இந்த காரின் தேதி கிடைத்தால்தான் இப்போ கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

நல்ல நாள் பார்த்த காலமெல்லாம் மலையேறி, தற்போது ஒரு காரின் தேதி கிடைப்பதை பொறுத்துதான் திருமண நாளே குறிக்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு இளைஞர் மாதம் ரூ.6 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார்.

நல்ல நாள் பார்த்த காலமெல்லாம் மலையேறி, தற்போது ஒரு காரின் தேதி கிடைப்பதை பொறுத்துதான் திருமண நாளே குறிக்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு இளைஞர் மாதம் ரூ.6 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார். அந்த காரின் 'ஸ்பெஷல்' அப்படி.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

டெல்லி ஷாதரா பகுதியை சேர்ந்த இளைஞர் கமல் காஷ்மீரி. இவருக்கு 32 வயதாகிறது. கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட கமல் காஷ்மீரி, டொயோட்டா பார்ச்சூனர் ஒன்றை வைத்துள்ளார். கார்கள் மீது எவ்வளவு ஆர்வம் அதிகமோ, அதே அளவுக்கு பொதுமக்களை மகிழ்விப்பதிலும் கமல் காஷ்மீரிக்கு ஆர்வம் உண்டு.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

எனவே இரண்டு ஆர்வத்தையும் ஒன்றாக கலந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை கமல் காஷ்மீரிக்கு திடீரென உண்டானது. எனவே இது தொடர்பாக நீண்ட நாட்களாக கமல் காஷ்மீரி யோசித்து கொண்டே இருந்தார். ஆனால் எதுவும் பிடிபடவில்லை.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

இறுதியில் பொதுமக்களை மகிழ்விப்பதற்காக தன்னிடம் உள்ள டொயோட்டா பார்ச்சூனர் காரை டான்ஸ் ஆட வைத்தால் என்ன? என்ற யோசனை அவருக்கு உதயமானது. இதனை தனது குடும்பத்தினரிடம் கமல் காஷ்மீரி உடனடியாக தெரிவித்தார். ஆனால் அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

கமல் காஷ்மீரியின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கமல் காஷ்மீரி அதனையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. டொயோட்டா பார்ச்சூனர் காரை டான்ஸ் ஆட வைப்பது என்ற தனது முடிவில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார்.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

பின்னர் ஒரு வழியாக போராடி டொயோட்டா பார்ச்சூனர் காரை அவர் டான்ஸ் ஆடவும் வைத்து விட்டார். ஆம், கமல் காஷ்மீரியின் டொயொட்டா பார்ச்சூனர் கார் தற்போது டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறது. உண்மைதான். நீங்கள் சரியாகதான் படித்துள்ளீர்கள்.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

கமல் காஷ்மீரியின் டொயோட்டா பார்ச்சூனர் கார் தற்போது டான்ஸ்தான் ஆடி கொண்டிருக்கிறது. டான்ஸ் ஆட வேண்டும் என்பதற்காக, டொயோட்டா பார்ச்சூனர் காரில் சில ஆல்டரேஷன்களை கமல் காஷ்மீரி செய்துள்ளார்.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

இதற்கு சுமார் ரூ.7 லட்சம் செலவானது. இந்த பணம் கமல் காஷ்மீரின் ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பு. எனவேதான் அந்த பணம் வீணாகி விடுமோ? என்ற அச்சத்தில், கமல் காஷ்மீரியின் முடிவிற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவ்வாறான விபரீதம் எதுவும் நடக்கவில்லை.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

டான்ஸ் ஆடும் டொயோட்டா பார்ச்சூனர் காரை வைத்து கமல் காஷ்மீரி தற்போது கை நிறைய சம்பாதித்து கொண்டிருக்கிறார். டெல்லி, குர்கான், நொய்டா, மீரட், ஃபரிதாபாத் உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில், கமல் காஷ்மீரியின் டொயோட்டா பார்ச்சூனர் கார் மிகவும் பிரபலம்.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் கமல் காஷ்மீரியின் டொயோட்டா பார்ச்சூனர் கார் தற்போது டான்ஸ் ஆடி அனைவரையும் மகிழ்வித்து கொண்டுள்ளது. இதற்கு கமல் காஷ்மீரி ஒரு நிகழ்ச்சிக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாயை கட்டணமாக பெற்று வருகிறார்.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் நிறைந்து காணப்படும் மாதம் என்றால், கமல் காஷ்மீரியின் காட்டில் அடைமழைதான். அத்தகையை மாதங்களில் சுமார் 25 நிகழ்ச்சிகளில் கமல் காஷ்மீரி கலந்து கொள்கிறார்.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

அவ்வாறெனில் அந்த மாதத்தில் மட்டும் கமல் காஷ்மீரியின் வருமானம் சுமார் 6.25 லட்ச ரூபாய். டான்ஸ் ஆடும் வகையில் டொயோட்டா பார்ச்சூனர் காரை ஆல்டர் செய்வதற்காக கமல் காஷ்மீரி செலவு செய்த தொகையே வெறும் 7 லட்ச ரூபாய் மட்டும்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

நல்ல நாள் பார்த்து திருமண தேதியை குறித்தது எல்லாம் அந்தக்காலம். தற்போது டெல்லி பகுதியில் ஒரு சிலர், கமல் காஷ்மீரியினுடைய டான்ஸ் ஆடும் டொயோட்டா பார்ச்சூனர் காரின் தேதி கிடைப்பதை பொறுத்துதான் திருமண நாள் குறிக்கின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

இதுகுறித்து கமல் காஷ்மீரி கூறுகையில், ''ஒரு முறை எனது டொயோட்டா பார்ச்சூனர் காரில் பயணித்து கொண்டிருக்கையில் திடீரென பிரேக் பிடித்தேன். அப்போது கார் உடனே 'ஜம்ப்' ஆனது. கார் டான்ஸ் ஆடியதை போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தியது.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

இதனை அனைவரும் பார்த்து கொண்டிருந்தனர். இதன் காரணமாகதான் டான்ஸ் ஆடும் வகையில் காரை ஆல்டர் செய்தால் என்ன? என்ற யோசனை எனக்குள் உருவானது. எனது கார் மூலமாதான் பொதுமக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

எனது கார் டான்ஸ் ஆடும் வீடியோக்களை அவர்கள் சமூக வலை தளங்கள் மூலமாகவும் பார்க்கின்றனர். அதனை என்னிடமும் தெரிவிக்கின்றனர். எனது கார் மூலமாக நான் நன்கு பிரபலம் அடைந்து விட்டேன்'' என்றார்.

இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

இளைஞர் கமல் காஷ்மீரி குறித்தும், டான்ஸ் ஆடும் அவரது டொயோட்டா பார்ச்சூனர் கார் குறித்தும் IndianExpressOnline உருவாக்கி வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

டான்ஸ் ஆடும் டொயோட்டா பார்ச்சூனர் காரில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்களின் விலை மட்டும் சுமார் 2 லட்ச ரூபாய். இந்த காரின் பம்பரும் மிகவும் விலை உயர்ந்தது. இதுதவிர இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் துபாயில் இருந்து பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Monday, November 26, 2018, 12:07 [IST]
English summary
This Guy Spent Rs.7 Lakh To Make a Toyota Fortuner ‘Dance’: Earns Rs.25k Per Performance. Read In Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+