தீபாவளிக்கு ரிலீசாக வருகிறது டாடா டிகோர் காரின் பவர்ஃபுல் மாடல்!!

டாடா டிகோர் ஜேடிபி மாடல் மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக டாடா டிகோர் ஜேடிபி காரை அறிமகம் செய்வதற்கு டாடா

By Saravana Rajan

டாடா டிகோர் காரின் பவர்ஃபுல் மாடல் தீபாவளி பண்டிகையை ஒட்டி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

தீபாவளிக்கு ரிலீசாக வருகிறது டாடா டிகோர் காரின் பவர்ஃபுல் மாடல்!!

சில மாதங்களுக்கு முன்பு நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் கார்களின் பவர்ஃபுல் மாடல்களை காட்சிக்கு வைத்திருந்தது. ஜேடிபி என்ற பிராண்டில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மாடல்கள் பார்வையாளர்களின் ஆவலைத் தூண்டியது.

தீபாவளிக்கு ரிலீசாக வருகிறது டாடா டிகோர் காரின் பவர்ஃபுல் மாடல்!!

டாடா டிகோர் ஜேடிபி மற்றும் டியாகோ ஜேடிபி ஆகிய பெர்ஃபார்மென்ஸ் ரக கார்களை கோவையை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனமும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கிய ஜேடி ஸ்பெஷல் வெஹிக்கிள்ஸ் என்ற புதிய கூட்டணி நிறுவனத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு ரிலீசாக வருகிறது டாடா டிகோர் காரின் பவர்ஃபுல் மாடல்!!

இந்த நிலையில், டாடா டிகோர் ஜேடிபி மாடல் மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக் கட்ட ஆய்வுப் பணிகள் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது. அதுகுறித்த ஸ்பை படங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

தீபாவளிக்கு ரிலீசாக வருகிறது டாடா டிகோர் காரின் பவர்ஃபுல் மாடல்!!

இந்த நிலையில், வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக டாடா டிகோர் ஜேடிபி காரை அறிமகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது சோதனை ஓட்டங்களின் மூலமாக தெரிய வருகிறது. இந்தியாவின் குறைவான விலை பெர்ஃபெர்மென்ஸ் செடான் ரக கார்களாக இவை விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன.

தீபாவளிக்கு ரிலீசாக வருகிறது டாடா டிகோர் காரின் பவர்ஃபுல் மாடல்!!

சாதாரண டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களைவிட இந்த விசேஷ மாடல்களில் அதிக சிறப்பம்சங்கள் கொண்டதாக மாறுதல் செய்யப்பட்டுள்ளன. காரின் உயரம் 35மிமீ வரையிலும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 9 மிமீ வரையிலும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 185ய60 ஆர்15 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக, கையாளுமை மேம்படும்.

தீபாவளிக்கு ரிலீசாக வருகிறது டாடா டிகோர் காரின் பவர்ஃபுல் மாடல்!!

புதிய க்ரில் அமைப்பு, கருப்பு வண்ண அலங்கார பாகங்கள், 15 அங்குல டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், சிவப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், புதிய ரியர் பம்பர், இரட்டை குழல் சைலென்சர்கள் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

தீபாவளிக்கு ரிலீசாக வருகிறது டாடா டிகோர் காரின் பவர்ஃபுல் மாடல்!!

டாடா டிகோர் ஜேடிபி காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 110 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரகத்தில் விலை குறைவான பெர்ஃபார்மென்ஸ் மாடலாக இருக்கும்.

தீபாவளிக்கு ரிலீசாக வருகிறது டாடா டிகோர் காரின் பவர்ஃபுல் மாடல்!!

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதிக பெர்ஃபார்மென்ஸ் வழங்கும் விதத்தில், கியர் ரேஷியோவிலும் மாறுதல்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது. ரூ.8 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Friday, July 20, 2018, 17:51 [IST]
English summary
Tata Tigor JTP Sedan India Launch by Diwali This Year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+