ரூ. 7.53 லட்சம் ஆரம்ப விலையில் டாடா ஜெஸ்ட் காரின் சிறப்பு ப்ரீமியோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

டாடாவின் ஜெஸ்ட் ப்ரீமியோ சிறப்பு எடிசன் கார் இந்தியாவில் ரூ. 7.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

ஜெஸ்ட் கார் 85,000 யூனிட்டுகளை கடந்து விற்பனையானதை சிறப்பிக்கும் விதமாக இந்த சிறப்பு எடிசனை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ சிறப்பு எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த காம்பேக்ட் செடான் காரின் டாப்-வேரியன்ட் மாடலான எக்ஸ்.டி-க்கு கீழ் ஜெஸ்ட் ப்ரீமியோ பொசிஷன் செய்யப்பட்டுள்ளது.

சராசரியான ஜெஸ்ட் காருடன் ஒப்பிடும் போது, 13 வித கூடுதலான அம்சங்கள் டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ கார் வழங்கப்பட்டுள்ளது.

டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ சிறப்பு எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கும் இந்த கார் டூயல் டோனிலான கிளாஸி பிளாக் ரூஃப், பியானோ பிளாக் செய்யப்பட்ட ஓ.ஆர்.வி.எம், மற்றும் உட்புறத்தில் டேன் ஃபினிஷ் மிட் டேஷ்ஃபோர்டு போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ சிறப்பு எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

டைட்டேனியம் க்ரே மற்றும் பிளாட்டினம் சில்வர் போன்ற இரண்டு புதிய நிற தேர்வுகளுடன் டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ கார் விற்பனைக்கு வந்துள்ளது.

காரின் பின்புறத்தில் பியானோ பிளாக் நிறத்திலான பூட் லிட் கவர்ந்திழுக்கிறது. அதில் இந்த சிறப்பு எடிசனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ சிறப்பு எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

வெளிப்புறத்தில் ஜெஸ்ட் ப்ரீமியோ காரின் அப்டேட்டுகள் என்று பார்க்கும் போது மல்டி-ரிஃபிளக்ட் செய்யக்கூடிய முகப்பு விளக்குகள், பியானோ பிளாக் நிறத்திலான ஹூடு ஸ்ட்ரிப் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ சிறப்பு எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

1.3 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் கொண்ட இந்த கார் 74 பிஎச்பி பவர் மற்றும் 190 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.

டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ சிறப்பு எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஜெஸ்ட் எக்ஸ்.எம் வேரியன்டில் உள்ள அதே கட்டமைப்புகள் தான் ப்ரீமியோ எடிசன் மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி நேவிகேஷனுடன் கூடிய ஹர்மன் தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டமும் அடங்கும்.

டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ சிறப்பு எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

டாடாவின் டிகோர் போன்ற மாடல் கார்களுடன் ஒப்பிடும் போது ஜெஸ்ட் மிகவும் பழைய மாடல் தான். ஆனால் அதிலிருக்கும் கேபின் வசதி உட்பட மற்ற கட்டமைப்புகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஜெஸ்ட் காரை ஈர்க்கச்செய்யும் வசதியாக உள்ளது.

டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ சிறப்பு எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவில் டாடா ஜெஸ்ட் கார் மாருதி டிசையர், ஃபோக்ஸ்வேகன் ஏமியோ, புதிய ஹோண்டா அமேஸ் மற்றும் ஃபோர்டு ஏஸ்பையர் கார்களுக்கு சரிநிகர் போட்டியாக உள்ளது.

டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ சிறப்பு எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த காரால், ஜெஸ்ட் மாடலுக்கான விற்பனை திறன் மேலும் அதிகரிக்கும் என்று டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ சிறப்பு எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

டாடா டிகோர் சிறந்த விற்பனை திறனை பெரும்பட்சத்தில், ஜெஸ்ட் காருக்கான சந்தை நிலவரம் தற்போதைக்கு சரியாது என்பதே டாடா நிறுவனத்தின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும்... #டாடா #tata
English summary
Read in Tamil: Tata Zest Premio Edition Launched In India Prices Start At Rs 7.53 Lakh. Click for Details...
Story first published: Monday, March 5, 2018, 16:11 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark