அட்டகாசமான வசதிகளுடன் புது மாடல் அறிமுகம்.. இனி டாடா விங்கரில் 15 பேர் சௌகரியமாக பயணிக்கலாம்..
15 பேர் பயணம் செய்யும் வகையில், புதிய டாடா விங்கர் 15எஸ், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சௌகரியமான பயணத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் இதன் சிறப்பம்சம், விலை குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
15 பேர் பயணம் செய்யும் வகையிலான, புதிய டாடா விங்கர் 15எஸ், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சௌகரியமான பயணத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் இதன் சிறப்பம்சங்கள், விலை குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டாடா விங்கர் 15எஸ் (Tata Winger 15S), லான்ச் செய்யப்பட்டுள்ளது. இதில், 15 பேர் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். இதன்மூலமாக தனது கமர்ஷியல் வெய்கில் லைன் அப்பை (commercial vehicle line-up), டாடா நிறுவனம் வலுவாக்கி கொண்டுள்ளது.

இந்த செக்மெண்டில், போர்ஸ் டிராவலர் (Force Traveller) உடன், புதிய டாடா விங்கர் 15எஸ் நேரடியாக போட்டியிடும். புதிய டாடா விங்கர் 15எஸ்ஸின் மகாராஷ்டிரா எக்ஸ் ஷோரூம் விலை 12.05 லட்ச ரூபாய் முதல் தொடங்குகிறது.

இதில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இருக்கைகளின் ஒவ்வொரு வரிசையிலும் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் (USB charging Point), இன்டியூஜ்வல் ஏசி வெண்ட்ஸ் (individual AC vents), புஸ்பேக் இருக்கைகள் (push back seats) என பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த சூழலில், 15 பேர் பயணம் செய்யும் வகையில் லான்ச் செய்யப்பட்டுள்ள புதிய டாடா விங்கர் 15எஸ், ஒரு திருப்புமுனை வாய்ந்த தயாரிப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

டூர் மற்றும் டிராவல் ஆபரேட்டர்களை, புதிய டாடா விங்கர் 15எஸ் வெகுவாக கவரும். பயணிகளுக்கு சௌகரியம், டூர் மற்றும் டிராவல் ஆபரேட்டர்களுக்கு பொருளாதார ரீதியிலான பலன் என 2 தனித்துவமான அம்சங்கள் கலந்த கலவையாக, புதிய டாடா விங்கர் 15எஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

5458 எம்எம் நீளம் கொண்ட புதிய டாடா விங்கர் 15எஸ், 15 இன்ச் வீல்களில் இயங்கும். இதன் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 180 எம்எம். லக்கேஜ் கெபாசிட்டி 600 லிட்டர்கள். இதன் இன்டர்னல் உயரமான 6.3 இன்ச், கேபினில் பயணிகளின் ஸ்மூத்தான மூவ்மெண்டை உறுதி செய்கிறது.

இதன் மோனோகோயிக் கட்டுமானம், என்விஎச் எனப்படும் மிக குறைந்த அளவிலான சப்தம், அதிர்வு மற்றும் ஹார்ஸ்னெஸ்ஸை (Noise, Vibration and Harshness-NVH) உறுதி செய்கிறது. ஆன்டி ரோல் பார்கள் உடனான இன்டிபென்டன்ட் ப்ரண்ட் சஸ்பென்ஸன் மற்றும் ரியரில் உள்ள ஹைட்ராலிக் ஷாக் அப்ஸர்பர்கள், சௌகரியமான பயணத்திற்கு உத்திரவாதம் வழங்குகின்றன.

புதிய டாடா விங்கர் 15 எஸ்ஸில், 2.2 லிட்டர் DiCOR டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 98 பிஎச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த வல்லது. டூர் மற்றும் டிராவல் செக்மெண்டிற்கு என புதிய டாடா விங்கர் 15 எஸ் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் விற்பனை முதலில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கப்படுகிறது. இதன் பின்னர் வருங்காலத்தில் படிப்படியாக நாடு முழுவதும் புதிய டாடா விங்கர் 15 எஸ் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








