விரைவில் விற்பனைக்கு வரும் டாடா டிகோர் ஜெடிபி கார்; விலை, அறிமுகம், வடிவமைப்பு உள்ளிட்ட தகவல்கள்..!!

விரைவில் விற்பனைக்கு வரும் டாடா டிகோர் ஜெடிபி கார்; விலை, அறிமுகம், வடிவமைப்பு உள்ளிட்ட தகவல்கள்..!!

By Azhagar

விற்பனையில் கலக்கி வரும் டாடா மோட்டார்ஸின் பிரபல டிகோர் காம்பேக்ட் செடான் மற்றும் டியாகோ ஹேட்ச்பேக் கார்களின் ஸ்போர்டியர் வெர்ஷன் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்தன.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

டிகோர் ஜெடிபி, டியாகோ ஜெடிபி என்ற பெயர்களில் அறிமுகமான இந்த கார்களை டாடா கோயமுத்தூரை சேர்ந்த ஜெயம் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

தற்போது ஜிக்வீல்ஸ் இணையதளம் டிகோர் ஜெடிபி காரை டாடா மோட்டார்ஸ் இந்தாண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெயம் ஆட்டோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள புதிய டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டன.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

இரண்டு கார்களிலும் 1.2 லிட்டர் டர்போசார்ஜிடு 3 சிலிண்டர் கொண்ட எஞ்சின் தான் வழங்கப்பட்டுள்ளது. இதே எஞ்சின் நெக்ஸான் எஸ்யூவி காரிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

டாடா டிகோர் ஜெடிபி & டியாகோ ஜெடிபி கார்கள் மூலம் 109 பிஎச்பி பவர் மற்றும் 150 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும். ஜெடிபி இணைந்திருப்பதன் மூலம் காரின் பவர் கொஞ்சம் கூடியுள்ளது.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

இந்த கார்களில் டாடா நிறுவனம் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பொருத்தியுள்ளது. எனினும் அந்நிறுவனம் இந்த கார்களில் செயல்திறன் குறித்த எந்த தகவலக்ளையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

டாடா டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் பெரிய ஏர் டேம் மற்றும் ஃபாக் விளக்குகள், ஏர் வென்டஸ், புகைப்படிந்த முகப்பு விளக்குகள், சைடு ஸ்கெர்ட்ஸ் மற்றும் ரியர் டிஃப்யூஸர் போன்றவை வெளிப்புற கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளது.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

சராசரியான டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் இருக்கும் 15 இஞ்ச் டைமன்ட் கட் அளவிலான சக்கரங்கள் தான் இந்த ஜெடிபி வெர்ஷனிலும் பொருத்தப்பட்டுள்ளது. கார்களின் முன் மற்றும் பின் சக்கரங்கள் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் ஆகியவை பிரேக்கிங் தேவைக்காக முறையே வழங்கப்பட்டுள்ளன.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

உட்புற கட்டமைப்பில் டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் முற்றிலும் கருப்பு நிற தீமை பெற்றுள்ளன. தொடர்ந்து இருக்கைகளுக்கு உயர் ரக லெதர் மற்றும் ஸ்டீயரிங்கிற்கு அலுமினியத்திலான துடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

ஹர்மன் 8 ஸ்பீக்கர் கனெட்டிவிட்டியை பெற்ற உயர் ரக இன்ஃப்பொடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது பெரிய கவனத்தை ஈர்க்கிறது.

டாடாவின் இந்த புதிய டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் புதிய நிறம், தேர்வு மற்றும் ஸ்போர்டி தோற்றத்தில் வந்திருப்பது பல கார் ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

ஹேட்ச்பேக், காம்பேக்ட் செடான் மாடல்களில் சமகாலக்கட்டத்திற்கு ஏற்றவாறு அம்சங்களுடன் இந்த இரண்டு கார்களும் வெளிவந்திருப்பது, இது எப்போது விற்பனைக்கு வரும் என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

பயன்பாட்டில் இருக்கும் பல மாடல்களில் ஸ்போர்ட் வெர்ஷனை டாடா அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இன்டிகா ஸ்போர்ட் 2002ம் ஆண்டில் வெளியானது. விஸ்டா எஸ் 2012ம் ஆண்டும் போல்ட் ஸ்போர்ட் 2016ம் ஆண்டும் வெளியாயின.

டிகோர் ஜெடிபி காரை விற்பனைக்கு கொண்டு வரும் முடிவில் டாடா..!!

இருந்தாலும் ஸ்போர்ட் வெர்ஷன் மாடல்கள் என்னவோ டாடாவிற்கு பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. டாடாவின் டிகோர் ஜெடிபி கார் நிச்சயம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil: Tata Tigor JTP Launch Details; Expected Price, Specs, Features & Images. Click for Details...
Story first published: Saturday, February 17, 2018, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X