பெட்ரோல் விலையை சமாளிக்கும் டாப் 5 மைலேஜ் கார்கள்
இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியாவில் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளளனர்.
இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியாவில் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளளனர். எவ்வாறு பட்ஜெட்டை சமாளிப்பது என ஒவ்வொரு நாளும் சிந்தித்து கொண்டே வருகின்றனர்.

இதன் காரணமாக புதிய கார்கள் வாங்க நினைக்கும் பலர் அதிக மைலேஜ் தரக்கூடிய கார்களை தேடி தேடி தேர்வு செய்ய துவங்கி விட்டனர். சிலர் டீசல் கார் வாங்க சென்றாலும், இன்று டீசல் விலைக்கும் பெட்ரோல் விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

இதனால் டீசல் கார்களை வாங்குவதை விட பெட்ரோல் காரில் சிறந்த மைலேஜ் தரும் கார்களை வாங்கலாம் என பலர் முடிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் அதிக மைலேஜ் தரக்கூடிய ஹெட்ச்பேக் ரக கார்களின் டாப் 5 பட்டியலை கீழே வழங்கியுள்ளார். இதில் காரின் முழு தகவல்களும் உள்ளது. இதை பார்த்து உங்களுக்கு தேவையான காரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ரெனால்டு க்விட் - 25.17 கி.மீ மைலேஜ்
இந்த கார் அறிமுகமானதில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இரண்டு வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது. அதன் தனித்துவமான டிசைன் தான் மக்களை ஈர்க்கிறது.

இதில் 800 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 25.17 கி.மீ. மைலேஜை வழங்குகிறது. ஹெட்ச்பேக் ரக கார்களில் சிறந்த மைலேஜ் தரும் கார் இது தான்.
விலை : ரூ 3.05 லட்சம் - ரூ 5.17 லட்சம் வரை

டட்சன் ரெடி கோ - 25.17 கி.மீ. மைலேஜ்
ரெனால்டு க்விட் காருக்கு நேரடி போட்டியாக விளங்குவது தான் டட்சன் ரெடிகோ இந்த கார் க்விட் காரின் அதே தளத்தில் அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனையில் உள்ளது. இதன் டிசைனும் அட்டகாசமாக உள்ளது. சிட்டிக்குள் பயன்படுத்த சிறந்த கார் இது.

இந்த காரும் 800 சிசி பெட்ரோல் இன்ஜினுடன் 25.17 கி.மீ. மைலேஜை இந்த கார் வழங்குகிறது. இதே மைலேஜ் தான் க்விட் காரிலும் கிடைக்கிறது. இந்த கார் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரை வழங்குகிறது.
விலை : 2.76 லட்சம் -4.33 லட்சம்

மாருதி சுஸூகி ஆல்டோ 800 - 24.7 கி.மீ. மைலேஜ்
மாருதி சுஸூகி ஆல்டோ கார் இந்தியாவில் நீண்டநாட்களாக அதிக விற்பனையில் உள்ள கார். இந்த கார் 24.7 கி.மீ. மைலேஜை வழங்குகிறது. இந்தியாவின் 3வது சிறந்த மைலேஜ் வழங்கும் கார் இது தான்.

நீண்ட நாட்களாக இந்தியர்களின் வருமானத்தை அறிந்து அவர்கள் எளிதில் அனுகும்படியாக இந்த காரின் விலை இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான இந்தியர்கள் முதன் முறையாக வாங்கிய கார் இது வாக தான் இருக்கும்.
விலை: ரூ 2.78 லட்சம் - ரூ 3.67 லட்சம் வரை

மாருதி சுஸூகி ஆல்டோ கே10
மாருதி சுஸூகி ஆல்டோ 800 காரின் மேம்படுத்த ப்பட்ட வெர்சன் தான் இந்த ஆல்டோ கே10 இந்த காரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஆல்டோ மாடலில் நல்ல பெர்பாமென்ஸை விரும்புவோர் இதையும் விரும்புவர்கள் இந்த காரை வாங்கலாம்.

இந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இது 24.07 கி.மீ. மைலேஜை வழங்குகிறது. இது ஆல்டோ 800 காரில் இருந்து 600 மீ மட்டுமே மைலேஜ் குறைவு. ஆனால் இ்நத காரின் பெர்மாமென்ஸிற்காக இதன் விலை அதை விட அதிகம்.
விலை: ரூ 3.62 லட்சம் முதல் - ரூ 4.56 லட்சம் வரை

டாடா டியாகோ
டாடா நிறுவனத்தில் ஹெட்ச்பேக் ரக கார்களில் அதிகமாக விற்பனையாகும் கார் இந்த டியாகோ தான். இந்த கார் ஹெட்ச் பேக் ரக கார்களில் சிறந்த போட்டியாளானாக விளங்குகிறது. இந்த காரின் திறன் வாடிக்கையாளர்களை வியக்க வைக்கிறது.

இந்த கார் 1.2 லிட்டர் ரோவோட்ரோன் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனையில் கலக்கி வருகிறது. இந்த கார் 23.84 கி.மீ. மைலேஜை வழங்குகிறது.
விலை: ரூ 3.67 லட்சம் முதல் ரூ 6.03 லட்சம் வரை

மேலே உள்ள பட்டியலில் இருப்பது தான் ஹெட்ச் பேக் ரகத்தில் டாப் 5 சிறந்த மைலேஜ் கார்கள் என்றாலும் சில கார்கள் இந்த மைலேஜை ஒத்த சற்று குறைவான மைலேஜை வழங்குகிறது. டாடா நேனோ ஜென் எக்ஸ் (23.6 கி.மீ. மைலேஜ்), மாருதி சுஸூகி செலிரியோ (23.1 கி.மீ. மைலேஜ்), மாருதி சுஸூகி பெலெனோ (21.4 கி.மீ. மைலேஜ்), ஹூண்டாய் இயான் (21.1 கி.மீ. மைலேஜ்)
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








