மாருதி பிரிஸ்ஸா முதல் ஆடி கியூ5 மாடல் வரை... 2018ல் விற்பனைக்கு வரும் டாப் 10 புதிய எஸ்யூவி கார்கள்

Written By:
Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

இந்தியாவில் பயணிகள் ரக கார்கள் செக்மென்ட் பெரிய வளர்ச்சியை பெற்று வருகின்றன. குறிப்பாக 2017 ஏப்ரல் - நவம்பர் வரை இந்த செக்மென்ட் 27 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக விற்பனையாளர்களின் மாதந்திர விற்பனை விவரங்கள் காட்டுகின்றன.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

பயணிகள் ரக வாகன விற்பனையில் எஸ்யூவி-கள் மற்றும் கிராஸோவர் கார்கள் இந்திய சந்தையை பெருமளவில் ஆக்கிரமித்துள்ளன.

இதன்காரணமாக 2018ம் ஆண்டிலும் எஸ்யூவி-கள், கிராஸோவர் கார்கள் விற்பனை கொடி கட்டி பறக்கும் நிலையில் உள்ளது.

2018ல் இந்தியாவில் கால்பதிக்கும் புத்தம் டாப்-10 எஸ்யூவி கார்கள்:

மாருதி பிரிஸ்ஸா பெட்ரோல்

மாருதி பிரிஸ்ஸா பெட்ரோல்

இந்தியாவில் எஸ்யூவி விற்பனையில் முன்னணி மாடல் மாருதி பிரிஸ்ஸா தான். இதன் விற்பனையை மேலும் விரிவுப்படுத்த மாருதி சுஸுகி திட்டமிட்டு வருகிறது.

இதன் காரணமாக பிரிஸ்ஸாவில் விரைவில் பெட்ரோல் மாடலை அந்நிறுவனம் களமிறக்குகிறது. அதற்கான செயல்திறன் பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

மாருதி சுஸுகி, பலேனோ, ஸ்விஃப்ட் மற்றும் இக்னிஸ் கார்களில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் தான் பிரிஸ்ஸாவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜுன், ஜூலை 2018

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 5.5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை

ஹூண்டாய் சப்-ஃபோர் மீட்டர் எஸ்யூவி

ஹூண்டாய் சப்-ஃபோர் மீட்டர் எஸ்யூவி

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் புதிய ரக சப்-ஃபோர் மீட்டர் எஸ்யூவி செக்மென்டை இந்தாண்டில் வெளியிடுகிறது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

கார்லினோ கான்செப்டில் உருவாக்கப்பட்ட கார்களை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் காட்சிப்படுத்தியது. இந்தாண்டில் வெளிவரும் கார்களில் இந்த கான்செப்ட் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

ஹூண்டாய் இந்த காரை 1.2 லிட்டர் அல்லது 1.4 லிட்டர் எஞ்சின் தேவைகளில் வெளியிடலாம் என்று தெரிகிறது. மேலும் இந்த மாடல்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் வெளிவரலாம்.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜுன், ஜூலை 2018

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 9.30 லட்சம் முதல் ரூ. 14.50 லட்சம் வரை

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

2015ல் முதன்முதலாக கிரெட்டா காரை இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய். ப்ரீமியம் ரக செக்மென்டில் வெளியான இந்த கார் தற்போது வரை இந்திய சந்தையில் டாப் விற்பனையில் உள்ளது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

தற்போதைய இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட பம்பர், முகப்பு விளக்குகள், கேஸ்கேடு முன்பக்க கிரில், எல்.இ.டி பகல்நேர விளக்குகள் போன்ற அம்சங்களுடன் ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஜோராகவுள்ளது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டா கார் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் தேர்வுகளில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜூன் - ஜூலை 2018

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 9.30 லட்சம் முதல் ரூ. 14.50 லட்சம் வரை

டட்சன் கோ-கிராஸ்

டட்சன் கோ-கிராஸ்

டெல்லி 2016 ஆட்டோ எக்ஸ்போவில், டட்சன் கோ-கிராஸ் கான்செப்ட் முதன்முதலாக வெளியிடப்பட்டது. விரைவில் இந்தோனேஷியாவிலும் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது.

Trending On DriveSpark Tamil:

ஏர் பேக்ஸ், ஏபிஎஸ் இருந்தாலும் இந்த 5 பொருட்களும் உங்க காருக்கு கூடுதல் அவசியம்... அவை இவைதான்..!!

விலை உயர்ந்த பைக்கில் வந்தவர்கள் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்... பதட்டம்!

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

மஹிந்திராவின் கேயூவி 100 நெக்ஸ்ட் மற்றும் மாருதி சிலேரியோ எக்ஸ் கார்களுக்கு போட்டியாக டட்சன் நிறுவனம் கோ-கிராஸ் காரை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

டட்சன் நிறுவனம் இந்த கிராஸோவர் மாடல் குறித்த தகவல்களை இன்னும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் ’கோ ஹேட்ச்பேக்’ காரில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது டட்சன் கோ+ எம்பிவி காரிலுள்ள 1.5 லிட்டர் எஞ்சின் ஆகியவற்றில் எதாவது ஒன்றை பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2018 ஜனவரி- பிப்ரவரி

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 5.5 லட்சம் முதல் 7.75 லட்சம் வரை

டாடா கியூ501

டாடா கியூ501

டியோகோ ஹேட்ச்பேக், நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் டாடா ஹெக்ஸா கிராஸோவர் மாடல்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பால் டாடா நிறுவனம் ஏக சந்தோஷத்தில் உள்ளது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

அந்த குஷியுடன் டாடா அடுத்து வெளியிடும் கார் கியூ501. ஒரு கோட்நேம் போல இருக்கும் இந்த கார் டாடா சஃபாரி மாடலுக்கு மாற்றாக இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

ப்ரீமியம் தர எஸ்யூவி-யாக தயாராகி வரும் இந்த கார் லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் 2 பிளாட்ஃபாரமின் கீழ் தயாரிக்கப்படுகிறது.

5 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட மாடல்களில் வெளிவரும் இந்த கார், ஆல்-வீல் டிரைவிங் முறையில் இயங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

காம்பேக்ட் எஸ்யூவி-க்கான வரவேற்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், டாடாவின் இந்த புதிய கியூ501 கார் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டஸ்கான் கார்களுக்கு போட்டியாக வெளிவரவுள்ளது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: அக்டோபர் - டிசம்பர் 2018

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை

எம்.ஜி ஜி.எஸ் கான்செப்ட்

எம்.ஜி ஜி.எஸ் கான்செப்ட்

இங்கிலாந்தின் எம்.ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தை சீனாவை சேர்ந்த சயாக் இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்கிறது. கிரெட்டா போட்டியாக புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி காரை எம்.ஜி மோட்டார்ஸ் வெளியிடுவது உறுதியாகியுள்ளது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

கார் தயாரிப்பு பணிகள் குறித்த எந்த தகவலையும் இதுவரை எம்.ஜி மோட்டார்ஸ் வெளியிடவில்லை. அதன் காரணமாக எம்.ஜி மோட்டார்ஸின் கார் ஒரு எஸ்யூவி மாடல் என்பதை தவிர, வேறு செய்திகள் எதுவும் இப்போது வரை வெளிவரவில்லை.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: அக்டோபர் - டிசம்பர் 2018

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 10 லட்சம் முதல் ரூ. 13 லட்சம் வரை

2018 ஹோண்டா ஹெச்.ஆர்.-வி

2018 ஹோண்டா ஹெச்.ஆர்.-வி

ப்ரீமியம் தர கார்கள் தயாரிப்பில் ஹோண்டா முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. இதனால் அது தயாரிக்கும் செடான், ஹேட்ச்பெக் அல்லது கிராஸோவர் என அனைத்து மாடல்களிலும் ப்ரீமியம் தரத்தை இனி எதிர்பார்க்க முடியும்.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

பி.ஆர்-வி மற்றும் சி.ஆர்-வி கார்களுக்கு மத்தியில் புதிய ஹெச்.ஆர்-வி என்ற எஸ்யூவி மாடலை வெளியிட ஹோண்டா ஆயத்தமாகி வருகிறது. இது ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ரெனோ கேப்டூர் கார்களுக்கு போட்டியாக வெளிவரும்.

Trending On DriveSpark Tamil:

பட்டபகலில் கத்தி முனையில் உரிமையாளரை மிரட்டி பஜாஜ் டோமினார் பைக்கை பறித்து சென்ற மர்ம நபர்கள்..!

இந்தியாவில் அம்பாஸிடர் காரை மீண்டும் அறிமுகம் செய்யும் முடிவில் பீஜோ..!!

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

சர்வதேச வாகன சந்தையில் ஹோண்டா ஹெச்.ஆர்-வி காரை 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் திறனில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்தியாவில் வெளிவரும் இந்த காரில் 1.5 லிட்டர் திறன் பெற்ற விடெக் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

மேலும் இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் ஹெச்.ஆர்-வி எஸ்யூவி காரை, பெட்ரோல் மற்றும் டீசல் என இருவேறு தேர்வுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: அக்டோபர் - டிசம்பர் 2018

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை

பிஎம்டபுள்யூ எக்ஸ்3

பிஎம்டபுள்யூ எக்ஸ்3

பிஎம்டபுள்யூ நிறுவனம் இந்தியாவில் மூன்றாவது தலைமுறைக்கான எக்ஸ் 3 காரை வெளியிட தீவிர கதியில் ஆயத்தமாகி வருகிறது. அதற்கு முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிப்படுத்தப்படுகிறது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

பெட்ரோல் மற்றும் டீசல் என இருவேறு தேர்வுகளிலும் வெளிவரும் இந்த எக்ஸ்-3 காரின் உள்கட்டமைப்புகள் மற்றும் வெளிகட்டமைப்புகள் இரண்டும் புதிய தரத்தோடு மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிஎம்டபுள்யூ தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: பிப்ரவரி 2018

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை

ஆடி கியூ5

ஆடி கியூ5

2016 பாரீஸ் மோட்டார் கண்காட்சியில் ஆடி நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான கியூ 5 காரை அறிமுகம் செய்தது. இந்தாண்டில் அந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

பெரிய பிரேம் கிரோம் கிரில், பெரிய அளவிலான காற்றை உள்ளிழுக்கும் வசதிக்கொண்ட அசரடிக்கும் தோற்றத்திலான முன்பக்க பம்பர் ஆகியவை கியூ5 காரில் இடம்பெற்றுள்ளன.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

இந்த புதிய மாடல் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சினை பெற்றிருக்கும். மேலும் இந்த எஞ்சின் 7 ஸ்பீடு எஸ்-ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் குவாட்ரோ ஏடபுள்யூடி உடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வெளிவரும் இந்த கார், நிச்சயம் இந்தியாவில் அதிக விற்பனை திறனை படைக்கும் என ஆடி நிறுவனம் எதிர்பார்க்கிறது.

வெளியீடு: ஜனவரி 18, 2018

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை

மற்ற புதிய கார்கள்:

மற்ற புதிய கார்கள்:

லம்போர்கினி நிறுவனம் ’ஊரஸ்’ என்ற உலகின் முதல் சூப்பர் எஸ்யூவி காரை இந்தாண்டில் வெளியிடுகிறது. ரூ. 3.5 கோடி வரை விலை பெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த கார் நாளை பிரம்மாண்டமாக உலக பார்வைக்கு வருகிறது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

ரெனோ நிறுவனம் டஸ்டர் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை 2018 இறுதியில் வெளியிடுகிறது. புதிய டஸ்டர் காரில் அதிக இடவசதி மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுயிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

தவிர, பார்ப்பதற்கு கண்ணை பறிக்கக்கூடிய வடிவமைப்புடன் ரெனோ நிறுவனம் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தயாரித்து வருகிறது. ரூ. 9 லட்சம் முதல் ரூ. 13 லட்சம் வரை இந்த காருக்கு விலை நிர்ணயம் செய்யப்படலாம்.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

ஹூண்டாய் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இந்தாண்டில் சான்டா ஃபே ஃபேஸ்லிஃப்ட் மற்றும் சி-ஆர் வி ஃபேஸ்லிப்ட் கார்களை முறையே அறிமுகம் செய்கின்றன.

ஆனால் இதுவரை இந்த கார்களின் வெளியீடு குறித்து இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமான தகவல்களை தெரிவிக்கவில்லை.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

மஹிந்திராவும் இந்தாண்டிl காம்பேக்ட் டிவோலி காரை வெளியீட்டு சஸ்பரைஸ் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இந்த காரை மஹிந்திரா சாசாங்யோங் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

வாகன விற்பனையை பொறுத்தவரை இந்தியா மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பலர் செடானிற்கு பதிலாக எஸ்யூவி காரை வாங்க பரிசீலிப்பதும் அதிகரித்து வருகிறது.

இந்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய டாப்- 10 எஸ்யூவி கார்கள்...!!

புதிய ரக கார்களால், இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும். மேலும் இதனால் பல புதிய வாடிக்கையாளர்களையும் வகான நிறுவனங்கள் ஏற்படுத்திக்கொள்ளும்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: Top 10 Upcoming SUVs In India In 2018 Maruti Brezza Petrol Included. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark