விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!

கார் ஷோரூம் என்றால் நல்ல அழகான கார் எந்த வித குறையும் இல்லாமல் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம்.

By Balasubramanian

புதிய காரை விற்கும் ஷோரூமில் விபத்தில் சிக்கிய காரை காட்சிக்கு வைக்கப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? இது உண்மையில் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் விபத்தில் சிக்கிய காரை பார்த்து புதிய காரை வாங்குகிறார்களாம்.

விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!

கார் ஷோரூம் என்றால் நல்ல அழகான கார் எந்த வித குறையும் இல்லாமல் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களை கவர எல்லா டீலர்களும் இந்த யுக்தியை கையாள்கின்றனர்.

விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!

இவ்வாறாக காரை காட்சிக்கு வைப்பது மூலம் மக்கள் தாங்கள் வாங்கும் காரை வாங்கும் முன்னே அதன் லுக், வசிதிகள், அம்சங்கள் என எல்லாவற்றையில் நேரில் பார்த்து வாங்க முடியும். இதன் மூலம் மக்கள் மனதை காருடன் நெருக்கமாக உணர வைக்க முடியும்.

விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!

இவ்வாறாக நிறுத்தப்படும் காரில் கலர் லுக் என அனைத்தையும் கார் டீலர் கவனமாக பார்த்து அதை தேர்ந்தெடுப்பார். அந்த கார் பளபளக்கும் வகையில் சிறு தூசி கூட இல்லாமல் இருக்கும். நாம் அந்த காரை தொட்டால் அதில் நம் கைரேகை பதியும் அளவிற்கு மிக சுத்தமாக இருக்கும். இந்த மாதிரியான விற்பனை யுக்தியை உலகம் முழுவதும் நாம் பார்த்திருப்போம்.

விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!

ஆனால் அமெரிக்காவில் இதற்கு நேர் மாறாக விபத்தில் சிக்கிய டொயோட்டா கேம்ரி காரை வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைத்திருக்கிறார். கார் டீலர் ஒருவர். அவர் காட்சிக்கு வைத்துள்ள காரின் முன்புறமும் பின்புறம் விபத்தில் சிக்கி கடுமையாக சேதமாகியுள்ளது. இதை பத்திரமாக எடுத்து வந்து வாடிக்கையாளரின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!

டொயோட்டா நிறுவனத்தின் இந்த காரை அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் விமானத்தில் உள்ள அந்நிறுவனத்தின் வாடிக்கையாளரை பிக்கப் செய்ய எடுத்து சென்றுள்ளார். அப்பொழுது ஒரு சிக்னலில் இவர் காத்திருக்கும் போது இவருக்கு பின்னால் வந்த சிறிய ரக டிரக் ஒன்று இந்த கார் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் இந்த கார் எதிரே நின்று கொண்டிருந்த பெரிய டிரக் மீது மோதியது.

விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!

இதில் காரின் முன்பக்கமும், பின்பக்கமும் பலத்த சேதம் அடைந்தது. ஆனால் காரில் உள்ளே இருந்தவர்களுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. மேலும் இந்த மோசமான விபத்திற்கு பின்பும் காரின் கதவுகள் எளிதாக திறக்கும் வகையில் இருந்தது. இதனால் காரில் இருந்து சுலமாக வெளியே வந்துவிட்டனர்.

விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!

இந்த விபத்து குறித்து முதலில் கேள்விபட்ட டீலர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் காரில் பயணித்தவர்களை நேரில் பார்க்க சென்றார். அவர்கள் எந்த வித காயமும் இன்றி எப்பவும் போல் இருந்தனர். ஆனால் காரின் முன் பாகமும் பின் பாகமும் பலத்த சேதமடைந்திருந்தது. இதை பார்த்தது டீலர் மிகவும் ஆச்சரியப்பட்டார். அப்பொழுது அவருக்கு புது விதமான யோசனை தோன்றியது.

விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!

உடனடியா அந்த காரை சரி செய்யாமல் நேராக அதை ஷோரூமிற்கு பத்திரமாக எடுத்து சென்று காட்சி வைத்து விட்டார். தற்போது அங்கு செல்லும் வாடிக்கையாளர்களிடம் இந்த காரின் பில்ட் தரம் பற்றி புரிய வைக்க இந்த காரை காட்சி படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதன் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் மீது பெரும் நம்பிக்கை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!

வாடிக்கையாளர்கள் இந்த காரை தொட்டுபார்க்க அனுமதியில்லை. விபத்தில் சிக்கிய காரை தொட்டு பார்த்தால் அல்லது பயன்படுத்தினால் பெரும் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த காரின் நிலையை பார்த்தாலே வாடிக்கையாளர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்படும் என அந்நிறுவனம் கருதுகிறது.

விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!

அந்நிறுவனம் கருதியதை போல இந்த முயற்சி பலன் அளித்துள்ளதாகவும், பலருக்கு இந்த காரை பார்த்து விட்டு நம்பிக்கை வந்து புதிய காரை வாங்கியதாகவும், இதனால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் காரை சென்டிமென்டாக பார்க்கும் போது வெளி நாடுகளில் கார்களை வெறும் பயணிக்கும் வாகனமாக மட்டுமே பார்க்கின்றனர்.

விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!

இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிது கார் வாங்கும் பலர் விபத்திற்குள்ளான காரை பாரத்த பின்பு அதே போல புதிய காரை வாங்குவார்களா என்பது கேள்வி குறிதான். ஒரு சில பெரும் நகரங்களில் உள்ள டீலர்கள் இதை முயற்சிக்கலாம். அனால் அது நெகட்டிவ்வாக பலன் அளிக்காமல் போனால் சரிதான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Article Published On: Thursday, May 24, 2018, 15:16 [IST]
English summary
Toyota dealer proudly displays crashed Camry in showroom to highlight built quality. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+