ரூ.1.34 கோடியில் ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ரூ.1.34 கோடி மதிப்பிலான ஜாகுவார் காரை விவசாயி ஒருவர் வாங்கியுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக, தங்க இழைகளால் உருவாக்கப்பட்ட இனிப்புகளை அனைவருக்கும் வழங்கியுள்ளார்!

ரூ.1.34 கோடி மதிப்பிலான ஜாகுவார் காரை விவசாயி ஒருவர் வாங்கியுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக, தங்க இழைகளால் உருவாக்கப்பட்ட இனிப்புகளை அனைவருக்கும் வழங்கியுள்ளார்! இந்த ஆடம்பரமான கொண்டாட்டம் குறித்த பிரம்மிப்பூட்டும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள தயரி கயோன் பகுதியை சேர்ந்த விவசாயி சுரேஷ் போகலே. நம் நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் வசதி குறைவானவர்களாக உள்ளனர். ஆனால் சுரேஷ் போகலே அப்படி அல்ல. செல்வ செழிப்பு மிக்கவர்.

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அதை நிரூபணம் செய்யும் வகையில், ஜாகுவார் எக்ஸ்ஜே (Jaguar XJ) லக்ஸரி காரை சுரேஷ் போகலே சமீபத்தில் வாங்கினார். இந்த காரின் விலையை கேட்டால், சுரேஷ் போகலே உண்மையில் விவசாயிதானா? என்ற சந்தேகம் எழுவது நிச்சயம்.

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஆம், ஜாகுவார் எக்ஸ்ஜே லக்ஸரி காரின் விலை 1.34 கோடி ரூபாய்! காரை வாங்கியதுடன் சுரேஷ் போகலே நின்று விடவில்லை. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்புகளை வழங்கி மிக மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இதன்மூலமாக தற்போது நாடு முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார் சுரேஷ் போகலே. கார், பைக் போன்ற ஏதேனும் ஒன்றை புதிதாக வாங்கினால், இனிப்பு வழங்குவது நமது வழக்கம்தானே. இதில் என்ன பிரம்மாண்டம் இருக்கிறது? என நீங்கள் மைண்ட் வாய்ஸில் நினைப்பது நன்றாக புரிகிறது.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உண்மையில் பிரம்மாண்டம் இருக்கவே செய்கிறது. சுரேஷ் போகலே வழங்கியது சாதாரண இனிப்புகள் கிடையாது. தங்க இழைகளால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக இனிப்பு! இனிப்புகளில் என்ன பிரம்மாண்டம் என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் சிந்தனைக்கு தற்போது விடை கிடைத்திருக்கும்.

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இனி நடந்த விஷயங்களை எல்லாம் சுரேஷ் போகலேவின் மகன் தீபக் போகலே விவரிக்கிறார். ''சமீபத்தில் ஜாகுவார் எக்ஸ்ஜே லக்ஸரி காரை நாங்கள் வாங்கினோம். இதனை ஊரே மெச்சும் வகையில் மிக மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாட முடிவு செய்தோம்.

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஜாகுவார் கார்கள் 'ராயல் லுக்' கொண்டது. அதன் 'லக்ஸரி' அம்சங்கள் மிகவும் பிரசித்தம். எனவே ஜாகுவார் காரின் 'ராயல் லுக்' மற்றும் 'லக்ஸரி' ஆகியவற்றுடன் எங்களின் கொண்டாட்டம் பொருந்தி போக வேண்டும் என முடிவு செய்தோம்.

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இதற்காக நாங்கள் தேர்வு செய்ததுதான் தங்க இழைகளால் தயாரிக்கப்பட்ட பேடா. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், ரக்ஸா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, தனது சகோதரருக்கு தங்க இழைகளால் உருவாக்கப்பட்ட பிரத்யேக பேடாவை வழங்கினார் என்ற செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்தோம்.

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எனவே நாமும் அதையே செய்தால் என்ன? என்று எங்களுக்கு தோன்றியது. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த ஐடியா மிகவும் பிடித்திருந்தது. எனவே பிரபலமான இனிப்பு நிறுவனம் ஒன்றை அணுகி, எங்கள் யோசனையை தெரிவித்தோம். அவர்களும் செய்து தருவதாக ஒப்புக்கொண்டனர்.

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தங்க இழைகளால் உருவாக்கப்பட்ட ஒரு கிலோ பேடாவின் விலை 7 ஆயிரம் ரூபாய். நாங்கள் மூன்று கிலோ வாங்கினோம். தங்க இழைகளை கொண்டு பிரத்யேக பேடாக்களை உருவாக்க மூன்று நாட்கள் பிடித்தது'' என்றார்.

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இந்தியாவில் சில விவசாயிகள் ஏழ்மையின் பிடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் விவசாயி ஒருவர் ரூ.1.34 கோடி ரூபாய்க்கு கார் வாங்கியதுடன், தங்க இழைகளால் உருவாக்கப்பட்ட இனிப்புகளை வழங்கி கொண்டாடி கொண்டிருக்கிறார்.

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எனவே இந்த சம்பவம் சமூக வலை தளங்களில் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. பெரு நகரங்களை ஒட்டி சொந்தமாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் ஓவர் நைட்டில் கோடீஸ்வரர்களாகி விடுகின்றனர். ஏனெனில் அங்கு நிலங்களின் மதிப்பு கோடிகளில் அதிகரித்து கொண்டு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1.34 கோடிக்கு ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி! தங்கத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முன்னதாக சுரேஷ் போகலே வாங்கிய ஜாகுவார் எக்ஸ்ஜே லக்ஸரி காரில், 3 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக, 296 பிஎச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது.

Article Published On: Friday, September 14, 2018, 16:31 [IST]
English summary
To Celebrate Purchase of Jaguar XJ Luxury Car Pune Farmer Gives Golden Pedhas. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+