டொயோட்டா லிவா காரில் புதிய இரட்டை வண்ணக் கலவை அறிமுகம்: விபரம்!
டொயோட்டா லிவா காரில் சிவப்பு- கருப்பு மற்றும் வெள்ளை- கருப்பு ஆகிய இரட்டை வண்ணங்களில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஆரஞ்ச்- கருப்பு அடங்கிய இரட்டை வண்ணக் கலவையிலும் இப்போது அறிமுகம்
டொயோட்டா லிவா காரில் புதிய இரட்டை வண்ணக் கலவை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா லிவா காரில் சிவப்பு- கருப்பு மற்றும் வெள்ளை- கருப்பு ஆகிய இரட்டை வண்ணங்களில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஆரஞ்ச்- கருப்பு அடங்கிய இரட்டை வண்ணக் கலவையிலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா லிவா காரின் வி, விஎக்ஸ், விடி மற்றும் விடிஎக்ஸ் ஆகிய பெட்ரோல், டீசல் வேரியண்ட்டுகளில் இந்த இரட்டை வண்ணக் கலவை தேர்வுக்கு கிடைக்கிறது. டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லை.

கருப்பு வண்ண கூரை, ரியர் ஸ்பாய்லர், முன்புற க்ரில் அமைப்பு மற்றும் ரியர் வியூ மிரர்கள் ஆகியவை கருப்பு வண்ணத்திலும், ஆரஞ்ச் வண்ண பாடி கலரிலும் புதிய டொயோட்டா லிவா கார் வந்துள்ளது. புதிய இரட்டை வண்ண அலாய் சக்கரங்கள் மற்றும் பியானோ பிளாக் சென்டர் கன்சோல் ஆகியவையும் இதன் முக்கிய அம்சம். இது பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

டொயோட்டா லிவா காரின் இரட்டை வண்ணக் கலவை கொண்ட வேரியண்ட்டுகளில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. 2 டின் மியூசிக் சிஸ்டம், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், ஓட்டுனர் இருக்கை உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதிகள் உள்ளன. விஎக்ஸ் வேரியண்ட்டில் கூடுதலாக ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், பனி விளக்குகள், பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டொயோட்டா லிவா கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 79 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா லிவா காரின் ஆரஞ்ச்- கருப்பு வண்ணக் கலவை மாடலானது ஏற்கனவே விற்பனையில் உள்ள டியூவல் டோன் வண்ணக் கலவை மாடல்களின் விலையிலேயே வந்துள்ளது. பெட்ரோல் மாடல் ரூ.5.85 லட்சம் முதலும், டீசல் டியூவல் டோன் மாடல் ரூ.7.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சந்தைப் போட்டி வலுத்துள்ள இவ்வேளையில், இந்த டியூவல் டோன் லிவா கார் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்பதுடன், தனித்துவமான தேர்வாகவும் அமையும் என்று கருதலாம்.


Click it and Unblock the Notifications








