டொயோட்டா அல்ஃபார்டு இந்தியா வருவதற்கு ரூட் கிளியர்... !

டொயோட்டா அல்ஃபார்டு சொகுசு எம்பிவி காரை இந்தியாவில் களமிறக்குவதற்கு புதிய வழி பிறந்துள்ளது. ஹோமோலாகேஷன் செய்யாமலேயே முதல் 2,500 யூனிட்டுகளை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யும் வாய்ப்பு கா

டொயோட்டா அல்ஃபார்டு சொகுசு மினி வேன் இந்தியாவில் களமிறக்குவதற்கு புதிய வழி பிறந்துள்ளது. எனவே, விரைவில் இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு களமிறக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டொயோட்டா அல்ஃபார்டு இந்தியா வருவதற்கு ரூட் கிளியர்... !

இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மூலமாக எம்பிவி ரக கார் மார்க்கெட்டில் டொயோட்டா கார் நிறுவனம் கோலோய்ச்சி வருகிறது. இந்த சூழலில், இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட அதிக இடவசதி மற்றும் சொகுசு அம்சங்கள் நிறைந்த அல்ஃபார்டு சொகுசு மினி வேனையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு டொயோட்டா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

டொயோட்டா அல்ஃபார்டு இந்தியா வருவதற்கு ரூட் கிளியர்... !

அல்ஃபார்டு வேனுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை ஆழம் பார்ப்பதற்காக, கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் இந்தியர்களின் பார்வைக்கு நேரடியாக வைக்கப்பட்டு இருந்தது. எனினும், விலை மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான மாறுதல்களை செய்வதற்கு முதலீடு அதிகம் பிடிக்கும் என்பதால் டொயோட்டா பரிசீலனையில் வைத்திருந்ததது.

டொயோட்டா அல்ஃபார்டு இந்தியா வருவதற்கு ரூட் கிளியர்... !

இந்த சூழலில், அண்மையில் கார், பைக்குகளுக்கான இறக்குமதி கொள்கையை மத்திய அரசு தளர்த்தியது. இதன்படி, ஹோமோலாகேஷன் எனப்படும் எந்த மாற்றங்களும் செய்யாமலேயே முதல் 2,500 யூனிட்டுகளை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யும் வாய்ப்பு கார், பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது.

டொயோட்டா அல்ஃபார்டு இந்தியா வருவதற்கு ரூட் கிளியர்... !

இதனை பயன்படுத்தி, அல்ஃபார்டு சொகுசு வேனை இந்தியாவில் களமிறக்குவதற்கு டொயோட்டா தீவிரமாக பரீசிலித்து வருகிறது. ஏற்கனவே, இந்தியர்கள் பலர் இந்த வேனை இறக்குமதி செய்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

டொயோட்டா அல்ஃபார்டு இந்தியா வருவதற்கு ரூட் கிளியர்... !

இந்த நிலையில், இந்தியாவில் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வழி வகை ஏற்பட்டுள்ளது. அல்ஃபார்டு மினி வேனில் பவர் ஸ்லைடிங் கதவுகள், ட்ரிப்பிள் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், புளூ ரே பிளேயர், சொகுசான கேப்டன் இருக்கைகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் என ஏராளமான சொகுசு வசதிகளை அளிக்கும்.

டொயோட்டா அல்ஃபார்டு இந்தியா வருவதற்கு ரூட் கிளியர்... !

இந்த கார் 8 சீட்டர் மாடலில் கிடைக்கும். இதில், அல்ஃபார்டு ராயல் லான்ச் என்ற விலை உயர்ந்த மாடலில் 4 சொகுசு இருக்கைகள் கொண்டதாக கிடைக்கிறது. இது ஓட்டுனர் பகுதியிலிருந்து பின்புற பகுதியை தனியாக இருக்கும் விதத்தில் தடுப்பு கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த காரில் 23 அங்குல கலர் டிவி, 10 அங்குல புளூ ரே பிளேயர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா அல்ஃபார்டு இந்தியா வருவதற்கு ரூட் கிளியர்... !

இந்த காரில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 297 பிஎச்பி பவரையும், 361 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களிலும் கிடைக்கும்.

டொயோட்டா அல்ஃபார்டு இந்தியா வருவதற்கு ரூட் கிளியர்... !

அமெரிக்காவில் 40,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.30 லட்சம்) விலையில் டொயோட்டா அல்ஃபார்டு வேனின் பேஸ் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரூ.40 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கலாம்.

கருணாநிதி பயன்படுத்திய கார் மாடல் தற்போது இந்தியாவிற்கு விற்பனைக்கு வந்துள்ளது. அந்த காரின் புகைப்பட ஆல்பத்தை உங்களுக்காக இங்கே வழங்கியுள்ளோம்.

Article Published On: Thursday, September 27, 2018, 13:53 [IST]
English summary
Toyota Alphard MPV might be launched in India in the near future. The government's decision to allow manufacturers to import 2500 units of any model without any homologation, is what which could lead to the India-launch of the Toyota Alphard.
மேலும்... #டொயோட்டா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+