உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

இந்தியாவில் சாலைகள் எல்லாம் மோசம், ஏராளமான விபத்துக்கள் நடக்கிறது, தினமும் அதிகமான பேர் விபத்தில் பலியாகின்றனர் என இந்தியர்கள் மத்தியில் பரவலாக பேச்சு நிலவுகிறது.

இந்தியாவில் சாலைகள் எல்லாம் மோசம், ஏராளமான விபத்துக்கள் நடக்கிறது, தினமும் அதிகமான பேர் விபத்தில் பலியாகின்றனர் என இந்தியர்கள் மத்தியில் பரவலாக பேச்சு நிலவுகிறது.

உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

ஆனால் உலகில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் நீங்கள் நினைக்கும் அளவிற்கு விபத்துக்கள் நடக்கவில்லை. இந்தியாவை விட வேறு சில நாடுகளில்தான் அதிக விபத்துக்கள் நடக்கிறது.

உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

இதில் ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு 18 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர். சில நாடுகளில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக இருக்கிறது.

உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

அந்த அடிப்படையில் உலகில் அதிகமாக விபத்துக்களில் பலி கொண்ட நாடுகளில் டாப்10 நாடுகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம் வாருங்கள்.

உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

10.ஈராக்

32/1லட்சம்

ஈராக்கில் அதிகமான ரோடுகள் சாலை விபத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். முக்கியமாக நெடுஞ்சாலை 80 என அழைக்கப்படும் குவைத் நகரம் மற்றும் ஈராக்கின் பஸாரா பகுதியை இணைக்கும் ரோடு அதிக அளவில் விபத்திற்குள்ளாகிறது. இந்த ரோட்டை ஹைவே ஆஃப் டெத் எனவும் அழைக்கிறார்கள். இந்த நாட்டில் 1 லட்சம் பேருக்கு 32 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர்.

உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

9.டாமினிகன் ரீபப்ளிக்

32/1லட்சம்

இந்த நாட்டில் பகட்டான சாலைகள், மோசமாக நடந்து கொள்ளும் டிரைவர்கள், போக்குவரத்து விதிகளை மதிக்காதால் அதிக விபத்து நடக்கிறதாம். இந்த நாடு கடந்தாண்டு இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்துள்ளது. இந்தாண்டு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நாட்டில் இந்தாண்டு 1 லட்சம் பேருக்கு 32 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர்.

உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

8. மாலவி

32/1லட்சம்

இந்த நாட்டில் மோசமான சாலைகள், வாகனங்கள் மோசமான பராமரிப்பு, போதுமான தெரு விளக்கு வசதியின்மை இருக்கிறதாம். மேலும் பள்ளம் மேடு நிறைந்த ரோடுகள், நடந்து செல்பவர்கள், விலங்குகள், விதியை மீறும் வாகனங்களால் அதிகமான விபத்துக்கள் நடக்கிறதாம். மேலும் இந்த நாட்டில் ஒரு விநோதம் இருக்கிறது 4 வீல் டிரைவ் அல்லது ஆல் வீல் டிரைவ் கார்கள் அதிகமாக திருடப்படுகிறதாம். இந்த நாட்டில் 1 லட்சம் பேருக்கு 32 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர்.

உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

7. காங்கோ

34/1லட்சம்

இந்த நாடு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பதில் மூல பொருட்களை அதிகம் கொண்ட நாடு. இந்த நாட்டு மக்களிடம் மோசமான டிரைவிங் பழக்கம், தரமில்லாத டிரைவிங் விதிகள் இருக்கிறதாம். மேலும் நாட்டில் பெரும்பாலான ரோடுகள் அவ்வப்போது போலீஸ் அல்லது ராணுவத்தால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுமாம். இந்த நாட்டில் 1 லட்சம் பேருக்கு 34 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர்.

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

6. வெனிசுலா

35/1லட்சம்

இந்த நாட்டில் நீங்கள் சாலையில் பாதுகாப்பை விட உங்கள் வாகன பாதுகாப்பே பெரிய விஷயம்தான். இந்த நாட்டில் நீங்கள் சாலைகளில் பயணம் செய்யும் போது வழிப்பறி கொள்ளையர்கள் அதிகம் இருக்கிறார்களாம். சில கொள்ளையர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஏந்தி கூட கொள்ளையடிக்கிறார்களாம். சில நேரங்களில் இதனால் கூட சாலை விபத்து நடக்கிறது. இந்த நாட்டில் 1 லட்சம் பேருக்கு 35 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர்.

உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

5.சுவிட்சர்லாந்து

36/1லட்சம்

இந்நாட்டிற்கு செல்வது பலருக்கு கனவாக இருக்கிறது. ஆனால் இந்த நாட்டில் எப்படி நடந்து கொள்கிறார்கள் தெரியுமா? இந்த நாட்டில் சாலைகளில் லைட் வசதிகள் அவ்வளவு அதிகமாக இல்லை. அங்கு ஓட்டும் டிரைவர்களும் மிக வேகமாக ரேஷ் டிரைவிங்கில் ஈடுபடுவார்களாம். மேலும் சாலைகளில் கால்நடைகள் அதிகமாக நிற்குமாம். இது போக குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது என பல மோசமான பழக்கங்கள் இங்கு அதிகமாக உள்ளதாம். இங்கு ஆண்டிற்கு 1 லட்சம் பேருக்கு 36 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர்.

உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

4. சூடான்

36/1லட்சம்

சூடான் நாட்டின் அடிப்படை வசதிகளே மிக குறைவு தான். அவர்களிடம் எப்படி தரமான சாலைகளை எதிர்பார்க்க முடியும். அந்நாட்டு சாலைகள் மிக மோசமாக பராமரிக்கப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எல்லாம் அங்கு கிடையாதாம். இரவு நேரம் அங்கு பயணம் செய்தால் திகில் பயணம்தானாம். இந்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 36 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர்.

உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

3. ஈரான்

38/1லட்சம்

அமெரிக்கா அரசு அந்நாட்டில் இருந்து ஈரான் செல்பவர்களை பயணத்தை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள் என சொல்கிறதாம். ஏன் என்றால் அந்நாட்டில் உள்ள சாலைகள் பயணிப்பதற்கு லாயக்கு இல்லை என அமெரிக்கா கருதுகிறது. அங்கு வாகனம் ஓட்டுபவர்களுக்கு சாலை விதிகளை மதிக்கவே தெரியவில்லையாம். இந்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 38 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர்.

உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

2. தாய்லாந்து

44/1லட்சம்

தாய்லாந்து நாட்டிற்கு நம்மில் பலர் டூர் செல்வதை கனவாக வைத்திருப்போம். ஆனால் அங்கு நடக்கும் சாலை விபத்துக்களால் 1 லட்சம் பேருக்கு சுமார் 44 பேர் பலியாகின்றனராம். தாய்லாந்தில் டிரைவராக பணியாற்றுபவர்கள் நிச்சயம் உயிரை கையில் பிடித்துக்கொண்டேதான் வாகனத்தை ஓட்ட வேண்டுமாம்.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

உலகில் அதிகம் விபத்து நடக்கும் டாப்-10 நாடுகளின் பட்டியல்

1.நாம்பியா

45/1லட்சம்

நாம்பியா நாட்டில் சாலை விபத்துக்களில் பலியானவர்களின் எண்ணிக்கையில் ஒரு லட்சத்திற்கு 45 பேர் பலியாகியுள்னர். இது தான் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் சாலை விபத்துக்களினால் பலியாகும் மக்களை கொண்ட நாடு. இதற்கு முக்கியமான காரணம் இந்த நாட்டில் உள்ள சாலைகள்தான். அப்பகுதி நிலபரப்பு சாலைகளுக்கு ஏற்றது இல்லை என கூறப்படுகிறது.

More from DriveSpark

புதிய ஜாவா மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Friday, November 23, 2018, 17:17 [IST]
English summary
Top 10 countries with deadliest road accident. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+