மழை வெள்ள நீரில் நீங்கள் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க...

இந்தியாவில் வானிலை எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு வருடம் மழை காலத்தில் வறட்சியாக இருக்கும், அடுத்த வருடம் அடாத மழை விடாமல் பெய்யும் அவ்வாறான நேரங்களில் சாலைகளில் தங்கள் தேங்கி நிற்பதும்

இந்தியாவில் வானிலை எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு வருடம் மழை காலத்தில் வறட்சியாக இருக்கும், அடுத்த வருடம் அடாத மழை விடாமல் பெய்யும் அவ்வாறான நேரங்களில் சாலைகளில் தங்கள் தேங்கி நிற்பதும் அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்வது வாடிக்கைதான்.

மழை வெள்ள நீரில் நீங்கள் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க...

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த மழை வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படியாக மழையில் வெள்ள நீரில் வாகனங்களை ஓட்டி செல்லும் போது சில விஷயங்களை நீங்கள் கவனமாக கையாள வேண்டும். அந்த மாதிரியான நேரிங்களில் நீங்கள் செய்யக்கூடாத 10 விஷயங்களை நாங்கள் கீழே வழங்கியுள்ளோம்.

மழை வெள்ள நீரில் நீங்கள் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க...

காரில் இருந்து இறங்காதீர்கள்

நீங்கள் காரில் செல்லும் போது மழை வெள்ள நீரில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சிலர் காரில் இருந்து இறங்கி எவ்வளவு உயரத்திற்கு மழை வெள்ள நீர் தேங்கியுள்ளது என்று பார்ப்பார்கள் இது நீங்கள் காரை பாதுக்காக்க சிறந்த வழி என்று சொன்னாலும், வெள்ள நீரில் கழிவு நீர் ஓடைகள் மற்றும் பாதாள சக்கடை குழாய்கள் எல்லாம் நிறைந்திருக்கும் இதனால் நீங்கள் காரில் இருந்து இறங்கி செல்வது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் அந்த நீர் சுத்தம் இல்லாமல் இருப்பதால் உங்களுக்கு நோய் தொற்று ஏற்படலாம்.

மழை வெள்ள நீரில் நீங்கள் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க...

வேகமாக நீருக்குள் செல்லுதல்

தேங்கி கிடக்கும் மழை நீரில் நீங்கள் காரில் வேகமாக சென்றால் தண்ணீர் நீருற்று போல தெறிக்கும் அதை பார்க்க வேடிக்கையாக இருக்கும் ஆனால் அது மிகவும் ஆபத்தானது. நீங்கள் அவ்வாறு செய்ய காரில் அதிக ஆர்.பி.எம்மை கொடுக்க வேண்டும். காருக்கு மேலே தெறிக்கும் ஏதேனும் ஒரு நீர் துளி காரின் இன்ஜினிற்குள் சென்றால் இன்ஜின் முழுமையாக பாழாகி விடும். இது உங்களுக்கு பெரும் செலவை இழத்து வைத்து விடும்.

மழை வெள்ள நீரில் நீங்கள் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க...

மெதுவாக செல்லும் போது கவனம்

வேகமாக செல்லும் போது உங்களுக்கு எப்படி ஆபத்து இருக்கிறதோ அதே போல் மெதுவாக செல்லும் போதும் அதே அளவிற்கு அபத்து இருக்கிறது. எதிரில் ஒரு வாகனம் தண்ணீரில் வரும் போது அந்த வாகனம் ஏற்படுத்தும் அலைகளாலோ அல்லது ரோடுகளில் நிலைகளாக ஆங்காங்கே தண்ணீரில் அளவு நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கலாம். இதை தவிர்க்க நீங்கள் தேங்கி கிடக்கும் தண்ணீரில் தவிர ஓடும் தண்ணீரில் காரை செலுத்துவதை தவிர்க்கலாம். எதிரில் கார் வந்தால் அந்த கார் நீர் இருக்கும் இடத்தை தாண்டியபின் நீங்கள் செல்லலாம்.

மழை வெள்ள நீரில் நீங்கள் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க...

முன்னே போகும் வாகனத்தை பின்பற்றாதீர்கள்

தற்போது நீங்கள் உள்ளூர் இது போன்று பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உங்களுக்கு எந்த இடத்தை பள்ளங்கள், ஓட்டைகள் உள்ளது என்பது தெரியும். ஆனால் வெளியூரில் இது போன்ற நிலையில் சிக்கினால் முன்னாள் செல்லும் காரை பலர் பின்பற்றுவார்கள் ஆனால் அவர்களின் காரின் தன்மை மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்து அந்த கார் செல்கிறது. அதனால் எப்பொழுதும் தண்ணீரில் செல்லும் போது கவனம் தேவை.

மழை வெள்ள நீரில் நீங்கள் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க...

பாதுகாப்பான பகுதியில் பயணம்

பொதுவாக இந்திய ரோடுகள் ரோட்டின் பக்கவாட்டில் தண்ணீர் வழிவது போன்ற டிசைன்னில்தான் இருக்கும். இதனால் தண்ணீர் பெரும்பாலும் ரோட்டின் பக்கவாட்டு பகுதியில் தான் அதிகம் தேங்கியிருக்கும். இதனால் நீங்கள் பெரும்பாலும் ரோட்டின் நடு பகுதியில் பயணிப்பது தான் சரியாக இருக்கும். அதனால் ரோட்டின் நடுபகுதியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள்.

மழை வெள்ள நீரில் நீங்கள் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க...

கார் இன்ஜினை பாழாக்காதீர்கள்

நீங்கள் இவ்வாறாக தண்ணீரில் செல்லும் போது காரின் இன்ஜின் ஆப் ஆகி விட்டால் காரை மீண்டும் ஆன் செய்ய முயற்சிக்காதீர்கள் உங்கள் காரின் இன்ஜினில் தண்ணீர் புகுந்திருக்கும். அடுத்ததாக நீங்கள் காரை மீட்கும் பணியை தான் செய்ய வேண்டும். மாறாக நீங்கள் மீண்டும் மீண்டும் இன்ஜினை ஆன் செய்ய முயன்றால் கம்பஷனில் பெரும் பிரச்னை ஏற்பட்டு உங்களுக்கு பெரும் செலவு வைத்து விடும்.

மழை வெள்ள நீரில் நீங்கள் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க...

மாற்றுவழி

முதலில் நீங்கள் தண்ணீரில் காரை செலுத்துவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் வழக்கமாக செல்லும் பாதையில் தண்ணீர் இருந்தால் மாற்ற வழி குறித்து அறிந்த கொள்ளுங்கள் மாற்ற வழி இருந்தால் அதில் பயணம் செய்யுங்கள். வேறு வழியே இல்லை என்றால் மட்டும் இந்த வழியாக பயணம் செய்ய முடிவு செய்யுங்கள்.

மழை வெள்ள நீரில் நீங்கள் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க...

அக்ஸிலரேட்டரில் இருங்கள்

காரின் முன்புறம் இன்ஜின் இருந்தாலும் காரின் எக்ஸான் பைக் பின்புறம் சற்று கீழே தள்ளிதான் இருக்கும். தண்ணீர் இன்ஜினிற்குள் செல்ல அதிக வாய்ப்புள்ள பகுதி அது தான். அதனால் நீங்கள் தொடர்ந்து அக்ஸிலரேட்டரை கொடுத்து கொண்டே இருந்தால் தண்ணீர் உள்ளே வருவதை தவிர்க்கலாம். பள்ளம் மேடு தட்டுபடுகிறது என் நீங்கள் அக்ஸிலரேட்டரை விட்டு விட்டால் அந்த கேப்பை பயன்படுத்தி காருக்கு தண்ணீர் புகுந்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மழை வெள்ள நீரில் நீங்கள் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க...

காரை நிறுத்தி செக் செய்யுங்கள்

நீங்கள் தண்ணீருக்குள் காரை கொண்டு செல்லும் போது காருக்கு அடியில் ஏதேனும் தண்ணீரில் உள்ள கட்டைகள் கசடுகள் ஏதனும் சிக்க வாய்ப்புள்ளது. அதனால் தண்ணீர் இருக்கும் பகுதியில் இருந்து முழுமையாக வெளியே வந்ததும் காரை நிறுத்தி காருக்கு அடியில் ஏதேனும் சிக்கியுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் காரை சற்று நேரும் ஆன்னில் வைத்து வண்டியை நகற்றாமல் வைத்திருங்கள் இதன் மூலம் ஏற்படும் சூடினால் தண்ணீர் பெரும்பாலும் வற்றி விடும் இதனால் அதன் பின் கார் பெர்பாமென்ஸ் சிறப்பாக இருக்கும்.

மழை வெள்ள நீரில் நீங்கள் காரில் செல்லும் போது இதை எல்லாம் செய்யாதீங்க...

நீர் வற்றும் வரை காத்திருங்கள்

மேல் கூறியவை எல்லாம் வேறு வழியில்லாமல் தண்ணீர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே. சீக்கரத்தில் தண்ணீர் வெளியேறிவிடும் அதுவரை உங்களுக்கு அவசரம் இல்லை என்றால் நீங்கள் காரை பாதுகாப்பான இடத்தில் காரை நிறுத்தி விட்டு தண்ணீர் வற்றும் வரை காத்திருக்கலாம். இந்த வழி தான் உங்களுக்கு எந்த வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கும். இந்த சில மணி நேர காத்திருப்பு உங்களுக்கு பெரும் பணத்தையும் மிச்சப்படுத்தாலம் நியாபகத்தில் வையுங்கள்.

Most Read Articles
English summary
Things that you dont do while driving in flooded road. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X