டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி என்ற சக்திவாய்ந்த கார் மாடல்களின் அறிமுக நிகழ்ச்சி கோவையில் நேற்று இரவு நடந்தது. அதில், டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்க

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி என்ற சக்திவாய்ந்த கார் மாடல்களின் அறிமுக நிகழ்ச்சி கோவையில் நேற்று இரவு நடந்தது. அதில், டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. அந்த தகவல்களையும், இந்த கார்களின் எமது பிரத்யேக படங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

டாடா கார்களின் சக்திவாய்ந்த மாடல்களை உருவாக்குவதற்காக கோவையை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு கூட்டணி அமைத்தது. இந்த புதிய கூட்டணி நிறுவனம் ஜேடி ஸ்பெஷல் வெஹிக்கிள்ஸ் (JTSV) என்ற பெயரில் துவங்கப்பட்டது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

இந்த நிலையில், சாதாரண டியாகோ மற்றும் டிகோர் கார்களின் அடிப்படையிலான சக்திவாய்ந்த கார் மாடல்களை ஜேடிஎஸ்வி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி என்ற பெயர்களில் இந்த சக்திவாய்ந்த கார் மாடல்கள் அழைக்கப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார்கள் முதல்முறையாக பார்வைக்கு வந்தன.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

இந்த நிலையில், இந்த இரண்டு புதிய கார் மாடல்களின் வெளியீட்டு நிகழ்ச்சி கோவையில் நேற்று இரவு நடந்தது. இதில், இந்த இரு புதிய கார் மாடல்களின் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

சாதாரண டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் பரிமாணத்தையே இரண்டு புதிய மாடல்களும் பெற்றிருக்கின்றன. நீள, அகல, உயரத்தில் மாற்றங்கள் இல்லை. ஆனால், கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் தரை இடைவெளி 4 மிமீ குறைக்கப்பட்டு, 166 மிமீ என்ற அளவில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

சாதாரண டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில், மிரட்டலான பம்பர் அமைப்பு, புதிய க்ரில் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன. இரட்டை அறையுடன் கூடிய ஹெட்லைட், க்ரில் அமைப்பில் ஜேடிபி பிராண்டு பேட்ஜ் இடம்பெற்றிருக்கிறது. பானட்டில் ஏர்ஸ்கூப் இடம்பெற்றிருக்கிறது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

இந்த கார்களில் சில்வர் மற்றும் கருப்பு வண்ணத்திலான 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சைடு மிரர்கள் சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருப்பதும், கூரைக்கு தனி வண்ணம் கொடுக்கப்பட்டு இருப்பதும் சிறப்பு. ரூஃப் ஸ்பாய்லர் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் கிளியர் லென்ஸ் கொண்ட டெயில் லைட் க்ளஸ்ட்டர், இரட்டைக் குழல் புகைப்போக்கி அமைப்பு மற்றும் ஜேடிபி பேட்ஜ் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மொத்தத்தில் மிக மிக வசீகரமாக தோற்றமளிக்கிறது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

இந்த இரண்டு கார்களின் உட்புறத்திலும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்திலான இருக்கைகள் பிரிமீயமாக இருக்கிறது. ஏர் வென்ட்டுகளிலும் சிவப்பு நிற ஆக்சென்ட் அலங்கார பாகங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஸ்டீயரிங் வீல் கவர் சிவப்பு நிற தையல் வேலைப்பாட்டுடன் இருப்பதும் சிறப்பு.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

இந்த கார்களில் அலுமினியம் பெடல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹார்மன் நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் கனெக்ட்நெக்ஸ்ட் ஹெட் யூனிட் மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

இந்த கார்களில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த எஞ்சினுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், இந்த கார்களின் சஸ்பென்ஷன் அமைப்பில் கடினமாக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, அகலமான டயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

இந்த இரண்டு ஜேடிபி கார் மாடல்களிலும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடல்களைவிட கியர் ரேஷியோவில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால், செயல்திறனும் சிறப்பாக இருக்கும். இந்த கார்கள் 0 - 100 கிமீ வேகத்தை 10 வினாடிகளில் எட்டிவிடும்.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

இந்த இரண்டு ஜேடிபி மாடல்களிலும் ஸ்போர்ட் மற்றும் சிட்டி ஆகிய இரண்டு டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைக்கப்பட்டு இருப்பதால், சிறப்பான கையாளுமையை வழங்கும் என ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தெரிவிக்கிறது.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

இந்த கார்களில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் சிஸ்டத்தில் கூட மாறுதல்கள் செய்யப்பட்டு அதிக துல்லியமாக செயல்படும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அகலமான டயர்கள் மற்றும் சிறப்பான பிரேக்கிங் சிஸ்டம் இந்த கார்களின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்தும்.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

நேற்று இரவு டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் கார்களின் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட நிலையில், இன்று டிரைவ்ஸ்பார்க் டீம் உள்பட பல முன்னணி ஆட்டோமொபைல் தளங்களின் பத்திரிக்கையாளர்கள் இந்த கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விரைவில் இந்த கார்களின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

Most Read Articles
English summary
Jayem Tata Performance (JTP) reveals the Tiago JTP and Tigor JTP for the Indian market. Technical specifications for both cars have been revealed. The Tata Tiago JTP and Tigor JTP have been one of the most awaited launches in 2018.
Story first published: Thursday, October 25, 2018, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X