டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலின் அசத்தும் தொழில்நுட்ப அம்சங்கள்!!
டாடா நெக்ஸான் ஏஎம்டி காரில் அட்டகாசமான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. முதல்முறையாக ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் டிரைவிங் மோடுகளில் வரும் ஏஎம்டி மாடல் இதுதான். இந்த காரில் ஹில் ஸ்மார்ட்
வரும் மே மாதம் புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. ரூ.11,000 முன்பணத்துடன் இந்த காருக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில், டாடா கார்களில் பல நவீன தொழில்நுட்ப அம்சங்களும், புதுமையான விஷயங்களும் இடம்பெறுவது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த விதத்தில், இந்த புதிய நெக்ஸான் ஏஎம்டி மாடலில் இடம்பெற்றிரு்ககும் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி கார் ஹைப்பர் டிரைவ் எஸ்- எஸ்ஜி என்ற பெயரில் வருகிறது. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் என இரண்டிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். மேனுவல் மாடலுக்கு இணையான மைலேஜை இந்த ஏஎம்டி மாடலும் வழங்கும்.

மல்டி டிரைவ் ஆப்ஷன்:
முதல்முறையாக ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் மல்டி டிரைவ் ஆப்ஷனுடன் டாடா நெக்ஸான் வருகிறது. Eco, City மற்றும் Sport ஆகிய மூன்று டிரைவிங் மோடுகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதியை அளிக்கும். பெட்ரோல், டீசல் என இரண்டிலும் இந்த வசதி கொடுக்கப்பட இருக்கிறது.

இந்த காரில் க்ராவ்ல் எனப்படும் தொழில்நுட்பம் இடம்பெற்று இருக்கிறது. இதனால், ஆக்சிலரேட்டர் கொடுக்காமலேயே குறிப்பிட்ட வேகத்தில் கார் செல்லும். அதாவது, போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் செல்லும்போது பிரேக்கை மட்டும் கட்டுப்படுத்தி காரை ஓட்ட முடியும்.

ஸ்மார்ட் ஹில் அசிஸ்ட்:
ஆட்டோமேட்டிக் கார்களுக்கு அத்தியாவசியமான தொழில்நுட்ப வசதிகளில் ஒன்று ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட். இந்த காரில் ஸ்மார்ட் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதி இடம்பெற இருக்கிறது. இந்த வசதி மூலமாக சரிவான அல்லது மலைச்சாலைகளில் செல்லும்போது கார் பின்னோக்கி உருளுவதை தடுக்கும்.

இன்டெலிஜென்ட் டிரான்ஸ்மிஷன் கன்ட்ரோலர்:
இந்த தொழில்நுட்ப வசதி மூலமாக, மிக குறைவான எஞ்சின் சுழல் வேகத்தில் எஞ்சின் தானாக ஆஃப் ஆவதை தவிர்க்கும். சில வினாடிகள் ஓட்டுனர் ஆக்சிலரேட்டர் கொடுக்காவிட்டாலும், எஞ்சின் ஆஃப் ஆகாது.

அதேபோன்று, கிக் டவுன் வசதி மூலமாக கார் நகர்வதற்கு ஆக்சிலரேட்டரை ஓட்டுனர் அதிகமாக கொடுக்கு்போது, அதனை உணர்ந்து கொண்டு, தானியங்கி முறையில் கியரை குறைத்து கார் பிக்கப்பை உடனடியாக கூட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும்.

குறைவான வேகத்தில் செல்லும்போது டாப் கியருக்கு மாறுவதை தவிர்க்கும் தொழில்நுட்பமும் இந்த காரில் இருக்கிறது. இதன்மூலமாக, எஞ்சின், டிரான்ஸ்மிஷன் பாகங்களுக்கு தேவையில்லாத பளு குறைக்கப்படுவதுடன், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் பெற முடியும்.

மேனுவல் கியர்:
டாடா நெக்ஸான் ஏஎம்டி காரில் மேனுவல் டிரிப்-ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன் வசதியும் உள்ளது. இதன்மூலமாக, ஆட்டோமேட்டிக் மோடில் இயக்குவதை தவிர்த்து, மேனுவலாக கியரை மாற்றி ஓட்டும் வசதியும் அளிக்கப்படுகிறது.

பெப்ஸ் சாவி:
கைக் கடிகாரம் போல கையில் கட்டிக் கொள்வதற்கான பெப்ஸ் சாவியும் கொடுக்கப்படுகிறது. இதனால், சாவியை எளிதாக கையாள்வதற்கும், இயக்குவதற்கான வசதியை அளிக்கும்.

புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் எத்னா ஆரஞ்ச் வண்ணம் புதிதாக அறிமுகமாகிறது. இந்த கலரில் கூரை மட்டும் சில்வர் வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு இரட்டை வண்ணக் கலவையில் வருகிறது.

மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








