ஆற்றில் அடித்து செல்லப்பட்ட டூரிஸ்ட் பஸ்.. சமூக வலை தளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..
மணாலியில் உள்ள பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், டூரிஸ்ட் பஸ் ஒன்று அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
மணாலியில் உள்ள பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், டூரிஸ்ட் பஸ் ஒன்று அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று மணாலி. இங்கு பெய்து வரும் கனமழை காரணமாக, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கானது, மணாலியில் பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அங்கு மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னமும் பலர் வெள்ளத்தில் சிக்கி கொண்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முன்னதாக கனமழை காரணமாக மணாலி-லே நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

குறிப்பாக மணாலியில் பாயும் பியாஸ் ஆற்றில், இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதில், டூரிஸ்ட் பஸ் ஒன்று அடித்து செல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களிலும் தற்போது வைரலாகி வருகிறது.

பியாஸ் ஆற்றின் கரையில், டூரிஸ்ட் பஸ் ஒன்று பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, கரைகள் வலுவிழந்து காணப்பட்டன. அந்த நேரத்தில் கடுமையாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு டூரிஸ்ட் பஸ்ஸை அப்படியே அடித்து சென்று விட்டது.

அதிர்ஷ்டவசமாக பஸ்ஸில் யாரும் இல்லை. இல்லாவிட்டால் நிலைமையின் தீவிரம் இன்னும் கடுமையாகியிருக்கும். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது வால்வோ பஸ் ஆகும். சாகர் பட்டேல் என்பவர் வெளியிட்டுள்ள அந்த அதிர்ச்சிகரமான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இயற்கை பேரழிவின் உண்மையான பலம் என்ன? என்பதை இந்த வீடியோ தெளிவாக காட்டுகிறது. இதனிடையே வெள்ளப்பெருக்கின் பாதிப்பை குறைக்க தேவையான நடவடிக்கைகளை ஹிமாச்சல பிரதேச மாநில அரசு எடுத்து வருகிறது.

குளு மற்றும் கின்னானூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த கட்ட அறிவிப்பு வெளியாகும் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மணாலி-லே நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையை திறக்க குறைந்தபட்சம் இன்னும் 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். முன்னதாக பல்வேறு அரசு துறை அதிகாரிகளுடன் இணைந்து, தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன் கேரள மாநிலம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக, அங்கும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

அப்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டது. இதன் காரணமாக கேரள மாநிலம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது அதே போன்றதொரு வெள்ளப்பெருக்கு ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலும் ஏற்பட்டுள்ளது.

எனவே ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கும் பலர் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கன மழையுடன் சேர்த்து அதிக பனிப்பொழிவும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பலர் வேக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்த சூழலில், ஏத்தர் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications