தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 அதிநவீன பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 450 புதிய பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர சென்னை, கோவையில் வெகு விரைவில் 100 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 450 புதிய பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர சென்னை, கோவையில் வெகு விரைவில் 100 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

தமிழக தலைநகர் சென்னை மற்றும் கோவையில், எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம், தமிழக போக்குவரத்து துறை மற்றும் லண்டன் சி-40 முகமைக்கு இடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், கடந்த மார்ச் மாதம் கையெழுத்தானது.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

தமிழக போக்குவரத்து துறை எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க லண்டன் சி-40 முகமை உதவி செய்யும். இதன் ஒரு பகுதியாக, லண்டன் சி-40 முகமையை சேர்ந்த பிரதிநிதிகள், கடந்த மாதம் 21-24 வரை சென்னையில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

அப்போது லண்டனில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வருமாறு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அழைப்பு விடுத்தனர். இதன்பேரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் டேவிதார் ஆகியோர் சமீபத்தில் லண்டன் சென்றனர்.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

எலெக்ட்ரிக் பஸ்கள் எவ்வாறு இயக்கப்படுகிறது? என்பதை ஆய்வு செய்வதற்காக அவர்கள் லண்டன் பயணம் மேற்கொண்டனர். இந்த சூழலில், கரூரில் நேற்று (செப்.20) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

அப்போது அவர் கூறுகையில், ''சென்னை மற்றும் கோவையில் வெகு விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக சென்னையில் 80 எலெக்ட்ரிக் பஸ்களையும், கோவையில் 20 எலெக்ட்ரிக் பஸ்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

நான் லண்டன் சென்றிருந்தபோது, டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் (Transport For London-TFL) அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன் (TFL எனும் அரசு அமைப்புதான், கிரேட்டர் லண்டனில் பஸ்களை இயக்கி வருகிறது).

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதில் உள்ள சவால்கள் குறித்தும், அதிக அளவிலான சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த சூழலில், சி-40 முகமையை சேர்ந்த குழுவினர் மீண்டும் தமிழகம் வருகை தரவுள்ளனர்.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

சென்னை மற்றும் கோவையில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவது தொடர்பாகவும், சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ வேண்டிய இடங்களை கண்டறிவது தொடர்பாகவும் அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர். சென்னை, கோவையில் இயக்கப்படவுள்ள எலெக்ட்ரிக் பஸ்களின் விலை தலா 2 கோடி ரூபாய்'' என்றார்.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

சென்னை, கோவையில் இயக்கப்படவுள்ள 100 எலெக்ட்ரிக் பஸ்கள் தவிர்த்து, தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில், 450 புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

ஒரு காலத்தில் தமிழகம்தான் போக்குவரத்து துறையில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது. ஆனால் அதிகாரிகள் மத்தியில் தலைவிரித்தாடிய ஊழல், லஞ்சம் காரணமாக, நாளடைவில் தமிழக போக்குவரத்து துறை நஷ்டத்தில் பயணிக்க தொடங்கியது.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிநவீன வசதிகளுடன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் நிலையோ பரிதாபமாக உள்ளது. ஏனெனில் தமிழகத்தில் ஓட்டை, உடைசல் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

ஆனால் இந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக, ஸ்லீப்பர், ஏசி, கழிவறை வசதிகளுடன் கூடிய அதிநவீன பஸ்கள், கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. அத்துடன் இன்னும் 15 நாட்களில் 450 புதிய பஸ்கள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

இதுதவிர சென்னை மற்றும் கோவையில் எலெக்ட்ரிக் பஸ்களை வெகு விரைவில் இயக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனெனில் எலெக்ட்ரிக் பஸ்கள் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்கலாம். அத்துடன் இந்த பஸ்கள் சுற்றுச்சூழலுக்கும் மாசுபாட்டை ஏற்படுத்தாது.

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு..

இது தாமதமான நடவடிக்கைதான் என்றாலும், தமிழக அரசின் முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் புதிய பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

உலகம் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Friday, September 21, 2018, 16:27 [IST]
English summary
TN Govt to soon Launch 100 Electric Buses in Chennai, Coimbatore. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+