மாசு உமிழ்வு பிரச்னை: டாடா டிகோர் டீசல் காருக்கு ரீகால் அறிவிப்பு

மாசு உமிழ்வு பிரச்னை காரணமாக டாடா டிகோர் (TATA TIGOR) டீசல் கார் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இந்நிறுவனத்தின் வாகனங்கள் அனைத்தையும் பலதரப்பட்ட சோதனைக்ளுக்கு பின்னே வெளிவருகின்றன என்றபோதும் ஏன் இப்படி??? காண்போம் வாருங்கள்.

மாசு உமிழ்வு பிரச்னை: டாடா டிகோர் டீசல் காருக்கு ரீகால் அறிவிப்பு

டாடா டிகோர் காரின் டீசல் மாடலில் மாசு உமிழ்வு பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ந் தேதி முதல் அதே ஆண்டின் டிசம்பர் 1ந் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட டிகோர் டீசல் கார்கள் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன.

மாசு உமிழ்வு பிரச்னை: டாடா டிகோர் டீசல் காருக்கு ரீகால் அறிவிப்பு

இருப்பினும் அந்நிறுவனம் இது நாள் வரை எத்தனை வாகனங்கள் இவ்வாறு உமிழ்வுக்கு வழிவகுக்கின்றன என்ற எண்ணிக்கையை ரகசியமாகவே வைத்துள்ளது . சாஸ்ஸிஸ் நம்பர்MAT629401GKP52721 முதல்MAT629401HKN89616 வரையுள்ள வாகனங்கள் மறுபரிசோதனைக்கு அழைக்கப்ட்டுள்ளன.

மாசு உமிழ்வு பிரச்னை: டாடா டிகோர் டீசல் காருக்கு ரீகால் அறிவிப்பு

இவ்வாகனத்தின் உரிமையாளர்களை அதற்குரிய அங்கீகரிப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் சர்வீஸ் மையங்கள் அழைத்து சோதனைக்கு உட்படுத்தி பிரச்னையை சரிசெய்து தருவதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மாசு உமிழ்வு பிரச்னை: டாடா டிகோர் டீசல் காருக்கு ரீகால் அறிவிப்பு

இந்த பரிசோதனை ஆனது தகுதி மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்களை இதெற்கென தனியாக எந்த வித பணமும் செலுத்த வேண்டியதில்லை எனவும், நம் வாகனம் பரிசோதைக்கு உட்படுத்தப்பட்டதே இதில் ஏதும் கோளாறுகள் இருக்குமோ என வாடிக்கையாளர்கள் அச்சமுற தேவையில்லை எனவும் அந்நிறுவனம் உறுதிபட அறிவித்துள்ளது.

MOST READ: வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் பெருத்த அவமானம்.. ரூ.2.40 லட்சம் மதிப்பிலான ராயல் என்பீல்டு பைக்குகளை குப்பையில் வீச தொடங்கிய உரிமையாளர்கள்..

மாசு உமிழ்வு பிரச்னை: டாடா டிகோர் டீசல் காருக்கு ரீகால் அறிவிப்பு

இது மாசு உமிழ்வின் பரிசோதனைதானே ஒழிய வண்டியின் பாதுகாப்பின் எந்தவித இடர்பாடுகளை இருக்காது என்பது நிதர்சனம். இந்த காரில் கீழ்கண்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

1. இடர்பாடுகளுக்கு இடையில் விரியும் இரண்டு ஏர்பாக்குகள்

2. வாகனத்தை ஒழுங்குற நிறுத்த பயன்படும் பார்க்கிங் சென்சார்கள்

3. முற்றிலும் இடர்பாடுகளை தவிர்க்க கேமெராக்கள்

4. வலுத்து நிற்கக்கூடிய பலமான கட்டுமான பொருட்கள்

5. ABS தொழில்நுட்பத்தில் இயங்கும் பிரேக்குகள்

6. பதற்றத்தினை குறைக்கும் கார்னரிங் ஸ்டபிளிட்டி கண்ட்ரோல் மென்பொருள்

மாசு உமிழ்வு பிரச்னை: டாடா டிகோர் டீசல் காருக்கு ரீகால் அறிவிப்பு

இவைதவிர நாம் நம்முடைய கைபேசியில் வாகன செயலை கணிக்கும் வகையிலான செயலையும் உள்ளது. அதன் பெயர் "டாடா எமெர்ஜெண்சி அஸ்சிஸ்ட் ஆப் " . இந்த செயலி எதிர்பாராத நேரத்தில் தெரியாத இடத்தில ஏற்படும் இடர்பாடுகளை முறையே நம் நண்பர்கள் உறவினர்களுக்கு தெரிவித்து இடத்தின் வழியை துல்லியமாக அனுப்பி நம்மை காக்க பயன்படும்.

மாசு உமிழ்வு பிரச்னை: டாடா டிகோர் டீசல் காருக்கு ரீகால் அறிவிப்பு

இருப்பினும் இந்நிறுவனம் பரிசோதனைகள் காரணத்தை தெளிவுற தன் வாடிக்கையாளர்களுக்கு கூறவில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. தோராயமாக 7000 கார்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.

மாசு உமிழ்வு பிரச்னை: டாடா டிகோர் டீசல் காருக்கு ரீகால் அறிவிப்பு

செடான் பிரிவின் கட்டுமான அமைப்பை பெற்றுள்ள இந்த வாகனம் மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்ஸண்ட் என அனைத்து வகை செடான் வாகனங்களினும் முன்னிலை வகிப்பது முக்கியாம்சம். மாதம் ஒன்றிற்கு சராசரியாக 2655 வாகனங்கள் விற்பனையாது ஒன்றும் எளிதல்ல. அழகிய கட்டுமான அணைப்பினை பெற்றதே இவாகனத்தில் சிறப்பிற்கு காரணி.

மாசு உமிழ்வு பிரச்னை: டாடா டிகோர் டீசல் காருக்கு ரீகால் அறிவிப்பு

இந்த காரில் மூன்று சிலிண்டர் 1 .05 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 69BHP செயல் திறனை 140NM டார்க் கொண்டு சீற வல்லது. இந்த என்ஜின் ஆனது 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் செயல் திறனை அதிகரிக்கும் வகையில் உள்ளது.

மாசு உமிழ்வு பிரச்னை: டாடா டிகோர் டீசல் காருக்கு ரீகால் அறிவிப்பு

இந்த உமிழ்வு பிரச்சனை நூற்றிற்கு இருநூறுசதவிகிதம் வண்டியின் பாதுகாப்பையும், செயல் திறனும் பாதிக்காது என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த வித அச்சமுமின்றி சோதனைக்கு பின் பயன்படுத்தலாம்.

MOST READ:புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

மாசு உமிழ்வு பிரச்னை: டாடா டிகோர் டீசல் காருக்கு ரீகால் அறிவிப்பு

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

டாடா மோட்டார்ஸ்-இன் உன்னத படைப்பான டாடா டிகோர் மாசு உமிழ்வுக்கு மீண்டும் பரிசோதிக்கப்படுவது ஒரு கசப்பான அனுபவம் என்பது உண்மை என்றாலும், அதனுடைய சரியான விளக்கங்களை இன்னும் அந்நிறுவனம் வெளியிட வில்லை என்பதால் காலத்தால் மட்டுமே இதற்கு விடை கொடுக்க இயலும். இது ஒரு சிறிய கோளாறு என்பதால் அந்நிறுவனம் எந்த வித சலசலப்புக்கு ஆளாகவில்லை . மேலும் இது பற்றிய முழு விவரங்களை டாடா மோட்டார்ஸ் இணையதளம் வாயிலாக பெருவீராக..

Most Read Articles

Tamil
English summary
Tata Motors has recalled the Tigor sedan over an emission issue. The diesel variant of the Tata Tigor has been recalled to rectify an emission issue. Tata Tigor diesel manufactured between March 6, 2017, to December 1, 2017, has been affected by this recall. But the company has not revealed the number of units being recalled.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more