ரூ. 7.84 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

இந்தியாவில் பிரபலமாக உள்ள எட்டியோஸ் காரில் டொயோட்டா நிறுவனம் பிளாட்டினம் என்ற புதிய எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. வி.எக்ஸ் டிரிமில் வெளிவரும் இந்த காரின் பெட்ரோல் வேரியன்ட் எக்ஸ்-ஷோரூம் டெல்லி மதிப்பில் ரூ. 7.84 லட்சம் மற்றும் டீசல் மாடல் ரூ. 8.94 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..!

பிளாட்டினம் என்ற பெயருக்கு ஏற்றவாறே, இந்த புதிய எட்டியோஸ் மாடலில் பல ப்ரீமியம் தர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் கட்டமைப்பு முழுக்க தற்போதைய மாடலுக்கு எதிர்புறமாக உள்ளது.

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..!

புதிய வண்ணப்பூச்சை பெற்றுள்ள இந்த காரில் டூயல்-டோன் இருக்கை, உயர் ரகம் கொண்ட லெதர் வேலைபாடுகள் மற்றும் இன்ஃபொடெயின்மென்ட் தேவைக்கு ஏற்ற கூடுதல் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..!

புதிய பான்டம் பிரவுன் நிறத்தில் உள்ள எட்டியோஸ் பிளாட்டினம் எடிசன் கார், பியர்ல் வைட் என்கிற சராசரியான நிறத்திலும் கிடைக்கிறது.

பெயர் மற்றும் கட்டமைப்பில் தான் புதிய மாற்றங்களே அன்றி, காரின் வெளிப்புறத்தோற்றம் மற்றும் உட்புறங்கள் ஆகியவை பழைய வடிவமைப்பை பெற்றுள்ளன.

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..!

டொயோட்டா நிறுவனம் எட்டியோஸ் பிளாட்டினம் எடிசனை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரின் வெளிப்புறத்திற்கு ஏற்றவாறான உள்கட்டமைப்பில் டூயல்ட்-டோன் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் புதிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..!

முக்கியமாக டாஷ் போர்டில் இடம்பெற்றுள்ள 6.8 இஞ்ச் அளவிலான இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் தான் டொயோட்டோ எட்டியோஸ் பிளாட்டினம் எடிசனில் கவனத்தை ஈர்க்கிறது.

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..!

இந்த புதிய இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆக்ஸ், யுஎஸ்பி, ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, குரல் கட்டளை ஏற்பு மற்றும் ரிமோட் கண்ட்ரோல் இயக்கம் போன்ற அம்சங்கள் உள்ளன. ஆனால் இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதி இடம்பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..!

எட்டியோஸ் பிளாட்டினம் எடிசனில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. பெட்ரோல் மாடல் மூலம் 89 பிஎச்பி பவர் மற்றும் 132 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..!

தொடர்ந்து எட்டியோஸ் பிளாட்டினம் காரின் டீசல் மாடல் மூலம் 67 பிஎச்பி பவர் மற்றும் 170 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். எஞ்சினின் சரியான செயல்பாட்டிற்காக அது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..!

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காரில் பல தோற்றப்பொலிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதை தவிர இதில் தொடுதிரை அம்சம் பெற்ற இனஃபொடெயின்மென்ட் சிஸ்டம் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது.

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..!

இதை தவிர வேறு எந்த புதிய அம்சங்களும் இந்த காரில் இடம்பெறவில்லை. எட்டியோஸ் பிளாட்டினம் காரை தொடர்ந்து இதே ஆண்டில் யாரீஸ் செடான் காரை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Read in Tamil: Toyota Etios Platinum Limited Edition Launched In India; Prices Start At Rs 7.84 Lakh. Click for Details...
Story first published: Thursday, March 1, 2018, 15:52 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark