ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

2018ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகம் விற்பனையான க்ராஸ்ஓவர்/எஸ்யூவி கார்களின் டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தி, மாருதி பிரெஸ்ஸா முதலிடத்தை பிடித்துள்ளது.

By Arun

2018ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகம் விற்பனையான க்ராஸ்ஓவர்/எஸ்யூவி கார்களின் டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தி, மாருதி பிரெஸ்ஸா முதலிடத்தை பிடித்துள்ளது. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

க்ராஸ்ஓவர்/எஸ்யூவி கார்கள் மீதான இந்தியர்களின் அன்பு குறைந்தபாடில்லை. தற்போது வெளியாகியுள்ள, 2018ம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனையான க்ராஸ்ஓவர்/எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை குறித்த 'சேல்ஸ் சார்ட்' அதனை நிரூபணம் செய்யும் வகையில் உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

டாப் 10 பட்டியலில், மஹிந்திரா நிறுவனத்தின் 4 கார்களும், மாருதி சுஸூகி நிறுவனத்தின் 2 கார்களும் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில், ஹூண்டாய், ஃபோர்டு, ஹோண்டா மற்றும் டாடா நிறுவனங்களின் தலா 1 கார்களுக்கும், டாப் 10 பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 14,181 மாருதி சுஸூகி பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்த பட்டியலில், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா மீண்டும் முதலிடத்தை மீட்டெடுத்துள்ளது. இதனால் ஹூண்டாய் கிரெட்டா கார், 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம், 10,423 கிரெட்டா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. எனினும் ஒரு பிரெஸ்ஸா காரை விற்பனை செய்வதன் மூலம் மாருதி சுஸூகிக்கு கிடைக்கும் வருமானத்தை காட்டிலும், ஒரு கிரெட்டா காரை விற்பனை செய்வதன் மூலம் ஹூண்டாய்க்கு கிடைக்கும் வருவாய் அதிகம்.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

அதே நேரத்தில், டாப் 5க்குள் இருப்பதை மஹிந்திரா பொலிரோ மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொண்டுள்ளது. இந்த முறை மஹிந்திரா பொலிரோ காருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்தம் 6,559 பொலிரோ கார்களை விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

நீண்ட காலமாக போராடி வந்த மாருதி சுஸூகி எஸ் க்ராஸ், ஒருவழியாக இம்முறை 4வது இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸூகி நிறுவனம் மொத்தம் 5,308 எஸ் க்ராஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. பேஸ்லிப்ட் அறிமுகம், விலை குறைப்பு ஆகியவையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்திருக்கும் கார் ஃபோர்டு எகோ ஸ்போர்ட். கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், போர்டு நிறுவனம் மொத்தம் 4,040 எகோ ஸ்போர்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 500, டியூவி 300 கார்களும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ காருக்கு, இந்த பட்டியலில் 6வது இடம் கிடைத்துள்ளது. மொத்தம் 3,876 ஸ்கார்பியோ கார்களை, மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் எக்ஸ்யூவி 500 காருக்கு 9வது இடமும், டியூவி 300 காருக்கு 10வது மற்றும் கடைசி இடமுமே கிடைத்துள்ளன.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 2,766 எக்ஸ்யூவி 500 கார்களையும், 2,091 டியூவி 300 கார்களையும் விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் அந்த கார்களுக்கு முறையே 9 மற்றும் 10வது இடங்கள்தான் கிடைத்துள்ளன.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

முன்னதாக பட்டியலில் 7வது இடத்தை பெற்றுள்ள கார் டாடா நெக்ஸான். சப் 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான நெக்ஸான் மட்டுமே டாடா நிறுவனம் சார்பில் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே கார். மொத்தம் 3,840 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

8வது இடத்தை பிடித்திருக்கும் கார் ஹோண்டாவின் சாப்ட் க்ராஸ்ஓவரான டபிள்யூஆர்-வி. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்தம் 3,386 டபிள்யூஆர்-வி கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

அதே நேரத்தில் டொயோட்டா பார்ச்சூனர் கார் 11வது இடத்தை பிடித்துள்ளது. இது பிரீமியம் எஸ்யூவி வகை கார் ஆகும். இந்த பட்டியலில் உள்ள மற்ற கார்களை காட்டிலும் இது விலை உயர்ந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் மொத்தம் 1,856 பார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

இதன் விலையை கணக்கிடும்போது, அதிக அளவிலான பார்ச்சூனர் கார்கள் விற்பனையாகியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். க்ராஸ்ஓவர்/எஸ்யூவி மார்க்கெட் ஏற்கனவே கடும் போட்டியில் உள்ளது. இந்த சூழலில், மஹிந்திரா, டாடா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய கார்களை களமிறக்கவுள்ளதால், வரும் நாட்களில் இந்த மார்க்கெட் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 க்ராஸ்ஓவர்/எஸ்யூவி கார்களை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

மாருதி பிரெஸ்ஸா - 14,181

ஹூண்டாய் கிரெட்டா - 10,423

மஹிந்திரா பொலிரோ- 6,559

மாருதி எஸ் க்ராஸ்- 5,308

ஃபோர்டு எகோ ஸ்போர்ட்- 4,040

மஹிந்திரா ஸ்கார்பியோ - 3,876

டாடா நெக்ஸான் - 3,840

ஹோண்டா டபிள்யூஆர்-வி- 3,386

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 - 2,766

மஹிந்திரா டியூவி 300 - 2,091

Most Read Articles
English summary
Top 10 Best Selling SUVs/Crossovers for July 2018. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X