்கள் பெர்ரி ரெட், எஸ்பிரஸ்ஸோ பிரவுன், டைட்டேனியம் க்ரே, பிளாட்டினம் சில்வர் மற்றும் பியர்ல்சென்ட் வைட் போன்ற நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

அதேபோல டியாகோ மற்றும் டிகோர் கார்களின் எக்ஸ்.பி மற்றும் எக்ஸ்.இ வேரியன்டுகளில் டைட்டேனியம் நிறத்தேர்வு இல்லை என்பதை குறிப்பிடத்தக்கது.

புதிய இம்பேக்ட் வடிவமைப்பு தத்துவத்தின் கீழ் தயாராகியுள்ள இந்த கார்கள் இந்தியாவில் கார் விற்பனை சந்தையில் டாடாவின் இடத்தை உயர கொண்டு சென்றது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

பெட்ரோல் மற்றும் டீசல் தேர்வுகளில் ஒரே விதமான எஞ்சின் முறையை பின்பற்றி இயங்கும் டியாகோ மற்றும் டிகோர் கார்கள் கியர்பாக்ஸ் தேவையிலும் ஒற்றுமை கடைப்பிடிக்கிறது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

1.2 ரெவட்ரான் பெட்ரோல் எஞ்சின் மூலம் இந்த இரண்டு கார்களும் 84 பிஎச்பி முதல் 114 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல்கள் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவைகளில் கிடைக்கிறது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

தொடர்ந்து 1.1 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சின் தேர்வை பெற்றுள்ள இந்த கார்கள் 70 பிஎச்பி பவர் மற்றும் 150 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

டாடாவின் டியாகோ மற்றும் டிகோர் கார்களின் டாப் வேரியன்ட் மாடல்கள் ஏர்பேகுகள் மற்றும் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களை ஒருங்கே பெற்றுள்ளது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

தவிர, இந்த கார்களின் ஸ்போர்டியர் மற்றும் மின்சார திறன் கொண்ட வெர்ஷன்களையும் டாடா வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

குறிப்பாக இதனுடைய ஸ்போர்டியர் வெர்ஷன்களுக்கு டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி என்று பெயரிடப்பட்டுள்ளன.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

இந்த கார்களுக்கு டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் எஞ்சின் தேர்வுகளை பொருத்தியுள்ளது. அதனால் ஸ்போர்டியர் திறன் பெற்ற டியாகோ மற்றும் டிகோர் கார்கள் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள டியாகோ மற்றும் டிகோர் கார்களின் மின்சார கார்கள், இந்தியாவில் 2020ம் ஆண்டில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

இந்தியாவின் ஹேட்ச்பேக் சந்தையில் டாடா டியாகோ, மாருதி செலிரியோ மற்றும் வேர்கன்.ஆர் கார்களுக்கு சரிநிகர் போட்டி மாடலாக உள்ளது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

தொடர்ந்து டிகோர் சப்-காம்பேக்ட் செடான் கார் மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஏஸ்பையர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஏமியோ கார்களுக்கு போட்டி மாடலாக உள்ளது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

இந்தியாவின் ஹேட்ச்பேக் மற்றும் சப்-காம்பேக்ட் மாடல்களில் விற்பனையாகும் நவீன மற்றும் ப்ரீமியம் தர கார்களை விட டியாகோ மற்றும் டிகோர் கார்களின் விலை குறைவு தான்.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

அதன்படி டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரின் ஆரம்ப விலை ரூ. 3.26 லட்சம் மற்றும் டிகோர் காரின் ஆரம்ப விலை ரூ. 4.71 லட்சமாக உள்ளது.

இந்தியாவில் டைட்டேனியம் க்ரே நிறம் கிராஃபைட் க்ரே என்ற பெயரில் தான் பரவலாக அறியப்படுகிறது. இது கார் வாடிக்கையாளர்கள் பலரின் விருப்பமான நிறமாகவும் உள்ளது.

டாடா டியாகோ & டிகோர் கார்கள் இனி புதிய தேர்வில் கிடைக்கும்

டாடா மோட்டார்ஸ் டியாகோ மற்றும் டிகோர் கார்களை டைட்டேனியம் க்ரே நிறத்தில் வெளியிட்டுயிருப்பது அதன் விற்பனை திறனை மேலும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Most Read Articles
English summary
Read in Tamil: Tata Tiago & Tigor Get New Colour Option; Replaces The Striker Blue Paint Scheme. Click for Details...
Story first published: Thursday, February 22, 2018, 13:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X