புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான லிமோசின் ரக செடான் கார் 1967ம் ஆண்டு டொயோட்டா ஸ்தாகபரின் பிறந்தநாளை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட

By Saravana Rajan

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான லிமோசின் ரக செடான் கார் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

டொயோட்டா இன்டஸ்ட்ரீஸ் ஸ்தாபகர் சகிச்சி டொயோடாவின் 100வது பிறந்த தினத்தையொட்டி, டொயோட்டா செஞ்சூரி கார் 1967ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஜப்பானில் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வப்போது சிறிய மாறுதல்களுடன் வெளியிடப்பட்டு வந்த இந்த கார் 1997ல் முற்றிலும் புதிய மாடலாக மாற்றம் செய்யப்பட்டது.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானியரின் சிறந்த சொகுசு கார் மாடலாக விற்பனை செய்யப்படும் இந்த கார் தற்போது மீண்டும் மேம்படுத்தப்பட்டு மூன்றாம் தலைமுறை மாடலாக அங்கு வெளியிடப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

டொயோட்டா செஞ்சூரி காரின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் விசேஷமான முறையில் மனித ஆற்றலில் உருவாக்கப்படும் பீனிக்ஸ் பறவை சின்னம் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சின்னத்தை 6 வாரங்களில் கைகளால் உருவாக்கப்படுவதுதான் இதன் சிறப்பு.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

இந்த காரில் எடெர்னல் பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. 7 அடுக்குகளாக இந்த கருப்பு வர்ணம் பூசப்படுவதும் இதன் சிறப்பு. இதனால், மிகவும் உன்னதமான வர்ண பூச்சுடன் மிளிர்கிறது இந்த கார்.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

புதிய டொயோட்டா செஞ்சூரி காரின் வீல் பேஸ் 65 மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது 3,090 மிமீ வீல் பேஸ் கொண்ட இந்த லிமோசின் ரக கார் பயணிகளுக்கு மிக தாராளமான இடவசதியையும், சவுகரியத்தையும் வழங்கும்.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் Extended Wheelbase மாடலைவிட இந்த கார் 110மிமீ கூடுதல் நீளம் கொண்டது. புதிய டொயோட்டா செஞ்சூரி கார் 5,335 மிமீ நீளமும், 1,930 மிமீ அகலமும், 1,505 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

புதிய டொயோட்டா செஞ்சூரி காரில் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 375 பிஎச்பி பவரையும், 510 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் எஞ்சினும், மின்மோட்டாரும் இணைந்து 425 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கிறது. லிட்டருக்கு 13.6 கிமீ என்ற அளவில் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

புதிய டொயோட்டா செஞ்சூரி காரின் உட்புறத்தில் கருப்பு வண்ண தீம் பயன்படுத்தப்படுகிறது. மரத் தகடுகள் அலங்கார வேலைப்பாடுகள் கண்ணை கவர்கின்றன. விசேஷமான ஃபேப்ரிக் உட்புற கூரையில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

லிமோசின் கார்களில் பின் இருக்கை பயணிகளுக்கான வசதிகள் மிக முக்கியம். அதன்படி, 11.6 அங்குல டிவி திரை, 20 ஸ்பீக்கர்கள் மற்றும் 12 சேனல் ஆடியோ ஆம்பிளிஃபயர் கொண்ட மியூசிக் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

பின் இருக்கைகளுக்கு நடுவில் கொடுக்கப்பட்டு இருக்கும் 7 அங்குல தொடுதிரையின் மூலமாக ஆடியோ சிஸ்டத்தை கடுப்படுத்தும் வசதி, இருக்கைகளில் மசாஜ் வசதியை இயக்குவது, ஏசியை கட்டுப்படுத்துவது மற்றும் ஜன்னல் மறைப்புகளை ஏற்றி, இறக்குவதற்கான கட்டுப்பாட்டு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

புதிய டொயோட்டா செஞ்சூரி காரில் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், பார்க்கிங் அசிஸ்ட், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம், தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி, ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல், அடாப்டிவ் ஹை பீம் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

இந்த பாதுகாப்பு அம்சங்கள் தவிர்த்து, ஹெல்ப்நெட் மற்றும் டி-கால் நெட் என்ற இரண்டு அவசர கால பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஏர்பேக்குகள் விரிவடையும்போது முன்னர் கண்ட இரண்டு அவசர கால தொழில்நுட்பங்களும் அருகிலுள்ள அவசர மையங்கள் மற்றும் உறவினர்களுக்கு தானியங்கி முறையில் தகவல் அனுப்பிவிடும்.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

இதில், டி-கால் நெட் வசதியானது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு நேரடியாக தகவல் தந்து உடனடி உதவிக்கு வழி செய்யும். இருக்கும் இடத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி இருந்தாலும், தகவல் அனுப்பி உடனடியாக உதவி கோரும் வசதியை அளிக்கிறது.

புதிய டொயோட்டா செஞ்சூரி லிமோசின் கார் ஜப்பானில் அறிமுகம்!

புதிய டொயோட்டா செஞ்சூரி கார் ஜப்பானில் உள்ள அனைத்து டொயோட்டா டீலர்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். மாதத்திற்கு 50 யூனிட்டுகள் என்ற அளவில் இந்த கார் விற்பனையாகும் என்று டொயோட்டா கருதுகிறது. இந்திய மதிப்பில் ரூ.1.22 கோடி விலையில் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, June 29, 2018, 10:42 [IST]
English summary
Toyota has unveiled its new Century in Japan. The Toyota Century has been built to celebrate the 100th birthday of Sakichi Toyoda, Founder Toyota Group.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+