புதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டிகோர் காரும் புதுப்பொலிவுடன் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹெட்லைட் மற்றும் க்ரில் அமைப்பு, இரட்டை வண்ண அலாய் வீல்கள், 7 அங்குல தொடுதிரையுடன் புதிய ஹார்மன் இன்ஃபோடெயின்

காம்பேக்ட் செடான் ரகத்தில் மிக குறைவான பட்ஜெட் கொண்ட மாடல் டாடா டிகோர். இந்த நிலையில், காம்பேக்ட் செடான் ரகத்தில் முன்னணி மாடல்கள் புதுப்பொலிவுடன் வந்துவிட்ட நிலையில், டாடா டிகோர் காரும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இன்று விற்பனைக்கு களமிறக்கப்பட்டு இருக்கிறது.

புதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டாடா டிகோர் கார் வந்துள்ளது. க்ரோம் ஃபினிஷுடன் கூடிய டபுள் பேரல் எனப்படும் இரட்டை குடுவை அமைப்புடைய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், வைரக்கற்கள் வடிவிலான க்ரில் முகப்பு க்ரில் அமைப்பு, க்ரோம் வளையத்துடன் கூடிய பனி விளக்குகள் முகப்பில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

பக்கவாட்டில் 15 அங்குல இரட்டை வண்ண அலாய் வீல்கள் கவர்ச்சியாக இருக்கின்றன. க்ரோம் சில்லுகள் கொடுக்கப்பட்ட கதவு கைப்பிடிகள், பியானோ பிளாக் எனப்படும் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணத்திலான சுறா துடுப்பு ஆன்டென்னா, கிறிஸ்டல் கிளியர் லென்ஸ் பொருத்தப்பட்ட டெயில் லைட்டுகள் என ஏராளமான கூடுதல் சிறப்பம்சங்களுடன் கவர்ச்சியாக மாறி இருக்கிறது.

புதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா டிகோர் காரின் உட்புறத்தில் சாம்பல் மற்றும் கருப்பு வண்ணத்திலான இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உட்புறத்தில் முக்கிய மாற்றமாக 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலி, ரிவர்ஸ் கேமரா மற்றும் வீடியோ பிளேபேக் வசதிகளை இந்த சாதனத்தின் மூலமாக பெற முடியும்.

புதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

அத்துடன், வாய்ஸ் கமாண்ட் நேவிகேஷன், மியூசிக் ஸ்ட்ரீமிங் வசதி, மிரர் லிங்க் வசதி, புளூடூத் வசதி, ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் அளிக்கிறது. ஏசி வென்ட்டுகள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை சுற்றிலும் க்ரோம் பீடிங் அலங்காரம் கவர்கிறது. மென்மையான உணர்வை தரும் ரூஃப் லைனர் கொடுக்கப்பட்டு இருககிறது.

புதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா டிகோர் கார் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சின் ஆப்,ன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும்,, 114 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததது.

புதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே தேர்வுக்கு கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.28 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

புதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா டிகோர் காரில் ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான டூயல் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இபிடியுன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சீட் பெல்ட் ரீமைன்டர், வலிமையான கட்டுமானம் ஆகியவை இந்த காரின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.

புதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா டிகோர் கார் 5 பெட்ரோல் வேரியண்ட்டுகள் மற்றும் 4 டீசல் வேரியண்ட்டுகளில் என 9 வேரியண்ட்டுகளில் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா டிகோர் காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.20 லட்சம் முதல் ரூ.6.65 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.6.09 லட்சம் முதல் ரூ.7.38 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது

Variant Petrol Diesel
XE Rs 5,20,000 Rs 6,09,000
XM Rs 5,55,000 Rs 6,41,000
XZ Rs 5,95,000 Rs 6,84,000
XZ+ Rs 6,49,000 Rs 7,38,000
XZA (AMT) Rs 6,65,000 N/A
Article Published On: Wednesday, October 10, 2018, 14:44 [IST]
English summary
Tata Tigor Facelift Launched In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+