டெயோட்டா மற்றும் சுசூகி இணைந்து எலெக்ட்ரிக் கார் தயாரிக்க ரெடி..! காரை வாங்க நீங்க ரெடியா?
டெயோட்டா மற்றும் சுசூகி நிறுவனம் இணைந்து கார் தயாரிப்பு மற்றும் தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
டெயோட்டா மற்றும் சுசூகி நிறுவனம் இணைந்து கார் தயாரிப்பு மற்றும் தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் படி இரு நிறுவனங்களுக்கு இந்தியாவிற்காக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க தயாராகி வருகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தின் படி சுசூகி நிறுவனம் சிறிய ரக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்யுதுள்ளது. இதற்காக டென்சோ கார்பரேஷன் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களும் புரிந்துண்ணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது.

அதன் படி டொயோட்டா நிறுவனம் சுசூகி நிறுவனம் வடிவமைத்த கார் மாடல்களை தயாரிக்க விருக்கிறது. இந்த கார்கள் இந்தியாவில் டொயாட்டோ மற்றும் சுசூகி ஆகிய நிறுவனங்களால் இந்தியாவில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.

மேலும் இந்த கார்கள் ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு பிப். மாதம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து முடிவு செய்தனர். தற்போது இரு நிறுவனங்களும் தயாரிக்கும் கார்களுக்கான பாகங்களை ஒரு இடத்தில் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

அதாவது இரு நிறுவனங்களும் வேறு வேறு கார்களை தயாரித்தாலும் அதில் உள்ள பெரும்பாலான அடிப்படை பாகங்கள் ஒன்றாக தான் இருக்கும். அதனால் அந்த அடிப்படை பாகங்களை தயாரிக்கும் வேலையை இருந்த இரு நிறுவனங்களும் சேர்ந்தே செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் பாகங்கள் மொத்தமாக தயார் செய்யப்படும். இதை இரு நிறுவனங்களும் பிரித்து எடுத்து கொள்ளுவார்கள். தயாரிப்பிற்கான, செலவு, மூலப்பொருட்களும் இரு நிறுவங்களும் சேர்ந்து வழங்கும்.

இதனால் கார் தயாரிப்பு செலவு பெரும் அளவு குறையும் என இருநிறுவன அதிகாரிகளும் கருதுகின்றனர். இதனால் குறைந்த விலை கார்களை தயாரிக்க முடியும் என அந்நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் மூலம் இருநிறுவனங்களும், எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளன. இந்திய அரசு எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க ஊக்கப்படுத்துவதாலும், வரும் 2020ம் ஆண்டு முதல் இந்தியா நேரடியாக பிஎஸ் 6 ரக மாசுகட்டுப்பாட்டிற்குள் செல்வதாலும், அந்த கட்டுப்பாட்டிற்குள் இந்தியர்கள் விரும்பும் காரை தயாரிப்பதை விட எலெக்ட்ரிக் கார்கள் குறைந்த விலையில் தயாரித்து இந்தியர்களை கவர முடியும் என்று அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








