ரூ.10 லட்சம் விலையில் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் டாப் - 6 பட்ஜெட் கார்கள்!!

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் 6 ஏர்பேக்குகள் மற்றும் அதிசிறந்த பாதுகாப்பு வசதியுடன் கிடைக்கும் கார்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப விபத்துக்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களை தேர்வு செய்வது அவசியமாகிறது. குறிப்பாக, விபத்தின்போது உயிர் காக்கும் காற்றுப் பை எனப்படும் ஏர்பேக் மிக முக்கிய பாதுகாப்பு வசதியாக இப்போது கார்களில் இடம்பெற துவங்கி இருக்கிறது.

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் கார்கள்!

விலை உயர்ந்த கார்களில் மட்டுமே கொடுக்கப்பட்ட ஏர்பேக் இப்போது சர்வசாதாரணமாக பட்ஜெட் கார்களிலும் இடம்பெறுகிறது. இந்த நிலையில், சில பட்ஜெட் கார்களில் சொகுசு கார்கள் போன்று 6 ஏர்பேக்குகள் வரை கொடுக்கப்படுகின்றன. அந்த கார்களின் விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ காரின் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. இதுதவிர, இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த வேரியண்ட்டில் கிடைக்கிறது.

 ரூ.10 லட்சம் விலைக்குள் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் டாப் - 5 பட்ஜெட் கார்கள்!!

ஃபோர்டு ஃபிகோ காரில் எஞ்சின் இம்மொபைலைசர், கீலெஸ் சென்ட்ரல் லாக்கிங், வேகத்தை கணித்து கதவுகள் தானாக பூட்டும் வசதி, சைல்டு லாக் உள்ளிட்டவையும் கூடுதலாக இடம்பெற்றிருக்கிறது. ஃபோர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.7.58 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டீசல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.8.48 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அஸ்ட்டா ஆப்ஷனல் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது.

 ரூ.10 லட்சம் விலைக்குள் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் டாப் - 5 பட்ஜெட் கார்கள்!!

இதுதவிர்த்து, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம், எஞ்சின் இம்மொபைலைசர், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், சைல்டு லாக் ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இபிடி பிரேக் தொழில்நுட்பம் இல்லை. பெட்ரோல் அஸ்ட்டா ஆப்ஷனல் வேரியண்ட் ரூ.8.93 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டீசல் அஸ்ட்டா ஆப்ஷனல் மாடல் ரூ.10.28 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

ஃபோர்டு ஆஸ்பயர்

ஃபோர்டு ஆஸ்பயர்

ஃபோர்டு ஃபிகோ காரின் செடான் ரக மாடலான ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டாப் வேரியண்ட்டிலும் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலின் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டுகளில் இந்த வசதி கிடைக்கிறது.

 ரூ.10 லட்சம் விலைக்குள் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் டாப் - 5 பட்ஜெட் கார்கள்!!

இதுதவிர்த்து, இபிடி பிரேக் நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எஞ்சின் இம்மொபைலைசர், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு சென்சிங் டோர் லாக் மற்றும் சைல்டு லாக் வசதிகள் கிடைக்கின்றன. பெட்ரோல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.8.16 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டீசல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.9.32 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் என்ற க்ராஸ்ஓவர் ரக காரின் டாாப் வேரியண்ட்டிலும் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. இந்த காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வழங்கப்படும் எக்ஸ்எக்ஸ் என்ற டாப் வேரியண்ட்டில் இந்த வசதி கிடைக்கிறது.

 ரூ.10 லட்சம் விலைக்குள் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் டாப் - 5 பட்ஜெட் கார்கள்!!

இந்த வேரியண்ட்டில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக இருக்கிறது. எஞ்சின் இம்மொபைலைசர், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், சைல்டு லாக் உள்ளிட்ட இதர வசதிகளும் உள்ளன. பெட்ரோல் எஸ்எக்ஸ் வேரியண்ட் ரூ.9.47 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டீசல் மாடல் ரூ.10.88 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வழங்கப்படும் விலை உயர்ந்த டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், பட்ஜெட் 10 லட்ச ரூபாயை தாண்டுகிறது. எனினும், காம்பேக்ட் எஸ்யூவியை வாங்குவோருக்கு பயன்படும் விதத்தில் இந்த பட்டியலில் சேர்த்துள்ளோம்.

 ரூ.10 லட்சம் விலைக்குள் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் டாப் - 5 பட்ஜெட் கார்கள்!!

ஏர்பேக்குகள் தவிர்த்து, ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை அளிக்கிறது. பெட்ரோல் மாடல் ரூ.12.43 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டீசல் மாடல் ரூ.12.98 லட்சம் விலையிலும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ரூ.13.26 லட்சம் விலையிலும் கிடைக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் டாப் வேரியண்ட்டிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட இருக்கின்றன. இதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கிடைக்கின்றன. இந்த காரில் அவசர காலத்தில் தொடர்பு கொள்வதற்கான விசேஷ வசதியும் உண்டு.

 ரூ.10 லட்சம் விலைக்குள் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் டாப் - 5 பட்ஜெட் கார்கள்!!

ஏர்பேக்குகள் தவிர்த்து, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார் நிலை குலைந்து கவிழ்வதை தவிர்க்கும் ஆக்டிவ் ரோல்ஓவர் பிரிவன்ஷன் நுட்பம், எஞ்சின் இம்மொபைலைசர், ஹை ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட இதர பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கிறது. இந்த கார் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வர இருக்கிறது. இது க்ராஸ்ஓவர் ரக மாடலாக வருவதுடன், ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த தேர்வாக அமையும். இந்த மாத விற்பனை பட்டியலில் இந்த காரும் உள்ளது.

 ரூ.10 லட்சம் விலைக்குள் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் டாப் - 5 பட்ஜெட் கார்கள்!!

ரூ.10 லட்சத்தை விட்டு சற்றே மேலே சென்றால் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களிலும் 6 ஏர்பேக்குகள் பாதுகாப்பு வசதி கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Top 6 cars under Rs 10 lakhs offering 6 airbags.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X