2017-ல் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார்கள்!

கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு சிறப்பான வருடமாகவே அமைந்தது. அதனை பிரதிபலிக்கும் விதத்தில், கடந்த ஆண்டு கூகுளில் வாகனங்கள் குறித்த தேடல் இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. அதில், அதிகம் தேடப்பட்ட கார், பைக் குறித்த தகவல்களை கூகுள் வெளியிட்டு இருக்கிறது. கார் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

10. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ

10. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ

இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட கார்கள் குறித்த டாப்-10 பட்டியலில் ஆச்சரியம் தரும் வகையில், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் இடம்பிடித்துள்ளது. மிக சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றான ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் குறித்து இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர்.

இந்த காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 189.4 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்டது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிடும்.

09. வால்வோ எக்ஸ்சி60

09. வால்வோ எக்ஸ்சி60

கடந்த ஆண்டில் வால்வோ எக்ஸ்சி60 கார் குறித்த தகவல்களை இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடி இருக்கின்றனர். கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சொகுசு கார் இந்தியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த காரில் 1969சிசி டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 233 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஜெர்மானிய சொகுசு கார் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை தரும் வகையில், ஸ்வீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் அதிரடி காட்ட துவங்கி இருக்கிறது.

08. மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ

08. மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கார் குறித்து இந்தியர்கள் அதிகம் அலசி உள்ளனர். இந்த கார் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.1 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் ஹேட்ச்பேக் சொகுசு காரின் செடான் கார் மாடலாக வந்ததும், மிக சவாலான விலையில் வந்ததால், இந்த காரை தீவிரமாக தேடி இருக்கின்றனர். இந்தியர்கள். இந்த கார் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதும் இதற்கு வலு சேர்க்கும் அம்சம்.

Recommended Video

High Mileage Cars In India - DriveSpark
07. மாருதி சுஸுகி செலிரியோ

07. மாருதி சுஸுகி செலிரியோ

கடந்த ஆண்டு கூகுள் தேடலில் 7வது இடத்தில் மாருதி செலிரியோ கார் உள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதியுடன் வந்த இந்த காருக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். விற்பனையில் மாருதிக்கு தொடர்ந்து சிறப்பான பங்களிப்பையும், வாடிக்கையாளர்களுக்கு நல்ல மதிப்பையும் கொடுத்து வருகிறது.

06. டொயோட்டா எட்டியோஸ்

06. டொயோட்டா எட்டியோஸ்

கடந்த ஆண்டு கூகுள் தேடலில் டொயோட்டா எட்டியோஸ் செடான் கார் 6வது இடத்தை பிடித்துள்ளது. வாடகை கார் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்ற இந்த காருக்கு இந்தியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து தேடி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. அதிக இடவசதி, சரியான விலையில் கிடைப்பதே இதற்கு மிகச் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகிறது.

Trending On Drivespark:

05. மாருதி சுஸுகி இக்னிஸ்

05. மாருதி சுஸுகி இக்னிஸ்

கடந்த ஆண்டு மாருதி இக்னிஸ் கார் 5வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது. இளைஞர்களை கவரும் பல அம்சங்களுடன் இந்த காரை மாருதி களம் இறக்கியது. குறிப்பாக, நகர்ப்புற இளைய சமுதாயத்தினரை கவரும் பல அம்சங்களை பெற்றிருக்கிறது.

இந்த கார் பெட்ரோல், டீசல் மாடலில் கிடைப்பதுடன், மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

04. டாடா நெக்ஸான்

04. டாடா நெக்ஸான்

கடந்த ஆண்டு கூகுள் தேடலில் டாடா நெக்ஸான் எஸ்யூவி 4வது இடத்தை பிடித்துள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த காம்பேக்ட் ரக எஸ்யூவியின் டிசைன், வசதிகள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்நத்ுள்ளது.

இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

03. டாடா ஹெக்ஸா

03. டாடா ஹெக்ஸா

கடந்த ஆண்டு கூகுள் தேடலில் டாடா ஹெக்ஸா கார் 3வது இடத்தை பிடித்துள்ளது. ஆரியா காரின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட இந்த கார் டிசைனில் எம்பிவி போலவும், தொழில்நுட்ப அம்சங்களில் எஸ்யூவி போலவும் இருப்பது சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.

இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டுவிதமான மாடல்களில் கிடைக்கிறது. வசதிகளிலும் சிறப்பானதாகவும், போட்டியாளர்களைவிட சரியான விலையில் கிடைப்பதும் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது.

02. ஜீப் காம்பஸ்

02. ஜீப் காம்பஸ்

கடந்த ஆண்டு இந்திய கார் மார்க்கெட்டில் பெரும் ஆவலைத் தூண்டிய மாடல் ஜீப் காம்பஸ் எஸ்யூவி. அமெரிக்காவின் ஜீப் நிறுவனத்தின் மிக குறைவான விலை பிரிமியம் எஸ்யூவியாக வந்ததே, இதன் மீதான ஆவலுக்கு காரணம். கூகுள் தேடலில் இந்த எஸ்யூவி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

அட்டகாசமான டிசைன், சவாலான விலையில் வந்த புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு எதிர்பார்த்தது போலவே, சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

01. புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்

01. புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்

கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் மாடல் என்ற பெருமையை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் பெற்றிருக்கிறது. புத்தம் புதிய வடிவமைப்புக்கு மெருகேறி இருக்கும் இந்த கார் கடந்த ஆண்டு டாப் 10 பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது. அடுத்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Trending On Drivespark:

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
English summary
Top 10 Most Searched Cars In India 2017.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X