மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு பெரிய டச்ஸ்கிரீன் சிஸ்டம்... விலை விபரம் உள்ளே!!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு 12.1 அங்குல திரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை லாக்ஸோ ஆர்பிஎஸ் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

By Saravana Rajan

அதிக தொழில்நுட்ப வசதிகள் நிரம்ப பெற்ற மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியை கூற முடியும். இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கான பிரம்மாண்ட திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு பெரிய டச்ஸ்கிரீன் சிஸ்டம்... விலை விபரம் உள்ளே!!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் சென்டர் கன்சோல் அமைப்பானது அருவியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. அருவி கொட்டுவது போலவே டேஷ்போர்டின் மேலிருந்து கீழே இறங்கும் இந்த அமைப்பில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஏசி கட்டுப்பாட்டு பட்டன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு பெரிய டச்ஸ்கிரீன் சிஸ்டம்... விலை விபரம் உள்ளே!!

இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு 12.1 அங்குல திரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை லாக்ஸோ ஆர்பிஎஸ் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொடுதிரை சாதனத்தை பார்ப்பதற்கு டெஸ்லா மின்சார கார்களில் இடம்பெறும் தொடுதிரை சாதனத்தை போன்றே இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு பெரிய டச்ஸ்கிரீன் சிஸ்டம்... விலை விபரம் உள்ளே!!

M-XUV500 Tesla என்ற பெயரில் இந்த சாதனம் குறிப்பிடப்படுகிறது. ஆன்ட்ராய்டு 7.0 சாஃப்ட்வேர் அடிப்படையில் இயங்குகிறது. இந்த சாதனம் 3ஜி இன்டர்நெட்டை சப்போர்ட் செய்யும். வைஃபை ஹாட்ஸ்பாட் மூலமாகவும் இணைய வசதியுடன் தொடர்புபடுத்த முடியும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு பெரிய டச்ஸ்கிரீன் சிஸ்டம்... விலை விபரம் உள்ளே!!

இந்த சாதனத்தில் யுஎஸ்பி போர்ட், புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. ரேடியோ மற்றும் எச்டி வீடியோக்களை சப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது. நேவிகேஷன் வசதி, சிடி மற்றும் டிவிடிகளை இயக்கும் வசதியும் பெற்றிருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு பெரிய டச்ஸ்கிரீன் சிஸ்டம்... விலை விபரம் உள்ளே!!

இந்த சாதனத்தில் 2 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 32 ஜிபி மெமரியையும் பெற்றிருக்கிறது. எனவே, இந்த சாதனத்திலேயே பாடல்கள் மற்றும் திரைப்படங்களை பதிவு செய்து வைக்க முடியும். காரின் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இந்த சாதனத்தின் தொடுதிரை மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்.

இந்த சாதனத்தில் கார் எஞ்சின் தொழில்நுட்பம் மற்றும் இயக்கத் தகவல்களையும் பெற முடியும். சர்வீஸ் ரிமைன்டர் வசதியும், சிறப்பான ஒலி துல்லியத்தை தரும் தொழில்நுட்பத்தையும் இந்த சாதனம் பெற்றிருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு உயர்தர அனுபவத்தை வழங்கும். இந்த சாதனம் ரியர் வியூ கேமராவையும் சப்போர்ட் செய்யும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு பெரிய டச்ஸ்கிரீன் சிஸ்டம்... விலை விபரம் உள்ளே!!

ரூ.69,999 விலையில் இந்த புதிய எம்-எக்ஸ்யூவி500 டெஸ்லா இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் காரின் மதிப்பு உயர்த்தும் விஷயமாக மட்டுமின்றி, பல்வேறு வசதிகளை ஒருங்கே எளிதாக பெற வழிவகுக்கும்.

Source: Laxo Orbis Pvt Ltd.

More from DriveSpark

Article Published On: Monday, May 21, 2018, 12:49 [IST]
English summary
Tesla-Like Touchscreen System For Mahindra XUV500: Details.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+