TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
இனி 80 கி.மீ. வேகத்திற்கு மேல் டாக்ஸியில் செல்ல முடியாது... விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கேப்ஸ் பயன்பாட்டிற்கான கார்களில் தயாரிப்பின் போதே அந்த காரின் அதிகபட்ச வேகத்தை 80 கி.மீ. என கட்டுப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவியாக இருக்கும். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம் வாருங்கள்.
இந்தியாவில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெருக்கடிக்கு ஏற்ப, சாலை விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சமீப காலமாக கட்டமைக்கப்படும் சாலைகளின் தரம் உயர்வாக இருக்கிறது. இதனால் அதிக வேகத்தில் வாகனங்கள் பயணிக்கின்றன.
இவ்வாறு அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனங்களால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை, அரசு மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, குறிப்பிட்ட வாகனங்களில், ஸ்பீடு கவர்னர்கள் கொண்டு, அதிகபட்ச வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக பள்ளி வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களில் எல்லாம் ஸ்பீடு கவர்னரை அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாகனங்கள் வேகமாக செல்வது கட்டுப்படுத்தப்படும். அத்துடன் விபத்துக்களையும் குறைக்கலாம் என்ற எண்ணத்தில் அரசு இதை செய்து வருகிறது.
இது மட்டும் இல்லாமல் டாக்ஸிகளுக்கும் வேக கட்டுப்பாட்டை சில மாநில அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன. அந்த வகையில், டாக்ஸிகள் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்திற்கு அதிகமாக செல்ல முடியாமல் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை ஒவ்வொரு மாநிலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனம் ஸ்பீடு லிமிட் உடன் வாகனங்களை தயாரித்துள்ளது. அதாவது டொயோட்டா நிறுவனம் செய்யும் டிராவல்ஸ் போர்டு கார்களில், 80 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்ல இயலாது. இதனால் அந்த கார்களை வாங்குபவர்கள் தனியாக ஸ்பீடு கவர்னர்களை மாட்ட வேண்டிய அவசியம் இல்லை.
MOST READ: பெட்ரோல் விவகாரம் - மோடிக்கு பாடம் புகட்டிய தமிழக இளைஞர்கள்
இது போல ஏற்கனவே மாருதி சுஸூகி நிறுவனமும் இந்த ஸ்பீடு கண்ட்ரோலுடன் மாருதி டிசையர் டூர் காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது டொயோட்டா நிறுவனமும் இதை பயன்படுத்தி வருகிறது.
பாதுகாப்பான வாகனங்களை விற்பனை செய்வதில், உலக அளவில் இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது. அதற்காக பிஎன்விஎஸ்ஏபி என்ற சோதனை, குறிப்பிட்ட மாடல்கள் வெளியாவதற்கு முன் செய்யப்படுகிறது.
இந்த சோதனையில் தேர்ச்சி பெற்ற கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும். இந்த சோதனையில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும், இந்தியா ஆறாவது இடத்திலும் உள்ளன.
அதே நேரத்தில் இந்தியாவில் ஏற்படும் விபத்துக்களின் காரணமாக, ஒரு ஆண்டிற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை காட்டிலும், 3-4 மடங்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாவின் பார்வையில்:
மற்ற நாடுகளை போல காரின் தரம் சோதிக்கப்பட்டாலும், இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை, அரசால் பெரும் அளவிற்கு குறைக்க முடியவில்லை. ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளே, இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இங்கு கார் ஓட்டவே தெரியாத பலர், காருக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறார்கள். இதை சரி செய்ய அரசு பெரும் முயற்சியை எடுக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் மட்டுமே, இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். அதற்கு இடையில் இது போன்ற செயல்களும் கட்டாயம் தேவைப்படுகிறது. அரசு இதை செய்து வருவது வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்றே.
MOST READ: பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது..