வாவ்... அம்பாசடரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த கஸ்டமைஸ் நிறுவனம்!

Written By:

இந்திய ஆட்டோமொபைல் துறையில் அழுத்தமான வரலாற்றை பதிவு செய்திருக்கும் அம்பாசடர் கார் பற்றி எழுதும்போது சாகா வரம் பெற்ற மாடலாக நாம் குறிப்பிடுவதுண்டு. காயலாங்கடைக்கு போகும் நிலையில் உள்ள அம்பாசடர் காரை கூட புதிது போல் மாற்றி பயன்படுத்த முடியும் என்பதே அதற்கு காரணம்.

வாவ்... அம்பாசடரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த நிறுவனம்!

இந்த கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில் அம்பாசடர் காரை மிக அட்டாகசமாக மெருகேற்றி அம்பாசடர் காதலர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது கோழிக்கோட்டை சேர்ந்த செராமிக் புரோ என்ற கார் மெருகேற்றும் நிறுவனம். அம்பாசடர் மீதான காதலை அதிரிக்கச் செய்யும் விதத்தில் மிக நேர்த்தியாக கஸ்டமைஸ் பணிகளை செய்துள்ளனர்.

வாவ்... அம்பாசடரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த நிறுவனம்!

பாட்டில் க்ரீன் என்ற விசேஷமான பச்சை வண்ண மெட்டாலிக் பெயிண்ட்டில் அசத்துகிறது இந்த அம்பாசடர். க்ரோம் க்ரில் அமைப்பு வழக்கம்போல் பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த பழைய காரில் சில நவீன கால ஆக்சஸெரீகளையும் சேர்த்துள்ளனர்.

வாவ்... அம்பாசடரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த நிறுவனம்!

பம்பருக்கு கீழே எல்இடி விளக்குகள் பொருத்தி இருக்கின்றனர். அதேபோன்று, பக்கவாட்டில் க்ளியர் லென்ஸ் இன்டிகேட்டர் விளக்குகளும், அலாய் வீல்களும் ஹைலைட்டான விஷயங்கள். மாருதி எஸ்டீம் காரின் ரியர் வியூ மிரர் கண்ணாடிகளை எடுத்து இந்த காரில் பொருத்தி இருக்கின்றனர்.

வாவ்... அம்பாசடரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த நிறுவனம்!

பின்புறத்தில் க்ளியர் லென்ஸ் இன்டிகேட்டர் விளக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், எக்ஸ்கியூட்டிவ் மற்றும் பவர் ஸ்டீயரிங் போன்றவறை காட்டும் பட்டைகளும் பதிக்கப்பட்டு இருக்கின்றன. புகைப்போக்கி குழல் முனையில் க்ரோம் மஃப்ளர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

வாவ்... அம்பாசடரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த நிறுவனம்!

வெளிப்புறத்திற்கு இணையாக உட்புறத்திலும் கஸ்டமைஸ் பணிகளை செய்து அசத்தி இருக்கின்றனர். டேன் லெதர் வண்ண சொகுசு இருக்கைகள், ஸ்டோரேஜ் வசதியுடன் ஆர்ம் ரெஸ்ட், புதிய டேஷ்போர்டு அமைப்பும், அதில் மர அலங்கார வேலைப்பாடுகளும் அசத்துகின்றன.

வாவ்... அம்பாசடரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த நிறுவனம்!

வட்ட வடிவிலான மூன்று ஏசி வென்ட்டுகள் டேஷ்போர்டில் இடம்பெற்று இருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இரண்டாம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரை ஒத்திருக்கிறது. கதவுகளில் பவர் விண்டோஸ் சுவிட்சுகளும் இடம்பெற்று இருக்கின்றன.

வாவ்... அம்பாசடரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த நிறுவனம்!

பழைய ஃபோர்டு ஃபியஸ்ட்டா காரின் ஸ்டீயரிங் வீல் மற்றும் சிடி பிளேயர் ஆகியவையும் இந்த அம்பாசடர் காரின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. பின் இருக்கையும் மாற்றப்பட்டு இரண்டு பேர் வசதியாக அமர்ந்து பயணிக்கும் வகையில் ஹெட்ரெஸ்ட் வசதியுடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

வாவ்... அம்பாசடரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த நிறுவனம்!

இவ்வளவு சிறப்பாக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும் இந்த கார் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று நினைத்தால், அது தவறாக முடிகிறது. ஆம், 1969ம் ஆண்டு மார்க்- II அம்பாசடர் காரையே இவ்வாறு மாற்றி இருக்கின்றனர்.

வாவ்... அம்பாசடரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த நிறுவனம்!

அப்போதைய காலக்கட்டத்தில் அம்பாசடர் மார்க் II மாடலில் 1,489சிசி பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 46 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டது. இந்த கார் மணிக்கு 119 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருந்தது.

வாவ்... அம்பாசடரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த நிறுவனம்!

வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் இந்த கஸ்டமைஸ் பணிகளை செய்துள்ளனர். மேலும், செராமிக் கோட்டிங் மூலமாக இந்த கார் மெருகேற்றப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட அம்பாசடர் கார்களில் மிக சிறப்பான கஸ்டமைஸ் பணிகளுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கும் காராக இதனை குறிப்பிடலாம்.

Via- Cartoq

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசல் எஞ்சின் இணைக்கப்பட்ட ரயில்கள் உண்மையிலேயே மின் மோட்டாரின் உந்து சக்தியில்தான் ஓடுகின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம், இதுகுறித்து சற்று விரிவாகவே பார்ப்போம்.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

முக்கிய வழித்தடங்களை தவிர்த்து, பெரும்பாலான வழித்தடங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்கள்தான் இயக்கப்படுகின்றன. ஆனால், டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்கள் உண்மையிலேயே டீசல் எஞ்சினில் ஓடுவதில்லை. மாறாக, டீசல் ரயில் எஞ்சினில் இருக்கும் மின் மோட்டார் துணையுடன்தான் இயங்குகின்றன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசல் ரயில் எஞ்சின்களில் சக்திவாய்ந்த மிகப்பெரிய ஜெனரேட்டர் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த ஜெனரேட்டர்தான் உண்மையில் டீசல் எரிபொருளில் இயங்குகிறது.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

இந்த ஜெனரேட்டர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாக சக்கரங்களில் இருக்கும் ராட்சத மின் மோட்டார்கள் ரயில் சக்கரத்தை ஓடச் செய்கின்றன. இதனை டிராக்ஷன் மோட்டார் என்றும் குறிப்பிடுவர்.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசலில் இயங்கும் ஜெனரேட்டர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மாறு மின்சாரம் கன்வெர்ட்டர் கருவியின் மூலமாக நேர் மின்சாரமாக மாற்றப்பட்டு டிராக்ஷன் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

சக்கரங்கள் சுழல்வதற்கு தேவையான டார்க் எனப்படும் முறுக்கு விசையை இந்த மின்மோட்டார்கள் வழங்குகின்றன. எனவே, டீசல் எஞ்சின் என்று குறிப்பிட்டாலும், இவற்றை முறையாக டீசல் எலக்ட்ரிக் என்று கூறுவதுதான் சரியான பதமாக சொல்ல முடியும்.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசல் எஞ்சின்களில் 12 முதல் 16 சிலிண்டர்கள் கொண்ட ராட்சத எஞ்சின் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டீசல் எஞ்சின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலமாக எஞ்சினின் சக்கரங்களுக்கு இடையிலான ஆக்சில்களில் தலா ஒரு மின் மோட்டார் வீதம் 6 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

சில டீசல் எஞ்சின் ரயில்களில் 4 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த டீசல் எஞ்சின்களில் சக்கரங்கள் நேரடியாக டீசல் எஞ்சின் மூலமாகவே இயக்கப்பட்டன. இதனை டீசல் ஹைட்ராலிக்ஸ் என்று குறிப்பிட்டனர்.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

ஆனால், டீசல் கார் உள்ளிட்ட வாகனங்களில் இருப்பதுபோலவே, டிரானஸ்மிஷன் அமைப்பு மற்றும் கியர்பாக்ஸ் மூலமாக இயக்கப்பட்டன. இது மிகவும் சிக்கலானதாக இருந்ததுடன், பராமரிப்புக்கும் உகந்ததாக இல்லை. மேலும், பழுது ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் இருந்தன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

ஆனால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் எலக்ட்ரிக் ரயில் எஞ்சின்களில் கியர்பாக்ஸ் அமைப்பு கிடையாது. ஆக்சில்களில் பொருத்தப்பட்டு இருக்கும் ராட்சத மின் மோட்டார்கள் மூலமாக சக்கரங்கள் நேரடியாக இயக்கப்படுகின்றன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

இதனால், பராமரிப்பு மிகவும் குறைவாக இருப்பதுடன், மின் மோட்டார்களை பொருத்தியதால் அதிக டார்க் திறனையும் பெற முடிகிறது. இதனால், எஞ்சினின் இழுவைத் திறன் மிகச் சிறப்பாக இருக்கிறது.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

நீண்ட கால அடிப்படையில் டீசல் எஞ்சின்களுக்கான எரிபொருள், பராமரிப்பு செலவு போன்றவை அதிகமாக இருக்கிறது. எனினும், மின்சார ரயில் எஞ்சின்களை இயக்குவதற்கு தேவைப்படும் மின்மயமாக்கப்பட்ட பாதைக்கான கட்டமைப்பு செலவுகளை ஒப்பிடும்போது இது சிறந்ததாகவே இருக்கிறது.

இதனால், டீசல் ரயில் எஞ்சின் பயன்பாட்டு சிறுக சிறுக குறையும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த தசாப்தத்தில் நீராவி ரயில் எஞ்சின் போன்றே, டீசல் ரயில் எஞ்சினும் அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்க்கும் காட்சிப் பொருளாக மாறும் நிலை உள்ளது.

English summary
This Restored Ambassador Proves Old Is Gold.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark