டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் விலை அதிகரிப்பு!

விலை உயர்த்தப்பட்ட இன்னோவா, இன்னோவா ஸ்போர்ட் மற்றும் கிறிஸ்டா எமெர்ஜெண்சி பிரேக் சிக்னல் , பின்பக்க சக்திமிக்க விளக்குகள் ,வாகனம் திருட்டுபோகாமல் இருக்க மேம்பட்ட அலாரத் தொழில்நுட்பங்கள் , அல்ட்ராசோனி

டொயோட்டா தனது விற்பனையில் சரித்திரம் படைத்த வாகனங்களான இன்னோவா கிறிஸ்டா மற்றும் பார்ச்சுனர் விலை உயர்கிறது என்று அதிகாரப்பூர்வகமா அறிவித்துள்ளது. இதன் காரணம் என்னவென்று வினவும் பொழுது அவர்களின் பதில் இப்பொழுது இறக்கப்படும் வாகனமானது தரத்திலும் தொழில்நுட்பத்திலும் மேம்பட்டு இருக்கின்றது என்பதே.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் பார்ச்சூனர் விலை உயர்கிறது!

இந்த விலை உயர்த்தப்பட்ட இன்னோவா, இன்னோவா ஸ்போர்ட் மற்றும் கிறிஸ்டா எமெர்ஜெண்சி பிரேக் சிக்னல் , பின்பக்க சக்திமிக்க விளக்குகள் ,வாகனம் திருட்டுபோகாமல் இருக்க மேம்பட்ட அலாரத் தொழில்நுட்பங்கள் , அல்ட்ராசோனிக் சென்சார் போன்றவற்றால் மெருகேற்றப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் பார்ச்சூனர் விலை உயர்கிறது!

மேலும், இன்னோவா மற்றும் இன்னோவா ஸ்போர்ட் டச் தொழில்நுட்பத்தினால் ஆன தகவல் அறிவிப்பை செலுத்த வல்லது. ஸ்டேரிங்-இல் பொருத்தப்பட்டிருக்கும் அதீத கட்டுப்பாட்டு கருவிகள் ஓட்டுநர் அங்கும் இங்கும் அசையாமல் வாகனத்தை இருந்த இடத்திலேயே இயக்க வல்லதாய் அமைகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் பார்ச்சூனர் விலை உயர்கிறது!

மேலும் பட்டனை தட்டினால் திறந்து மூடும் கண்ணாடிகள் வியப்பில் ஆழ்த்தும். பயணிகளின் பாதையை விளக்கும் தொழில்நுட்பத்தில் PUDDLE விளக்குகள் இறங்கும் போது இன்னும் சௌகரியத்தை கொடுக்கின்றன. சென்சிடிவ் டோர் லாக்குகள் பாதுகாப்பின் உச்சம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் பார்ச்சூனர் விலை உயர்கிறது!

மேற்கூறியவாறு டொயோட்டா பார்ச்சுனர் வாகனமும் சில மேம்பட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதில் பயணியின் இருக்கைகள் எலக்ட்ரானிக் முறையில் கட்டுபடுத்தப்படுகின்றன. மேலும் இவற்றில் ஆன்டி தெப்ட் அலாரம், எமெர்ஜெண்சி பிரேக் சிக்னல் , அல்ட்ராசோனிக் சென்சார் , பின்பக்க சக்திவாய்ந்த விளக்குகள், உள்பக்க எலக்ட்ரானிக் கண்ணாடிகள் போன்றவை இன்னோவா மற்றும் இன்னோவா ஸ்போர்ட்-ஐ ஒத்து இருக்கும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் பார்ச்சூனர் விலை உயர்கிறது!

தற்போது குறிப்பிடப்பட்ட சிறப்பம்சங்கள் தவிர வேறு ஏதும் மாற்றங்கள் பெரிதாக அந்த மூன்று வாகனத்திலும் இல்லை என்பது முக்கியம். தொழில்நுட்ப மேம்பாட்டின் காரணமாகவே இதன் விலை உயந்துள்ளது ஒருபுறம் இருந்தாலும், அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட மூன்று வருட காப்பீடு திட்டமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் பார்ச்சூனர் விலை உயர்கிறது!

இந்த இன்னோவா கிறிஸ்டா வாகனமானது ஆரம்பவிலையாக 14 .65 லட்சமாக சந்தையில் கிடைக்கிறது. இதன் முந்தைய விலை 14 .35 என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அதிகபட்ச விலை 22 லட்சத்திலும் கிடைக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் பார்ச்சூனர் விலை உயர்கிறது!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட் வாகனமானது ஆரம்பவிலையாக 18.59லட்சத்திலும் அதிகபட்ச விலையாக 23.06 லட்சத்திலும் கிடைக்கிறது . அதேபோன்று டொயோட்டா பார்ச்சுனரும் விலை உயர்ந்து 27.27 லட்சமாக உள்ளது. இதன் முந்தைய விலை 26.69 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் பார்ச்சூனர் விலை உயர்கிறது!

டொயோட்டா நிறுவனம் விலை உயர்வுக்கு ஏற்றல் போல் வாகனத்தில் அதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளதால் வாடிக்கையாளர்கள் முகம் சுழிக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம். இதன் பாதுகாப்பு தன்மையும் பல மடங்கு கூடியுள்ளதால் கண்டிப்பாக விற்பனையில் சுணக்கம் இருக்காது. மாருதி எர்டிகா மஹிந்திரா மரசோ போன்ற வாகனங்களுடன் இது போட்டி போட்டு முந்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இதன் தரம் குறைக்கப்பட வாய்ப்பே இல்லை. டொயோட்டா பார்ச்சுனர் வாகனம் போர்டு எண்டியவர் போன்றே நல்லதோர் பெயரினை நிறுவனத்திற்கு இட்டு செல்லும் என்பது எதிர்பார்ப்பு.

{document1}

Article Published On: Monday, September 3, 2018, 9:52 [IST]
English summary
Toyota has updated their best-selling products, the Innova Crysta, Innova Crysta Touring Sport and the Fortuner offering for the Indian market. The company has updated the cars with additional features, including both safety and tech.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+