TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
டாடா டியோகா காரின் புதிய டாப் வேரியண்ட் விரைவில் அறிமுகம்!
புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் வருகையால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை போக்கிக் கொள்ளும் விதத்தில், டாடா டியாகோ காரின் அதிக வசதிகள் கொண்ட புதிய டாப் வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
டாடா டியாகோ XZ+ என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் வர இருக்கிறது. புதிய 15 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், கருப்பு பின்னணியுடன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், இரட்டை வண்ணக் கூரை மற்றும் பூட் ரூம் கதவில் க்ரோம் அலங்கார விஷயங்களுடன் வர இருக்கிறது.
மேலும், புதிய எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட்டில் புதிய சைடு மோல்டிங்குகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அத்துடன் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சைடு மிரர்கள் இடம்பெற்றுள்ளன.
டாடா டியாகோ காரின் எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட்டில் புதிய 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் டிஜிட்டல் முறையில் கட்டுப்படுத்தும் வசதியும் இருக்கும்.
இந்த புதிய டாப் வேரியண்ட்டில் ஏற்கனவே இருக்கும் வண்ணங்கள் தவிர்த்து கேன்யோன் ஆரஞ்ச் மற்றும் ஓசன் புளூ ஆகிய இரண்டு புதிய வண்ண தேர்வுகளிலும் கிடைக்கும். தவிர, பெர்ரி ரெட், பியர்லசென்ட் ஒயிட், டைட்டானியம் க்ரே, எஸ்பிரெஸ்ஸோ பிரவுன் மற்றும் இன்னும் பிற இரட்டை வண்ணக் கலவைகளில் கிடைக்கும்.
டாடா டியாகோ காரின் புதிய டாப் வேரியண்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடல் 85 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும், டீசல் மாடல் 70 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.
டாடா டியாகோ காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களானது மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால், விரைவில் வரும் புதிய எக்ஸ்இசட் ப்ளஸ் டாப் வேரியண்ட்டானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே வர இருக்கிறது.
வரும் 12ந் தேதி டாடா டியாகோ காரின் எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரஷ்லேன் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஹூண்டாய் சான்ட்ரோ, மாருதி செலிரியோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.