டொயோட்டா லிவா காரின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!!
டொயோட்டா லிவா காரின் லிமிடேட் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டொயோட்டா லிவா லிமிடேட் எடிசன் மாடல் கருப்பு- வெள்ளை ஆகிய இரட்டை வண்ணத்தில் வந்துள்ளது.
டொயோட்டா லிவா காரின் லிமிடேட் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பண்டிகை காலத்தையொட்டி, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், இன்று டொயோட்டா லிவா காரின் சிறப்பு பதிப்பு மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா லிவா பெட்ரோல் காரின் விஎக்ஸ் வேரியண்ட்டிலும், விஎக்ஸ்டி என்ற டீசல் வேரியண்ட்டில் மட்டுமே இந்த லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கிடைக்கும். பெட்ரோல் மாடல் ரூ.6.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.7.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய டொயோட்டா லிவா லிமிடேட் எடிசன் மாடல் கருப்பு மற்றும் வெள்ளை கொண்ட இரட்டை வண்ணக்கலவையில் வந்துள்ளது. தவிரவும், பல இடங்களில் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு கவர்ச்சியாக இருக்கிறது. முக்கியமாக கருப்பு- சிவப்பு க்ரில் அமைப்பு, பனி விளக்கு அறை, சிவப்பு வண்ண கைப்பிடிகள், பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், பாடி டீக்கெல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

வெளிப்புறத்தில் மட்டுமல்லாமல், கருப்பு, சிவப்பு வண்ண அலங்காரங்கள் உட்புறத்திலும் கொடுக்கப்பட்டு இருப்பது தனித்துவமாக இருக்கிறது. கருப்பு வண்ண இன்டீரியரில் சில பாகங்களில் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. கியர் நாப் மற்றும் ஏசி வென்ட்டுகளில் சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருப்பது வசீகரமாக உள்ளது.

புதிய டொயோட்டா லிவா காரில் 6.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய டொயோட்டா லிவா லிமிடேட் எடிசன் மாடலில் இரண்டு எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், லோடு லிமிட்டர் மற்றும் ப்ரீ டென்ஷனர் வசதியுடன் கூடிய சீட் பெல்ட்டுகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட்டுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

புதிய டொயோட்டா லிவா லிமிடேட் எடிசன் மாடலில் எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றம் இல்லை. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் 80 பிஎச்பி பவரையும்,104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பண்டிகை காலத்தில் ஹேட்ச்பேக் கார் வாங்க இருப்பவர்களை வசீகரிக்கும் அம்சங்களுடன் டொயோட்டா லிவா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








