Just In
- 10 min ago
ஜனவரி முதல் நிஸான் கார்களின் விலையும் உயர்கிறது
- 20 min ago
மாசு உமிழ்வு அளவீடு கருவிகளுடன் 2020 மஹிந்திரா பலேரோ பிஎஸ்6 சோதனை ஓட்டம்...
- 1 hr ago
எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்
- 2 hrs ago
புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!
Don't Miss!
- Finance
எச்சரிக்கும் ADB வங்கி.. இந்திய பொருளாதார வளர்ச்சி 5.1%மாக வீழ்ச்சி காணும்..!
- News
மாவட்ட நிர்வாகிகள் கையில் முடிவு... பொன்.ராதாகிருஷ்ணன் புதிய முயற்சி
- Technology
அசத்தலான இந்த நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!
- Movies
லண்டன் போலீசாரிடம் சிக்கி திணறிய ரஜினி ஹீரோயின்.. சரியான நேரத்தில் சென்று காப்பாற்றிய விமல்!
- Lifestyle
மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்… நீங்களே ஆச்சிரியப்படுவீங்க…
- Sports
பலம் குறைந்த ஒடிசா - ஹைதராபாத் மோதும் போட்டி.. வெற்றிக்கு போராட இரு அணிகளும் ரெடி!
- Education
Pariksha Pe Charcha 2020: பிரதமர் மோடியுடன் கலந்துரையாட ஓர் வாய்ப்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறும் 40 ரூபாய்க்கு ஆசைப்பட்ட கார் டிரைவரால் 40 லட்சத்தை இழந்த குடும்பம்... வைரலாகும் ஷாக் வீடியோ
வெறும் 40 ரூபாய்க்கு ஆசைப்பட்ட கார் டிரைவரால், 40 லட்ச ரூபாயை குடும்பம் ஒன்று பரிதாபமாக இழந்துள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப திருடு போகும் வாகனங்களின் எண்ணிக்கையும் மறுபுறம் அதிகரித்து கொண்டுள்ளது. பல அதிநவீன மற்றும் நூதனமான யுக்திகளை பயன்படுத்தி, கொள்ளையர்கள் வாகனங்களை திருடுகின்றனர்.

அதுமட்டுமின்றி வாகனங்களின் முக்கியமான உபகரணங்களையும், வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பொருட்களையும் மிகவும் நூதனமான முறையில் கொள்ளையர்கள் திருடி செல்கின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த சூழலில் காரின் டிக்கியில் வைக்கப்பட்டிருந்த 40 லட்ச ரூபாயை, 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, மிகவும் நூதனமான முறையில் கொள்ளையடித்து சென்றுள்ளது. இதற்காக மர்ம கும்பல் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 40 ரூபாய்தான்.

நாட்டின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் வாகன உரிமையாளர்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. 3 பேர் கொண்ட அந்த கும்பல், வெறும் 40 ரூபாயை பயன்படுத்தி, 40 லட்ச ரூபாயை எப்படி கொள்ளையடித்தனர்? என இனி பார்க்கலாம்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரை சேர்ந்த குடும்பம் ஒன்று, தங்களது ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி வகை காரில், கடந்த சில நாட்களுக்கு முன் நகைகள் வாங்குவதற்காக, நாட்டின் தலைநகர் டெல்லிக்கு வந்திருந்தனர்.

பின்னர் பிரபலமான நகை கடை ஒன்றின் முன்பாக காரை நிறுத்தி விட்டு, அனைவரும் உள்ளே சென்றனர். நகைகடைக்குள் அவர்கள் அனைவரும், ஆர்வத்துடன் வித்தியாசமான நகை டிசைன்களை பார்வையிட்டு கொண்டிருந்தனர்.
MOST READ:'விதிமீறினாலும் அபராதம் விதிக்காதீர்கள்' போலீசுக்கு வந்த புதிய உத்தரவு!!!

ஆனால் டிரைவர் மட்டும் காரிலேயே இருந்தார். அத்துடன் காரின் டிக்கியில் பேக் ஒன்று இருந்தது. அதில், 40 லட்ச ரூபாய் வைக்கப்பட்டிருந்தது. நகைகளை வாங்கி முடித்த பின் பணத்தை எடுத்து கொள்ளலாம் என அந்த குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.

அப்போதுதான் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கு வந்து, பணத்தை கொள்ளையடிக்கும் தங்கள் திட்டத்தை அரங்கேற்ற தொடங்கியது. ஒரு சில நிமிடங்களில் தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, 40 லட்ச ரூபாய் இருந்த பேக்கை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

3 பேரில் முதலாவது நபர், காரின் டிக்கியின் அருகே நின்று கொண்டு, செல்போனில் பேசி கொண்டே அங்கும் இங்கும் நடமாடி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இரண்டாவது நபர், டிரைவர் சீட்டிற்கு அருகே சென்று, 40 ரூபாய் மதிப்பிலான தாள்களை, முன்பக்க சக்கரத்திற்கு அருகே வேண்டுமென்றே சிதற விட்டார்.

பின்னர் கார் கண்ணாடியை தட்டி, பணத்தை நீங்கள் கீழே சிதற விட்டு விட்டீர்கள் என டிரைவரிடம் கூறினார். உடனடியாக கதவை திறந்து கொண்டு கீழே இறங்கிய டிரைவர், சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றார்.

அந்த நேரத்தில் காரின் டிக்கியின் அருகே நின்று கொண்டிருந்த முதலாவது நபர், டிக்கியை திறந்து, 40 லட்ச ரூபாய் வைக்கப்பட்டிருந்த பேக்கை எடுத்து கொண்டு அங்கிருந்த நழுவினார். அப்போது மூன்றாவது நபர், காரின் டிரைவரை கண்காணித்து கொண்டே இருந்தார்.

டிரைவர் பின்னால் திரும்பி பார்த்தால் முதலாவது நபருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, அவர் டிரைவரை உற்று கவனித்து கொண்டே இருந்தார். ஆனால் டிரைவர் பின்னால் திரும்பி பார்க்கவே இல்லை. இதனால் 40 லட்ச ரூபாய் பரிதாபமாக பறிபோனது.

இந்த சம்பவங்கள் எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அந்த வீடியோ காட்சி, தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
டெல்லியை சேர்ந்த 'தக் தக்' என்ற கும்பல்தான், இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. வாகனங்களையும், வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடிப்பதையே இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதற்காக இது போன்ற நூதன வழிமுறைகளை அவர்கள் கையாள்கின்றனர். கடந்த சில நாட்களாக வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்த 'தக் தக்' கொள்ளை கும்பல், தற்போது மீண்டும் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளனர்.

இதுபோன்ற கொள்ளையர்களிடம் இருந்து தப்ப வேண்டுமானால், காரின் முன் மற்றும் பின் இருக்கைகளில் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் வைக்காதீர்கள். அப்படியே வைக்க வேண்டும் என்றாலும், இருக்கைகளுக்கு அடியே மிகவும் பாதுகாப்பாக மறைத்து வையுங்கள்.

அத்துடன் காரின் கதவுகளை லாக் செய்யாமல் எங்கும் சென்று விடாதீர்கள். காரின் கதவுகள் லாக் செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை சோதித்து பார்ப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். எப்போதும் இதனை பின்பற்றலாம்.

அப்போதுதான் இத்தகைய கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வாகனத்தையும், வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பொருட்களையும் பாதுகாக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.