ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கிமீ தூரம் செல்லும் டெஸ்லா டிரக்... என்னங்க சொல்றீங்க!!
அதிசக்திவாய்ந்த மின்சார கார்களை அறிமுகம் செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்த டெஸ்லா நிறுவனம் அடுத்து வர்த்தக மின்சார வாகனப் பிரிவிலும் களமிறங்க உள்ளது. கடந்த ஆண்டு முதல் மாடலாக புதிய மின்சார டிரக்கை
அதிசக்திவாய்ந்த மின்சார கார்களை அறிமுகம் செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்த டெஸ்லா நிறுவனம் அடுத்து வர்த்தக மின்சார வாகனப் பிரிவிலும் களமிறங்க உள்ளது. கடந்த ஆண்டு முதல் மாடலாக புதிய மின்சார டிரக்கை அறிமுகம் செய்தது.

டிரக் வரலாற்றில் புதிய சரித்திரத்தை எழுதப் போகும் இந்த மின்சார டிரக் குறித்து தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வியப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் ஆச்சரியத்தை மேலும் கூட்டுவதாக இருக்கிறது.

ஆம். இந்த புதிய மின்சார டிரக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 1,000 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் செல்லும் திறன் படைத்ததாக இருக்கும் என்பதுதான் தகவல். மின்சார வாகனங்களில் இருக்கும் மிகப்பெரிய நடைமுறை சிக்கல், பேட்டரியை சார்ஜ் செய்து கொண்டு அதிக தூரம் பயணிக்க முடியாது என்பதே காரணமாக இருக்கிறது.

பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான கால விரயமும், அதற்கான கட்டமைப்பு வசதிகளும் பின்னடைவாக இருக்கிறது. இந்த சூழலில், ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 1,000 கிமீ தூரம் இந்த டிரக் பயணிக்கும் என்பது வியப்பூட்டும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

ஆரம்ப கட்ட தகவல்களின்படி இந்த டிரக்கின் பேட்டரியை சார்ஜ் செய்தால் 805 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது 966 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பதுதான் ஆச்சரியத்தையும், ஆவலையும் கூட்டி இருக்கும் விஷயம்.

டெஸ்லா மின்சார டிரக் விற்பனைக்கு வரும்போது டீசல் டிரக்குகள் வழக்கொழிந்து போகும் நிலை ஏற்படும். டீசல் டிரக்குகளால் ஏற்படும் கடும் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் டெஸ்லா மின்சார டிரக்குகளால் தவிர்க்கப்படும். அதிக தூரம் பயணிப்பது மட்டுமில்லாமல், செயல்திறனிலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் டெஸ்லா மின்சார டிரக் அசத்தலாக இருக்குமாம்.

இந்த டிரக் அதிகபட்சமாக 36 டன் வரை எடை சுமந்துத செல்லும் திறனை பெற்றிருக்கும். முழுமையாக பாரம் ஏற்றப்பட்ட நிலையிலும், இந்த டிரக் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 20 நொடிகளில் தொட்டுவிடும். அதாவது, பாரத்துடன் இணைக்கப்படும் ட்ரெயிலரை அனாயசமாக இழுத்துச் செல்லும் வல்லமையை பெற்றிருக்கும்.

சாதாரண டீசல் டிரக்குகள் 0- 100 கிமீ வேகத்தை தொடுவதற்கு 60 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். பாரம் இல்லாத நிலையில், டெஸ்லா டிரக் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 5 வினாடிகளில் தொட்டுவிடுமாம். அதாவது, சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான செயல்திறனை பெற்றிருக்கும்.

டெஸ்லா மாடல் எஸ் பி100டி மாடல் மின்சார காரில் பயன்படுத்தப்படும் அதே மின்சார மோட்டார்கள்தான் இந்த டிரக்கிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. அதேநேரத்தில், 4 மின்சார மோட்டார்கள் இந்த டிரக்கில் பொருத்தப்பட்டு இருக்கும். புகாட்டி சிரோன் ஹைப்பர் காரைவிட இந்த டிரக்கின் காற்று உராய்வினால் ஏற்படும் பின்னோக்கு இழுவிசை குறைவானதாக இருக்குமாம்.

டெஸ்லா நிறுவனத்தின் புதிய சார்ஜர்கள் மூலமாக இந்த டிரக்கின் பேட்டரியை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 643 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். இதனால், இந்த டிரக்கிற்கான வர்த்தக வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கும்.

இந்த டிரக்கின் ஓட்டுனர் அமரும் காக்பிட் பகுதி மிக நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும். மேலும், தானியங்கி முறையில் செல்லும் ஆட்டோ பைலட் வசதியையும் பெற்றிருக்கும். எனவே, டிரக்குகளின் நீண்ட தூர பயணங்களில் புதிய அத்யாயத்தை இந்த டெஸ்லா மின்சார டிரக்குகள் எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, குண்டு துளைக்காத கண்ணாடிகள் மற்றும் அணுகுண்டு வெடிப்புகளின்போது கூட உட்புறத்தில் பாதிப்பு ஏற்படுத்தாத விசேஷ தடுப்பு அமைப்புகளுடன் இந்த டிரக் தயாரிக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா செமி டிரக் இரண்டு மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. 966 கிமீ தூரம் பயணிக்கும் திறனை அளிக்கும் பேட்டரி பொருத்தப்பட்ட மாடல் இந்திய மதிப்பில் ரூ.1.21 கோடி விலையிலும், 483 கிமீ தூரம் பயணிக்கும் மாடல் ரூ.1.01 கோடி விலையிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








